சமகால சுற்றுச்சூழல் சவால்கள்

நூல் #சமகால_சுற்றுச்சூழல்_சவால்கள் 
தொகுப்பாசிரியர்கள் : எஸ். விஜயன், த.வி. வெங்கடேஸ்வரன், ஆயிஷா நடராசன், செ.கா., ஸ்ரீகுமார், டயானா 
வகை : கட்டுரை 
பதிப்பகம்: புக்டே இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியீடு 
பக்கம்;272 , விலை ₹400.

கட்டுரை வகை சார்ந்த 28 சூழலில் கட்டுரைகளை தொகுத்தது புக்டே இணைய இதழ், பாரதி புத்தகாலயம் இணைந்து வெளியிட்டுள்ளன. சமகால சுற்றுச்சூழலில் பூமி மோசம் போய்விட்டது இனி திரும்பும் வாய்ப்பு இல்லை என்று பெரும்பாலானோர் சிந்தனை வகைப்பட்ட நிலையில் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 

சூழலில் சீர்கெடிலிருந்து பூமி பந்தை பாதுகாத்துக் கொள்ள இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை அளிக்கும் நூல். மனிதர்கள் அறிவியல் துணை கொண்டு இந்த பூமியின் பல்லுயிர் சூழலை பொறுப்புடன் அணுகும் போது சிக்கல்கலிருத்து மீளலாம் என்கின்ற அறிவியல் வகைப்பட்ட நம்பிக்கையை அளிக்கக்கூடிய 28 சூழலில் கட்டுரைகள். விஞ்ஞானிகள் துறை சார்ந்த அனுபவம் மிக்கவர்களால் எழுதப்பட்டுள்ளது.

ஓசோன் ஓட்டையை எப்படி இந்த பூமி எதிர்கொண்டு வெற்றியடைந்தது என்ற சூழலியல் சவாலை தா.வி. வெங்கடேஸ்வரன் நிறுவுகிறார். இந்த எதார்த்தம் நமக்கு வாய்ப்பளிப்பதாக பொறுப்புணர் கொண்டவர்களாக மாற்றியது என்று நம்பிக்கை அளிக்கிறார்.

தனி மனிதர்கள், குறுங் குழுக்கள் இவைகளில் கூழலியல் சார்ந்த கட்டுரைகள் அவர்கள் போராட்டங்கள் இது நாள்வரை மனிதகுலம் முன்னேறியதற்கு காரணமாக இருந்த மொத்த அறிவியலையும் கைவிட சொல்வதாக இருக்கிறது. அறிவியலை புறந்தள்ளி அறிவிலேயே அழிவுக்கு காரணம், என்கின்ற ஒற்றை கோணத்தில் அணுகுவதால் பூர்வீக குடி வாழ்வியலுக்கு போகச் சொல்லுகிறது. 

பொது சமூக இயக்கங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் விஞ்ஞானிகளின் அறிவியல் வகைப்பட்ட பார்வை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல், கார்பன் தடம், பசுமை இல்ல குடி‌ வாய்வு, பறவைகள், சில்வண்டுகள், அயல் தாவரங்கள், வேளாண்மை, கடல், மருத்துவ கழிவுகள், ஒலி & ஒளி மாசு, நிலத்தடி நீர் என பல தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. இதுகாறும் பயனடைந்த அறிவியல் வளர்ச்சி மறுக்கும் இன்றைய கார்ப்பரேட் வகை சிந்தனையும் முறையை உடைத்து வாய்ப்பிருக்கு என்கின்ற புதிய கோணத்தை அணுகுவது கட்டுரைகள். இன்றைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அதிகரிக்கும் வேளையில் எப்படி ஒரு அறிவியல் விளக்கத்தோடு நம்பிக்கை வைக்கக் கூடிய நூல் வருவது அவசியம் அந்த வகையில் இந்த நூலை அனைவரும் வாசிப்பது சுற்றுச்சூழல் குறித்து புதிய கோணத்தில் அணுகலாம். 

 "பகுத்தறிவோடு திட்டமிட்ட முறையில் பூமியின் வளங்களையும், பயன்பாட்டையும் நுகர்தல் அல்லது புதிய காட்டுமிராண்டி வாழ்க்கைக்குச் செல்லுதல் ஆகிய இரண்டு பாதைகளுக்கு இடையேயான தேர்வு தான் நம் முன் உள்ளது". - பாரி காமன்னர்.

கடைசியாக இந்த ஆயிஷா நடராஜன் அவர்கள் சூழலில் சார்ந்த 10 நூல்களை அயல் நூல்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். "மௌன வசந்தம்" என்ற நூல் பூச்சி மருந்து எப்படி சமூகத்தை, பல்லுயிர் சூழ்நிலை சிதறடித்தது என்ற நூலும் இடம்பெற்றுள்ளது.

IPCC, COP ஐக்கிய நாட்டு சபைகளில் பிரகடனங்கள் வல்லரசு நாடுகளின் நழுவல்கள், வளர்ந்து வரும் ஏழை நாடு பாரம், என பல்வேறு கோணங்களில் தரவுகளோடு அனைத்து கட்டுரையாசிரியர்களும் அணுகுவது சிறப்பு. 

சோசலிச எதார்த்தத்தை விரும்பக்கூடிய சூழலியல் செயல்பாட்டாளர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

பாலச்சந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...