உயிர்சுருட்டி - வாசிப்பனுபவம்
தோழர் ஆய்வாளர் பன்முகப் பரிமாணம் கொண்ட முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் ஆய்வுபுலத்தில் இருந்து புனைவு படைப்பிலக்கியத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார். அவரின் முதல் நாவல் கீழத் தஞ்சையின் விவசாயப் பின்புலத்திலிருந்து கிராமப்புற பாகுபாடு உளவிலில் மையம் கொண்டுள்ள சமூக பொருளாதார பண்பாட்டுச் சூழலை, அதன்வழி உழைக்கும் மக்களின் பாடுகளை அகப்புற நெருக்கடிகளில் குடும்ப உறவுகளில் ஊடாட்டங்களை வட்டார வழக்கு சொற்களை கொண்டு தொடர்ச்சி மாறாது கனம் குறையாது பதிவு செய்கிறார். எனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நன்னிலம் பக்கம் என்பதால் மிக நெருக்கமான வட்டார வழக்குச் சொற்கள் இருப்பதில் வியப்பில்லை. சொற்களுக்காகவே திரும்பத் திரும்ப படிப்பேன் என நினைக்கிறேன். முருகையன் என்ற கதாபாத்திரம் தோழர் முருகையனை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கதையின் பாத்திரங்களில் நேர் எதிர் பிம்பங்கள் இல்லை சமூகத்தின் பண்பாட்டுச் சிக்கலை விவரனை செய்யும் பாத்திரப் படைப்புகளாக உள்ளன. எழுத்தாளரின் இந்த கதை மாந்தர் தேர்வு சமூக அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவரின் இனிவரும் எழுத்துக்கள் சமூக நீதியை வலியுறுத்த...