வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஒரு கூடை கவிதை

கூடை நிறைய கவிதையை அள்ளிக் கொண்டு தெருவில் நடக்கலானேன்.

கவிதை பூக்களின் வாசனை தெருவெங்கும் என்னை கொண்டா...
கண் விழித்துப் பார்த்தால் யாருமற்ற தெருவில் வாசனையற்ற பூக்களை தாங்கி தனியே நின்றிருக்க

யாரேனும் முகர்ந்து விட மாட்டார்களா என மெதுவாக நடக்கலானேன், தீண்டுவார் யாருமில்லை.

வாசித்து வாசித்து எளிமைப்படுத்தப்பட்ட கவிதை பூக்கள் இப்போது வாடிவிட, குப்பையில் கொட்ட வேண்டியதாகிவிட்டது.

தெய்வங்களுக்கு படைக்க எண்ணுகையில் விக்கிரகங்களின் வெப்பத்தால் பூக்கள் துவண்டுவிட...

மனப்பிறழ்வு மனிதன் தன்னடக்கத்தை போல், புலம்பித் திரியும் கவிதை

ஒட்டடை

புது பொலிவாய் புதிய பெயரில்...

வணக்கம் நண்பர்களே எனது
பழைய வலைபூ
புதிய பெயரியல்...

எனது பழைய...
http://ottadai.blogspot.com/

புதிதாய்....
http://ottadaibala.blogspot.com















வெள்ளி, 21 அக்டோபர், 2022

நடைபாதை நாழிகை

பள்ளம் படுகுழியில் 
மீந்துபோன மழைநீர், 
கண்ணாடியாக வானத்தை 
ஒளிப்படம் எடுத்துக்கிறது.

யாசிக்கிறேன்

குறிப்புகளற்ற வெளியில் 
வார்த்தை கொட்டி கிடக்கிறது. 

ஒரு குறிப்பைக் கொண்டு 
அதை அழகுற அடுக்கி புலங்காயிதம் அடைந்து 
அயர்ந்து பின் விழித்த போது 
அவை அர்த்தமற்றவையாக.
பொழிவிழந்து மங்கிப்போன குறிப்பாய் 
அங்குமிங்கும் அல்லாடி கொண்டிருந்தது.

தாயின் மன சிதைவு குழந்தையாக  
என் கவிதை கூடவே வாழ்ந்து வந்தது 
அந்த தாயை போல் 
கவிதையை தூக்கி சுமக்கிறேன். 
அடுத்தவரின் கவிதைகள் என்னை பார்த்து பரிதாபப்பட்டு 
இந்த குழந்தை கொன்று விடலாம் என்ற ரீதியில் புலம்ப

பரிதாபப்பட்டு கடந்து போகும் நீங்கள் 
என் கவிதையையும் சகித்தருள வேண்டும்.

புதுசு

கிழட்டு பருவத்தில் 
காதலை காதலித்து கொண்டு இருக்கும் 
நான் 
என்னைப் பிரிந்த அவளின் 
கடைசி சந்திப்பின் இளமையை உரு போட்டு...

அங்கே அவளின் மகளுக்கு திருமணமாம் 
அவளுக்கு தெரிந்திருந்தது 
தன் இளமையை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று
அவள் கணவன் எந்த பிறக்கையும் இல்லாமல் கடந்து போகிறான். 

ஒத்த சிரிப்பை உதிர்த்து விட்டு கடந்து விட்டாள்
நான் இப்போதும் நைந்து நிராதரவாய் விடப்படுகிறேன்.

பிடிவாத காதல் ஏதோ ஒரு 
மூலையில் வீழும் போது 
பிதற்றல் காதலாகி பின்நாளில் 
கந்தலாக நைந்நது தொங்கும்...

காதல் குறித்தான பழைய 
போர்வையை போர்த்திக் கொள்வதால் 
இளமை திருடப்படுகிறது 
போர்வையை விலக்கி 
புதுத் தெம்பு பெறுங்கள்

தற்குறி

தனிமையின் அவலட்சணம்
குறுக்கு சந்தின் வழியே  
தனிமை ஒன்று தலைகுனிந்து நடந்து சென்றது
தனது பாக்கெட்டில் 
சரியான எண்ணிக்கையில் உணவுக்கான பணம்
தன் பணங்கள் சரியான விகிதத்தில் 
எண்ணி எண்ணி செலவு பயனை அடைகிறது

ஒரு பிரம்மச்சாரியின் செலவு குறிப்பு 
தன் சார்ந்தது பெரும்பகுதியாக இருக்கும்
அந்தப் பணங்கள் பொது புத்திக்கு 
செலவு செய்யப்படுவதே இல்லை. 
ஏனெனில் 
தற்குறி தனிமை பொதுபுத்தி நம்மை 
பலிவாங்கி விட்டதாகவே கரு கொள்கிறது
ஆனால் 
பாருங்க உணவு கடையில் 
சாம்பார் பாக்கெட் ஓசி வாங்கி விடும்
தற்குறிகளின் சிக்கனம் 
நாளடைவில் கரிமித்தனமாக மாறி 
பிசினாரித்தனமாக மரணம் அடைகிறது

ஒரு தற்கூறியின் இலக்கு 
இலக்கற்ற பயணமாகவே இருக்கிறது

தனிமையின் நண்பர்கள் 
சுயநலம் 
தற்குறி 
கொஞ்சம் சூது என 
நட்பை சுருக்கிக் கொள்ளுகிறது

