நூற்றாண்டு விழா 👈🏾👈🏾👈🏾
30 டிச., 2024
28 டிச., 2024
27 டிச., 2024
ஓவியக் கண்காட்சி
புதுக்கோட்டை நகர்மன்ற அரங்கில் 3 நாள் ஓவியக் கண்காட்சி ஆலங்குடி சார்ந்த ஓவியக் கல்லூரி மாணவர் சுப்பிரமணி அவர்களின் 'சித்தூர்' கண்காட்சி நல் அறிமுகத்துடன் துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை தலைமையுரை என்று எதுவும் இல்லாமல் நேரடியாக கல் குதிரை ஆசிரியர் கோணங்கி அவர்களின் சித்தன்னவாசல் குறித்தான கவிதை உரை கவிதை வடிவில் சிறப்பு.
தமிழ் நாடு அரசின் கலைப் பண்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மாவட்டச் செயலாளராக நான் பங்கேற்றேன்.
நுன் கலை எல்லையற்றது என்பதே கருப்பொருளாக இருந்தது.
மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஓவியருக்கு வாழ்த்தும் ஓவியங்கள் குறித்த கலந்துரையாடலும்
மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர்...
நாளை (29.12.24) கண்காட்சி கடைசி நகர்மன்றம் புதுக்கோட்டை
நகர்மன்றம் துவங்கி கல்வெட்டு மற்றும் உள்ளூர் பெயர் தெரிவிக்க விரும்பாத சுவர் ஓவியமும்.
மன்மோகனுக்கு அஞ்சலி. ஆனால்...
மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி. ஆனால் சிறந்த பொருளாதார நிபுணர் என்கின்ற வாசகத்தோடு அவரை உச்சி முகர்ந்து அஞ்சலி செலுத்துவது அதிகப்படியானது. முனைவர் மன்மோகன் சிங் முதலாளித்துவ பெரு நிறுவனங்களின் சிந்தனைகளை தனது திட்டங்களில் மெருகேற்றியவர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு மூன்றில் இரண்டு பங்கு வறுமை கோடு உள்ள நாடு, 60 சதவீத பெண் குழந்தைகள் இரத்த சோகைக்கு உட்பட்ட நாடு, உடனடியாக கார்ப்பரேட் வகை பொருளாதாரத்தை தூக்கி பிடிப்பது எவ்வளவு மிகப் பெரிய மோசத்தை உருவாக்கி இருக்கு.
மெது மெதுவாக வரையறுக்கப்பட்ட கலப்பு பொருளாதார மாற்றங்களை ஊக்குவிக்காமல், நேரடியாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி சுதந்திரமான சுரண்டல் ஏற்பாட்டுக்கு வழிவகை செய்து உள்ளூர் சிறு, குரு தொழில்களை சிதறடித்தவர். சரியாக கூறுவதென்றால் பாசிச பேரிடரை எழுதியவர். அவரின் ஆலோசகர்கள் அனைவரும் கார்ப்பரேட் பொருளாதார லாபியாளர்களே. மக்களை சந்திக்காமல் நியமனங்கள் எப்போதும் மேட்டுக்குடி தன்மைக்கொண்டதே. ... நிர்மலா சீதாராமன் வரை இதன் நிலை.
