ராஜ் கௌதமன் - அஞ்சலி
ராஜ் கௌதமனை பல கோனங்களில் பலரும் அணுகி இருந்தாலும், அவரின் மொழிபெயர்ப்பு கலை மிக உயர்வானது. அரிய வகை பண்பாட்டு நூல்களை தமிழுக்கு சமகாலத்தில் வழங்கிய பொறுப்பு மிக்க படைப்பாளி... அவரின் "அன்பு என்னும் கலை" நல்ல உதாரணம். புது தலைப்பாக இருக்கு என்று வாசிக்க துவங்கினேன். புலம் பெயர்ந்த யூத எழுத்தாளர் சோசலிச முகமைகள் சேர்ந்தவர் என்பதால் வாசிக்க துவங்கினேன். புதிய புரிதலும், அன்பு குறித்தான மறுமதிப்பிடை உருவாக்கியது. "...கலை பற்றிய கற்றறிதல் என்பது, ஒரு உச்சமான அக்கறையாக இருப்பதே அதன் நிபந்தனை..." "...அன்பெனும் கலையைப் பொறுத்தமட்டில், இக்கலையில் புலமையாளனாக வர ஒருவன் விரும்புகிறபோது, ஒழுங்கு, ஒருமுகப்படுத்துதல், பொறுமை ஆகிய பண்புகளைத் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காப்பாற்றும்..." "...குழந்தையிடம் தாய் கொண்ட பொறுப் புணர்வைச் சொல்லலாம். அவள், குழந்தை மீது மிகுந்த கவனமாக இருக்கிறாள்; அதன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களை மிக உன்னிப் பாகப் பார்க்கிறாள்; அவை வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்பே கவனிக்கின்றாள்; தன் குழந்தையின் அழுகுரல் கேட்...