இடுகைகள்
பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
கொத்தி தின்னும் நினைவுகள் - மாநில கவிதை முகாம் , இராசபாளையம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாட்டில் ராஜபாளையத்தில் அய்யனார் அருவி அருகே சிவானந்த ஆசிரமத்தில் இரண்டு நாள் மாநில கவிதை முகாம் நடைபெற்றது. இதில் கவிஞர் சிற்பி 90, எழுத்தாளர் வண்ணதாசன் 80 ஆகியோருக்கு பாராட்டும் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு வீரபாண்டியன் வாழ்த்துரையுடன் தொடங்கியது. மாநிலத் தலைவர் கங்கா அவர்கள் தலைமையில், சிருங்கை சேதுபதி அவர்கள் சிற்பி குறித்தும், கண்மணி ராசா அவர்கள் வண்ணதாசன் குறித்தும் புகழுரை வழங்கினர். இந்நிகழ்வில் எனது நான்காவது கவிதை தொகுப்பான கொத்தி தின்னும் நினைவுகள் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு கலை இலக்கியப் பெரும் மன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் அறம் தலைவர் தோழர் கங்கா மற்றும் அனந்தகுமார் அகிலா கிருஷ்ணமூர்த்தி யவனிகா ஸ்ரீ ராம் தோழர் கண்மணி ராசா ஆகியோர் முன்னிலையில் வெளியீடு செய்யப்பட்டது. இதில் தோழர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பாடலும் வெளியீடு செய்யப்பட்டது. பிறகு கவிதை குறித்தான பல்வேறு பொருமைகள...
சென்னை பயணம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1. ஒரேநாளில் சென்னை போய் திரும்பியது 19 மணி நேரத்திற்குள் 2. ஒரு மணிநேரத்திற்குள் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றதும், முடிவெடுத்ததும் சிறந்த அனுபவம். உயர் மட்ட குழு புரிதலும் பொறுப்புணர்வு மேன்மையே காரணி நம்பிக்கையளிக்கும் முடிவுகள். 3. சென்னையில் முதல் மெட்ரோ ரயில் பயணம். விரைவு - பாதுகாப்பு - அறிவிப்புகள் தரமான நிர்வாகம் (₹ கூட) 4. நனைத்தவாறே நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாசாலை வேடிக்கை பார்த்தது (செம்மொழி பூங்கா மிஸ்ஸிங்) கூட்ட ஏற்பாட்டாளர்கள் அறை ஒதுக்கிட ஓய்வு, பழைய நண்பர்கள் சந்திப்பு என கச்சிதமான சென்னை பயணம்.
ஞாயிறும் - பயணமும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நேற்று தீபாவளி கழித்து உள்ளூர் அறிதல் நண்பர் சிவக்குமார் உடன் குன்றண்டார் கோவில்- குடைவரை சிவன் கோவில், கல்தூண் வேலைபாடுடன் கூடிய மண்டபம், மலை மீது முருகன் கோவில். மலையடிப்பட்டி திருமயம் போன்று அருகருகே சிவன் மற்றும் பெருமாள் சயனத்தில் குடைவரைக் கோயில்கள், மலைமுகடுகள். கோவில் வீரகுடி வேலைப்பாடுடன் கூடிய சமண சிற்பம். செம்பட்டூர் சமண சிற்பம். மாலையில் வீதி நூல் அறிமுகத்தில் எனது அலைகளின் நிலையும் நிழல் கவிதை தொகுப்பு கூட்டத்தில் பங்கேற்பு என நேற்றைய பொழுது மன நிறைவாக...