டாட்டா போன்ற உள்ளூர் முதலாளிகள் தங்கள் நிறுவனங்களில் பணி பாதுகாப்பு கல்வி மருத்துவம் சுகாதாரம் சமூக பங்களிப்பு ஓய்வூதியம் தொழில் நலிவடையும்போது தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சங்கம் அமைக்கும் உரிமை போன்றவற்றை உறுதி செய்திருந்தனர். ஆனால் அதானி, அம்பானி போன்ற பெருநிறுவனங்கள் எது குறித்தும் கவலைப்படாது லாபத்தையே மையமாக கொண்டு இயங்குவை. அர்ஷத் மேத்தா, விஜய் மல்லையா, பங்கு வர்த்தகம், கார்ப்பரேட் வரி மற்றும் கடன் தள்ளுபடிகள், எரிபொருள்களுக்கு நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும் இப்படி பல பொருளாதாரக் குளறுபடிகளை செய்து இந்திய சமூகத்தை மிகப்பெரிய தேக்க நிலைக்கு உள்ளாக்கி சீரழித்து ஒரு கட்டத்தில் தடுமாறியவர் மன்மோகன் சிங். அவருக்கு இந்திய வகைப்பட்ட சிந்தனை குறைவு. பெரு நிறுவன வகை பட்ட சிந்தனையை தனது பொருளாதார யுக்திக்கு பயன்படுத்தியதன் பொருட்டு, அவரையே பிரதமராக தேர்வு செய்யும் நெருக்கடி காங்கிரசுக்கு பெருநிறுவனங்கள் கொடுத்து வெற்றியும் பெற்றன. அவை தோல்வியை சந்திக்கும் போது மௌனமானர் மன்மோகன் சிங்.
இந்திய வகைப்பட்ட பொருளாதாரத்துக்கு குறிப்பாக பெரும்பான்மை மக்களுக்கு ஒவ்வாத உடனடி லாபங்களை குவிக்கும் வரிவகை முறை மொத்த இந்தியாவையும் நடுக்கத்துக்குள் கொண்டுவர. அதை இயல்பாக பறித்துக் கொண்டனர் வலதுசாரிகள்.
கார்ப்பரேட் தனது கையாலாகத்தனத்தை பாசிசத்தின் வாயிலாக வலதுசாரி பிற்போக்கு வாதிகளை பயன்படுத்தி மொத்த இந்தியாவையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மன்மோகன் சிங்கே காரணி. இதை இடதுசாரிகள் மறந்து அவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. ஒருவேளை இன்றைய ஆட்சியாளர்களுக்கு அவர் தேவலாம் என்ற அடிப்படையில் சொல்லுகிறார்கள் போலும்.
உண்மை என்னவோ இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் அமர மன்மோகன் சிங்கும், அவருடைய பெரு நிறுவன சிந்தனை முறையயே காரணம். லாவகமாக பயன்படுத்திக்கொண்ட கார்ப்பரேட்டுகள் தோல்வியை பிறர் தலையில் ஏற்றி குளிர் காய்கிறது.
இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்தம் என்ற பெயரில் தனது மௌனத்தால் வலதுசாரிகளிடம் கைமாற்றிய மன்மோகன் சிங் பொருளாதார நிபுணர் என்ற பலுன் உடைந்து வெகுநாள் ஆகிவிட்டது. உலக வங்கியே "நாங்கள் வாக்குறுதி அளித்த இலக்குகள் நிறைவேறவில்லை எல்லாம் சீர் குலைந்தததுவிட்டது" என்ற இந்திய குரல்தான் மன்மோகன் சிங்...
"பெரும்பான்மை மக்களின் தோல்வியின் நாயகன் மறைவுக்கு அஞ்சலி"
24 டிச., 2024
சாகித்திய அகடாமி விருது
வாழ்த்துக்கள் பெருந்தகையே. தஞ்சையில் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில், வ உ சி குறித்தான ஆய்வு நூலை ஆங்கிலத்தில் பெங்குவின் பதிப்பகம் வாயிலாக வெளியீடு செய்திருக்கும் வேங்கடசலபதி ஆய்வாளருக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்திரேப்பது. விருதுக்கும் மதிப்பு.
தஞ்சை இலக்கிய விழாக்கள் இரண்டு முக்கிய அடிப்படை போக்குகளை எப்போதும் என்னை வசிகரிப்பது உண்டு.
1. குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதும், பெரும்பாலும் பார்வையாளர்கள் வந்து அமர்ந்து விடுவது இயல்பாக நடந்துவிடும்
2. நூல்களை முன்பதிவு செய்து விலை கொடுத்து வாங்கும் பாங்கு.
