மேற்கண்ட நிகழ்வில் கிலுவை மரப்போத்துகள் கொண்டு காடு அமையும் பகுதியைச் சுற்றி உயிர்வேலி அமைத்திருந்தது மதிப்பு மிக்க பணி. வேலி அமைத்து தண்ணீர் ஊற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்கினர்.
அருகே சன்னாசி கோவில் பழமை மாறாத கோவிலும், குடிநீர் குளமும் அருமை. பி-மாத்தூர் மதிய கரிகுழம்பு சுவையோடு இக்கூட்டு முயற்சியில் நானும் பங்கேற்றேன்.
கூட்டுறவே சூழலியல் சவால்களை சற்று தள்ளி வைக்கும்.
நிகழ்ச்சிக்கு அழைத்த மரம் இராஜா அவர்களுக்கு அன்பும் நன்றியும்.
இம்மழை பருவத்திற்குள் பொது இடங்களில் பாதுகாப்புடன் மரம் வளர்க்க மரம் இராஜா அவர்கள், தனது பண்ணையின் மரக்கன்றுகளை தரத் தயாராக இருக்கிறார் தொடர்பு கொள்க...