சிந்துவெளி நாகரிகம் – சங்க இலக்கியம் ஒப்பீட்டு ஆய்வு நூல்
ஏற்கனவே ஆசிரியரின் ஒரு பண்பாட்டுப் பயணம் நூலை படிக்கப்பெற்றதன் விளைவாக, அவருடைய முந்தைய நூலான சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (Sindhuveli Panpatin Dravida Adithalam) படிக்க வேண்டியதாகிவிட்டது. அவருடைய ஆய்வு முறை சிறப்பானதாகவும். ஆசிரியர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் கூடுதல் சிறப்பு. மேலும் அவருடைய தமிழ் எழுத்து நடை புடித்த ஒன்றாகிவிட்டது. புதிய சொற்களை அறிமுகம் செய்கிறார்.
இவருடைய ஆய்வு முறை அறிவியல் பூர்வமான, இயங்கியல் போக்கில் இருப்பது சிறப்பு. தர்க்கங்கள், சந்தேக தரவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் வாய்ப்பு அளித்து தன்னுடைய நோக்கு நிலையை தரவுகளுடன் செழுமைப்படுத்துகிறார்.
அவர் கையாளும் ஆய்வு முறையில் சங்க இலக்கியங்களின் இடம்பெற்ற ஊர், புதை படிவ சான்றுகள், நில அமைப்புகள், கட்டடங்கள், கழிவுநீர் பாதைகள், ஆபரணங்கள் என பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா என்று தமிழகத்தை தாண்டி உள்ள ஒத்துப் போவதையும் சங்க இலக்கியத்தின் வாயிலாக ஒப்பீடு செய்து நிறுவுகிறார்.
இவரின் “கீழ்-கிழக்கு, மேல்-மேற்கு” என்ற திசை வழியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் அதன் வழி சிந்து சமவெளி நாகரிக முதல் இன்று வரைலான வரலாற்று வளர்ச்சிப் போக்கில் அவரின் கீழ் கிழக்கு மேல் மேற்கு என்ற ஆய்வு நுட்ப பொருந்தி போவதை தரவுகளோடு அட்டவணைகளோடு நிறுவுவது புதிய கோணமே.
ஆசிரியர் தமிழில் ஆட்சி தேர்வு எழுதி பொறுப்பேற்றதால் அறிவியல் தமிழ்ச் சொல்களை அறிமுகப்படுத்தி நமது மனதில் பதிய வைத்து விடுகிறார். 200 பக்கம் கொண்ட இந்த நூலில் அணிந்துரையும் ஆசிரியருடைய என்னுரை கீழடிக்கு முன்பும், கீழடிக்கு பின்பும் இரண்டையும் படித்தாலே பாதி புத்தகத்தை கடந்து விடலாம். திராவிட மொழிக் குடும்பங்களை பட்டியல், திசைகள், நில அமைப்பு என பல்வேறு பொருத்தப்பாடுகளை புதிய இணைய தொழில்நுட்பத்தின் மூலம் அட்சரேகை மகர ரேகை வாயிலாகவும், கள ஆய்வு மூலமும், தனக்கு முன்னர் ஆய்வு செய்த வரலாற்று அறிஞர்களின் நூல்களின் மூலமும் ஒப்பிட்டு நிறுவுகிறார். சங்க இலக்கிய ஒப்பீடு எவ்வளவு அடே அப்பா…
“…வாழ்வாதாரங்களுக்கான தேடலே மனிதகுல வரலாற்றில் பாதச்சுவடுகளையும் பயணத் திசைகளையும் வழி நடத்தி இருக்கிறது…”
இவ்வளவு சுருக்கமாக மனித வரலாற்றை ஒரு வரியில் எழுதுகிறார் ஆசிரியர்.
சார் ஜான் மார்சலை இவர் வழியாக தான் நான் தெரிந்து கொண்டேன். மகத்தான அர்ப்பணிப்பு. வரைபடங்கள் சிந்து சமவெளி ஹரப்பா தாண்டி இன்னும் பல ஆய்வு களங்களை அறிமுகப்படுத்துகிறார்.
எல்லாமே தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்… சிந்துவெளியிலிருந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் குஜராத் ராஜஸ்தான் மகாராஷ்டிரா ஒரிசா கர்நாடகா தமிழக நோக்கி எவ்வாறு நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து செழித்து தமிழகத்தில் சங்க இலக்கியமாக முதிர்ச்சி அடைந்து இருக்கிற என்கின்ற வழித்தடத்தை அறிவியல் பூர்வமாக அணுகும் ஆசிரியரின் ஆய்வு முறை பழைய நாகரிகங்களின் வழியாக எப்படி நாம் வளர்ந்து வந்திருக்கிறோம் என்கின்ற புரிதலை அறிவியல் பூர்வமாக உணர வைக்கும் நூல்.
நீட்டித்தது எழுதாமல் சொல்ல வேண்டிய கருத்துக்களை செவ்வனே சொல்லி, அதற்கான வரைபடங்கள் புகைப்படங்கள், ஒப்பீடு அட்டவணைகள் புத்தகத்தின் தோற்றம் என அனைத்தும் நேர்த்தி ரகம்.
இறுதியாக சிந்து சமவெளி நாகரிகம் பொதுப் பண்பாடை வலியுறுத்துவதாகவும், ஆரிய சனாதன பண்பாடு மக்களை பல்வேறு படிநிலைகளில் சுரண்டும் ஏற்பாடாக இருந்தது என்பதை ஆய்வு முறை நமக்கு நுட்பமாக உணர்த்துகிறது. அந்த வகையில் சங்க இலக்கியமும் சிந்து சமவெளியும் பொது சமூகத்தை ஜனநாயக வழியில் நடத்தியதையும் அதற்கு எதிராக சனாதனம் பாகுபாடும் சுரண்டல் முறையையும் உருவாக்கி உள்ளது.
ஆசிரியரின் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (Sindhuveli Panpatin Dravida Adithalam)நூலை படித்து விட்டு “ஒரு பண்பாட்டின் பயணத்தை” படிக்கும் போது பாய்ச்சல் வேக புரிதலை ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக