அமுத கலசம் இதழில் "மீட்புப் காலம்"...
மீட்புக்காலம்...?! சூழலியல் சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், துணுக்குகள், செய்திகள், தொலைக்காட்சிகளில் காணும் பேரிடர் போன்றவை சமுகத்தின் பொது புத்தி பயமுறுத்துவதாக உள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் இழந்து விட்டதாக மனித குலம் இனி பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று அலறுகின்றன. மனிதர்கள் உள்ளிட்ட உலகின் மொத்த உயிரினத் தொகுதியும் அற்றுப்போகும் என பதறுகின்றனர். மனிதகுலம் பழைய நிலைக்கு போக வேண்டும் என்ற கருத்தாக்கம் நொடிக்கு ஒரு முறை போதிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளே சுற்றுச்சூழலை கெடுக்கிறது என்கின்றனர். இப்படியான செய்திகள் தனிநபராகவோ, குறுங்குழுவாகவோ, கார்ப்பரேட் லாபியாகவோ மிகத் தீவிரமாக அரைகுறையாக, சமூக ஊடகங்கள் வழியாக வியாபிக்கிறது. இன்றை நாளில் சில அற்ப விஷயங்களை கூட பெரிதுபடுத்தி பார்ப்பது, பெரிய விஷயங்களை அற்ப விஷயங்களாக கருதி கொள்வது மலிந்து விட்டன. சிந்தனைத் தெளிவென்றி ஆழமாக உணர்ந்தறியாமல் நுனிப்புல் மேய்ந்தவாறு புரிந்தமாதிரி கடக்கிறோம். நம்மை சூழ்ந்து இருக்கக்கூடியதும், எல்லோருக்கும் பொதுவான, யாரும் உரிமை கொண்டா...