வாழ்த்துக்கள் பெருந்தகையே. தஞ்சையில் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில், வ உ சி குறித்தான ஆய்வு நூலை ஆங்கிலத்தில் பெங்குவின் பதிப்பகம் வாயிலாக வெளியீடு செய்திருக்கும் வேங்கடசலபதி ஆய்வாளருக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்திரேப்பது. விருதுக்கும் மதிப்பு.
தஞ்சை இலக்கிய விழாக்கள் இரண்டு முக்கிய அடிப்படை போக்குகளை எப்போதும் என்னை வசிகரிப்பது உண்டு.
1. குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதும், பெரும்பாலும் பார்வையாளர்கள் வந்து அமர்ந்து விடுவது இயல்பாக நடந்துவிடும்
2. நூல்களை முன்பதிவு செய்து விலை கொடுத்து வாங்கும் பாங்கு.
நூல்களுக்கு அச்சுக் கூலி தான் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் அச்சு கூலியை கூட கொடுக்காமல், எழுத்தின் மதிப்பும் தெரியாம போகும் போக்கு பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. இலவசமாக வாங்கிச் செல்வதும் பிரிக்காமல் பறையில் உறங்குவதும் போக்கு நாம் அறிந்ததே.
அது தஞ்சையில் புகழ்பெற்ற பழமையான பெசென்ட் அரங்கில் நடைபெற்றது. இதே அரங்கத்தில், வ உ சிதம்பரதனார் சுதேசி கப்பல் இயக்க பங்கு வெளியிட்டு நிதி திரட்டிய நிகழ்வும், அதில் தஞ்சையில் இருந்த பங்குதாரர் பட்டியலும், பங்களித்த தொகையும், விட்டுக் கொடுத்தவர்கள், திரும்ப பெற்றவர்கள் பட்டியலை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார். இப்படி பல சுவாரசியங்களை அன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
சிறப்புற நடைபெற்ற நூல் அறிமுகம், ஆசிரியரின் ஏற்புரை சமீப நாட்களில் நேர்த்தியான பொறுப்பு மிக்க உரை. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரின் நூல் குறித்தான முழு உரையும் அருமை. சிறப்புமிக்க ஒரு நூல் சாகித்திய அகடாமி விருது பெறுவதும் எழுத்தாளரின் உழைப்பும் ஆய்வும் பொறுப்புணர்வும் மதிக்கத்தக்கது.
அந்த வகையில் வேங்கடசலபதியின் இந்த ஆண்டுக்கான விருது மதிப்பு மிக்கது. வெளிநாடுகளுக்கு சென்று ஆங்கில பேப்பர்கள் வாயிலாகவும், வ உ சி மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் அடிப்படையில் காவல் நிலையம், நீதிமன்ற ஆவண காப்பகத்தின் வ உ சி மீது பதியப்பட்ட வழக்குகளின் ஆதாரங்களை திரட்டி இந்த ஆய்வை செய்திருக்கிறார். இந்த மதிப்புமிக்க உழைப்பிற்கு அங்கீகாரம் இவ் விருது. என் அளவில் அவருடைய இந்த ஆங்கில நூலின் நுட்பத்தை உணர்ந்து தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதற்காக பழைய நூலுக்கு சாகித்ய அகடாமி விருந்தை பரிந்துரைப்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.
எப்படி இருந்தபோதிலும் சிறப்பு.
பொதுவாக படைப்புகளுக்கே முன்னுரிமை கொடுக்கும் இவ் விருந்துகள் இந்த முறை தமிழில் ஆய்வுக்கும், தெலுங்கில் விமர்சன கட்டுரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படைப்புக்கான விருதை வெளியிட்ட காலத்தோடு ஒப்பிட்டு பேசி சிறுமைப்படுத்தி பேசுவது பொறுப்பற்றது. சில நேரங்களில் அரசியல் சாசனத்திற்கு எதிரான சிந்தனைகளுக்கு விருது வழங்குவதும், சிலர் ஆளும் கட்சிக்கு எதிரான அரசியல் பின்புலத்தில் எழுதுவதால் விருதுகள் தவிர்ப்பதும் தொடர்ந்து நாம் கவனிக்கிறோம். இன்னும் சில பேருக்கு கிடைக்காமல் மறைந்து போனவர்களும் உண்டு. இவ் விருந்துகள் அவருடைய பழைய எழுத்துக்களை எல்லோரும் படிக்கச் செய்யும். அதன் வழி வரலாற்று உணர்வு மேம்படும், பலரும் இதுபோன்ற உண்மைக்கு நெருக்கமான ஆய்வுகளை வெளிக்குணர உதவும். சர்ச்சை தவிர்த்து பாராட்டுவதால் பலரிடம் அவருடைய இயங்கியல் வகைப்பட்ட அறிவியல் ஆய்வு போய் சேரும்.
பாலச்சந்திரன்