இந்திய கிராமம் - நூல் அறிமுகம்
#இந்திய_கிராமம் ஆசிரியர் (இந்தி மூலம்) : இரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி மொழிபெயர்ப்பு : நாணற்காடன் முதல் பதிப்பு: பிப்ரவரி - 2025 வெளியீடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை மாவட்டக்குழு பக்கம் 64 - ₹. 70/- சுதந்திரத்திற்கு முன் உள்ள இந்திய கிராமங்களில் குறுக்கு வெட்டு தோற்றத்தை, பொருளாதாரப் போக்கு சமூக கட்டுமானம், அதிகாரம், கடமை, உரிமை, வழிபாடு, கல்வி அரசியல் என எல்லாவற்றையும் இயங்கியல் வழியில் ஆய்வு செய்து சுருக்கமாக நமக்குத் தரும் சிறு நூல் இது. இந்தியா முழுமைக்கும் பொதுவான புரிதலில் புரிந்து கொள்ளக்கூடிய எளிய தமிழில் மொழிபெயர்ப்பாளர் நாணற்காடன் சிறப்பு பணியை செய்திருக்கிறார். நூலின் ஆசிரியர் ரவீந்திர தன்வந்த் ஹலிங்கலி கர்நாடகாவை சேர்ந்த முனைவர் அறிவியல் வகைப்பட்ட ஆய்வு முறையில் இந்திய கிராமங்களில் போக்கை அதன் பொருளாதார அடித்தளத்தை அதன் மீது கட்டப்பட்டுள்ளது சாதி மதம் அதன் மீது கட்டப்பட்ட அரசியலை வகைப்படுத்தி உள்ளார். குறிப்பாக சூத்திரர்களின் கடந்த கால போக்குகளையும் அதன் மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சாதுரியமாக தவிர்த்ததையும் ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார். அம்ப...