பாதிக்கப்படும் நிகழ்வு ஒன்றிற்கு 
வார்த்தைகளையோ கண்ணீரையோ சிந்தும் 
இந்த தனிமை ஒருபோதும் கையில் இருந்து எதையும் தந்து விடாது

குப்பைகளை அடுக்கிக் கொண்டிருக்கும் 
தற்குறி தனிமை குப்பை என்றே உணராத பொக்கிஷங்கள்

தற்குறிகள் வார்த்தைகளை வீணடிப்பதில்லை 
ஆனால் அடைய முடியாத இலக்குகளை 
கற்பனை கோட்டையாக வடிவமைக்கிறது

எது குறித்தும் கவலைப்படாத இந்த தனிமை 
வயிற்றை நிரப்ப சுவையை மறந்து விடும்
தண்ணீர் நிரப்பப்படாத 
1000 பாட்டில் கையிருப்பில் இருந்த போதும் 
ஆயிரத்தி ஓராவது பாட்டில் தண்ணீருடன்...

தற்குரியின் சோம்பேறித்தனம் 
ஆடைகள் பல கிடைத்த போதும் 
துவைக்க வேண்டும் என்பதற்காக 
இரண்டு செட் மட்டும்...

தனிமை பெரிய 
இடங்களை அடைத்துக் கொள்வதில்லை 
சிறிய இடங்களில் சுக துக்கங்களை 
பரிமாறிக் கொள்கிறது

தனிமை எதிராளி இருக்க வேண்டியதில்லை 
பேசுவதற்கு பேசுபொருளும் 
தன் மன கண்ணுக்குள்ளேயே தர்க்கம்
பிறர் குறித்து கவலை இன்றி 
தன்குறித்து தற்குறி பரிணாம வளர்ச்சி அடையும் 
ஒரு பாதாளம்
எப்படி இருந்த போதும் 
தனிமை யாரையும் கண்ணீர் சிந்து விடுவதில்லை 
கொலை செய்வதில்லை 
அது ஒரு தற்கொலை அழகியல் நாடகம்.
கவிதை தனிமையின் கனவு
கவிதை எழுதும் வெட்டி பொழுதுகளை 
பணத்தாள்கள் பரிகாசம் செய்கிறது

என்றேனும் ஒரு நாள் அது 
விலைக்குப் போகலாம் 
அல்லது சுண்டல் மடிக்கப்படலாம்
அப்போது அந்த கவிதையை 
ஓசியாய் படித்துவிட்டு 
கழிவிரக்க கண்ணாடி பேழயில் 
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

திரும்பத் திரும்ப படிக்கப்படும் 
கண்ணாடி பேழையின் என் கவிதை 
பின் ஒரு நாளில் உங்கள் 
கவிதையாக மாறி இருக்கலாம் !

சூரியனும் நிலாவும்

சூரியனும் நிலாவும்
தூரத்து உறவுகள் நம்மை சுபிட்சம் அடைய செய்யும், 
அருகாமைகள் நம்மை ஆட்டுவிக்கிறது..

பூமிப்பந்தின் எல்லோரின் தூரத்து உறவாய் 
பின்னாலே வரும் சூரியனும் நிலாவும்

உயிரினங்களின்
ஆண் பெண், 
இளமை முதுமை,
நல்லது கெட்டது என்றது போல 
சூரியனும் நிலா சேர்ந்தே வாழவைக்கும் 
அவர்கள் ஒருவர் ஒருவர் பார்த்துக்கொள்ளாது 
நம்மை சேர்ந்து வளர்க்கிறார்கள்.

பூமி பந்தின் 
நல்வினையும் தீவினையும் 
இணையும் விளைவு அறிவியல் ஆகிறது. 
மனிதர்கள் அகங்காரம் கொண்டு ஆக்கிரமிக்கிறார்கள்

கோடி மரங்கள் பூமியில் 
இலை கிளை என 
எதன் இடத்தையும் 
எதுவும் ஆக்கிரமிக்கவில்லை. 
சூரியனும் நிலவும் எல்லோருக்கும்

ஆனால் 
இந்த மனிதர்கள் 
சக உயிரினங்களை 
பேராசையால் பிறரை சுரண்டி 
ஏழையாக்கி பிச்சை கேக்க செய்கிறார்கள். 
பிறகு அவர்களைப் பார்த்து முகம் சுளித்து...

பகிர்ந்து பரப்பி

இலைகள் 
இன்னொரு இலையின் இடத்தை  
ஆக்கிரமிக்கவில்லை. 
கிளைகளும் பூக்களும் அப்படியே...

பூமிப்பந்தில் 
மொத்த மரங்களும் அப்படியே 
தன்னை பகிர்ந்து பரப்பிக் கொள்கிறது

இலைகள் உதிர்வதற்காகவோ 
பூக்கள் உதிர்வதற்காகவோ 
காய்கள் பறிப்பதற்காகவும் 
கனிகள் திருடுவதற்காகவும் 
மரங்கள் வஞ்சம் கொள்ளாது.

பூச்சி புழுக்களும் கொலை செய்வதில்லை 
வேட்டையாடுகிறது.
ஏன்
நான் அன்பே பகிர்ந்து அளிப்பதில்லை 
வஞ்சம் சூழ்ச்சி பொறாமை 
பழிவாங்கு உணர்ச்சி என 
ஏகத்துக்கும் எதிர்மறையாக வளர்கிறேன்.

ஓட்டுவார் ஒட்டி 
எல்லோருக்கும் பரப்பி 
சண்டையிட்டு மாண்டு போகிறேன்
என் குழந்தைகளுக்கும் 
அவை என்னால் விஷ விதையை 
விதைக்கப்படுகிறது.