வாழ்த்துக்கள் த.வெ.க. விஜய், ஆனால்...
தமிழக வெற்றிக் கழக முதல்வர் வேட்பாளர் விஜய்க்கு வாழ்த்துக்கள். திமுக பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. வெற்றி கழகத்தை தலைமையினை ஏற்று சில கட்சிகள் கூட்டணியில் சேரலாம் என்கின்றனர். ஆக அதிமுக வாக்கு வங்கியை மடை மாற்றம் செய்ய எத்தனிக்கிறது. பாஜக, நாம் தமிழர் இப்போது தமிழக வெற்றி கழகம் போட்டி போட்டு மடைமாற்றம் செய்ய தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது பிற கட்சிகளுக்கு எதிராக சமூக நீதி அரசியலை திமுக அரசியலாக முன்னிறுத்துவதால். கூட்டணிக் கட்சிகளும் பல நெருக்கடிகளுக்கு இடையே வேறு எங்கும் செல்ல முடியாமல் அதன் பின்னாலேயே நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். திமுக எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் சமூக நீதி அரசியலை முன்னிறுத்துவதன் மூலம் அதற்கு அரசியல் லாபமே. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சமுக நீதி அரசியல் சொந்த வாக்கு வங்கியை சிதறடிக்க இயலாது என்பதால் எல்லோரும் திமுக மீது எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கின்றனர். இதில் வாக்குகள் சிதறப்போவது அதிமுகவுக்கே பாஜகவோடு கூட்டணி வைத்த எந்த கட்சியும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. அதை...