திரை மறைவு லாபியே, உயர் பொறுப்பு
இந்திய பண்பாடு அவ்வளவு உயர்வானது ஒன்றும் இல்லை. வரலாறு நெடுகிலும் கயமை, துரோகம், பழிதீர்த்தல் போன்ற மோசடிகளையே உட்கிடக்கையாக கொண்டது . சமூக நீதிக்கு எதிரான படிநிலைப் பண்பாட்டை அரசியல் சாசன சட்டத்தின் மெதுவான வினையால் மாற்றங்கள் வரத் தொடங்க, இனி சுரண்டல்களை சமூக அநீதியை மூடி மறைக்க முடியாது முடியாது என்றபோது, தன்னை தக்க வைத்துக் கொள்ள பாசிசமாக பரிணமிக்கிறது. கடந்த காலத்தின் மருந்தாக இருந்த பண்பாட்டின் நல்விழிமியங்கள் இப்போது காட்சி பொருளாக, கடைப்பிடிக்க முடியாதவர்களால் போற்றி பாராட்டி விருது கொடுத்து தனிமைப்படுத்தும் தடித்தனமாக மாறி உள்ளது. குடும்பம் என்ற சிறிய அலகில் தொடங்கி சாதி, கோவில் நிர்வாகம், உள்ளூர் அதிகாரம், பெரு நிறுவனங்கள், கட்சி, அரசு பதவிகள், ஆளுங்கட்சி உயர்நிலை, இந்திய அரசாங்கத்தின் உயர் பொறுப்பு வரை திரை மறைவு லாபிக்களால் தான் உச்ச அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. திரை மறைவு பண்பாடு சாதிகளில் ஆழமாகவும், முற்போக்கு அமைப்புகள், அதிகாரம் அற்ற அடையாள நிறுவனங்களில் குறைவாக இருக்கிறது. ஒரு போட்டியில் சமமான வாய்ப்புகள் உள்ள இருவரில் கூடுதல் திரை மறைவு வாய்...