நவீன கல்விக் கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன? ...
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய கல்வி குறித்து 2 பிப்ரவரி 1835 தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே அவர்களின் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில்:- சுந்தர் கணேசன் | ஆர். விஜயசங்கர் வெளியீடு :- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - சென்னை பக்கம்:- 51 - ₹50 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இணையதளத்தில் இலவசமாக pdf வடிவில் கிடைக்கிறது. இந்திய கல்விமுறை குறித்து பருந்து பார்வையில் புரிதலும் அதனுடைய பரிமாணங்களை புரிந்து கொண்டு இந்திய சமூகத்தை மேம்படுத்து நோக்கி கல்வி படிநிலைப் பண்பாட்டு தேங்கிக் கிடந்தது எல்லோருக்குமாக மாற்றுவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் நுண்ணறிவும் சிறப்பாக அவருடைய இந்த அறிக்கை காட்டுகிறது. தமிழ் கூறும் நல் உலகம் ஆசிரியர் பெருமக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் படித்து வேண்டிய ஆவணம். அதை மொழிபெயர்த்து இணைய வழியில் இலவசமாக படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த வெளியீட்டாளர்களுக்கு நன்றியும் அன்பும். "தற்போது நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ஆங்கில மொழிக் கல்வியே பெரும் பங்காற்றியுள்ளது. அத்தகைய வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்துதலில் மெக்காலே அறிக்கைக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த அறிக...