திருமயத்தில் இருந்து கடியாபட்டி போகும் சாலையில் இடையில் இருக்கிறது இளஞ்சாவூர். ஊரில் சாலை தெற்கு பக்கத்தில் இருக்கிறது இந்த கோவில்காடு. புதுக்கோட்டையில் கோவில் காடுகள் அதிகம். இக் காடுகளில் பழைய மர வகைகள் அதிகமாக உள்ளன. அதன் தண்டுகள் நேராக இல்லாமல் வளைந்து நனைந்து கொடியாக காணப்படும். எவ்வளவு மழை வறட்சி என எல்லாவற்றிலும் தாங்கி தகவல் வைத்து வளரக்கூடிய மரங்களாக அவை இருக்கின்றன. பிற இடங்களில் தைல மரக்காடுகள், நிலத்தை திருத்தி விவசாயிகள் என பல்வேறு புது இனங்களை வணிக நோக்கில் பயிரிடுவதால். கோவில் காடுகள் நம்மளுடைய பாரம்பரியத்தை பறைசாற்றுபவயாக இருக்கின்றது. இதனால் எங்கெங்கெல்லாம் செல்கிறேனோ அப்போது கோவில் காடுகளையும் - சமண அடையாள சின்னங்களை பார்ப்பதும் பழக்கமாகிவிட நேற்று இளஞ்சாவூரில். இது எனக்கு அதிசயமான கோவில் தான்.
பெரும்பாலும் உருவ வழிபாட்டுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது கிராமத்து தெய்வங்கள். உருவமற்ற அருவநிலையிலே கடவுளை வணங்கும் கருப்பர் கோயில் முதலில் நான் இளஞ்சாவூரில் தான் பார்க்கிறேன். ஆலமரம் மைய தண்டைய இழந்து விழுதுகள் வழியாகவே விரிந்து கிடக்கிறது. இது எனக்கு முதல் அதிசயம். ஏழு கன்னிமார்கள், கருப்பர், சன்னாசி சூலாயுதம் என எல்லா பரிவார தெய்வங்களும் சாதாரண கற்கால ஆயுதங்களைப் போல இருக்கிறது. இது மக்கள் புழக்கம் குறைவாக உள்ள கோவிலாகவும் உள்ளது. ஒரே ஒரு நவீன விஷயத்தை பார்க்க முடிந்தது. பெயர் பலகை வீடுகள் பயன்படுத்தி தூக்கி எறிய முடியாத சுவாமி படங்களை கோவிலில் ஏதோ ஒரு மரத்தூரில் போட்டு வைத்திருக்கிறார்கள். அருகே இன்று பயன்படுத்தக்கூடிய பாதுகாக்கப்பட்ட கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஊரணி (ஊரே அணியும் குடிநீர்) அருமையான குடிநீர் உள்ளது.
உருவங்களை வழிபடும் மனிதர்கள் மந்தை எனப்படும் பொது இடங்களில் திருவிழாக்கள் நடத்துவது, கூட்டமாக ஆடல் பாடல் குலவை செய்து கொண்டாடுவது, ஊருக்காக முக்கிய முடிவு எடுப்பது என பொது இடத்தில் வழிபாடுகள் இருந்தன. உருவங்கள் இல்லாத தெய்வ நிந்தனைகள் முன்னோர்களின் கடப்பாடுகள், அதனால் வரை சேகரித்த அறிவுகளை பொது சமூகத்தின் அற விழுமியங்களாக அறுவமாக கடைபிடிப்பது, பின்பற்றுவது என மானசீகமாக இருந்தனர். அந்த அருவ வழிபாடு உருவமாகி சிலையின் மீது வார்த்தைகளை கொட்டுவது, கிடைக்கப்பெற்ற மதிப்பிற்கு பொருட்களை படையலிடுவது, பிரமாண்டமாக கோவில் கட்டுவது, பிரமாண்ட அன்னதானம், கோடிகளில் குடமுழுக்கு என தனிமனிதனோ, குறுங் குழுக்களோ, சாதியின் பெருமிதமாகவோ அல்லது ஏரியா கொண்டாட்ட அகங்காரங்கலாக வழிபாட்டு முறைமைகள் மாறி உள்ளன. அறவிழுமியங்களை மீறுபவர்களாக மாறிப்போய் சுஐருங்கிவிட்டதோ நமது வழிபாடுகள்? என்ற புதிய புரிதலோடு நேற்றைய பயணம்.