நூல்களுக்கு அச்சுக் கூலி தான் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் அச்சு கூலியை கூட கொடுக்காமல், எழுத்தின் மதிப்பும் தெரியாம போகும் போக்கு பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. இலவசமாக வாங்கிச் செல்வதும் பிரிக்காமல் பறையில் உறங்குவதும் போக்கு நாம் அறிந்ததே.
அது தஞ்சையில் புகழ்பெற்ற பழமையான பெசென்ட் அரங்கில் நடைபெற்றது. இதே அரங்கத்தில், வ உ சிதம்பரதனார் சுதேசி கப்பல் இயக்க பங்கு வெளியிட்டு நிதி திரட்டிய நிகழ்வும், அதில் தஞ்சையில் இருந்த பங்குதாரர் பட்டியலும், பங்களித்த தொகையும், விட்டுக் கொடுத்தவர்கள், திரும்ப பெற்றவர்கள் பட்டியலை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் குறிப்பிட்டார். இப்படி பல சுவாரசியங்களை அன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
சிறப்புற நடைபெற்ற நூல் அறிமுகம், ஆசிரியரின் ஏற்புரை சமீப நாட்களில் நேர்த்தியான பொறுப்பு மிக்க உரை. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரின் நூல் குறித்தான முழு உரையும் அருமை. சிறப்புமிக்க ஒரு நூல் சாகித்திய அகடாமி விருது பெறுவதும் எழுத்தாளரின் உழைப்பும் ஆய்வும் பொறுப்புணர்வும் மதிக்கத்தக்கது.
அந்த வகையில் வேங்கடசலபதியின் இந்த ஆண்டுக்கான விருது மதிப்பு மிக்கது. வெளிநாடுகளுக்கு சென்று ஆங்கில பேப்பர்கள் வாயிலாகவும், வ உ சி மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் அடிப்படையில் காவல் நிலையம், நீதிமன்ற ஆவண காப்பகத்தின் வ உ சி மீது பதியப்பட்ட வழக்குகளின் ஆதாரங்களை திரட்டி இந்த ஆய்வை செய்திருக்கிறார். இந்த மதிப்புமிக்க உழைப்பிற்கு அங்கீகாரம் இவ் விருது. என் அளவில் அவருடைய இந்த ஆங்கில நூலின் நுட்பத்தை உணர்ந்து தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதற்காக பழைய நூலுக்கு சாகித்ய அகடாமி விருந்தை பரிந்துரைப்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.
எப்படி இருந்தபோதிலும் சிறப்பு.
பொதுவாக படைப்புகளுக்கே முன்னுரிமை கொடுக்கும் இவ் விருந்துகள் இந்த முறை தமிழில் ஆய்வுக்கும், தெலுங்கில் விமர்சன கட்டுரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படைப்புக்கான விருதை வெளியிட்ட காலத்தோடு ஒப்பிட்டு பேசி சிறுமைப்படுத்தி பேசுவது பொறுப்பற்றது. சில நேரங்களில் அரசியல் சாசனத்திற்கு எதிரான சிந்தனைகளுக்கு விருது வழங்குவதும், சிலர் ஆளும் கட்சிக்கு எதிரான அரசியல் பின்புலத்தில் எழுதுவதால் விருதுகள் தவிர்ப்பதும் தொடர்ந்து நாம் கவனிக்கிறோம். இன்னும் சில பேருக்கு கிடைக்காமல் மறைந்து போனவர்களும் உண்டு. இவ் விருந்துகள் அவருடைய பழைய எழுத்துக்களை எல்லோரும் படிக்கச் செய்யும். அதன் வழி வரலாற்று உணர்வு மேம்படும், பலரும் இதுபோன்ற உண்மைக்கு நெருக்கமான ஆய்வுகளை வெளிக்குணர உதவும். சர்ச்சை தவிர்த்து பாராட்டுவதால் பலரிடம் அவருடைய இயங்கியல் வகைப்பட்ட அறிவியல் ஆய்வு போய் சேரும்.
பாலச்சந்திரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)