17 ஜன., 2025

வாழ்க நீ எம்மான்... டி.எம். கிருஷ்ணா


வாய்ப்பாட்டு கலைஞர் டி.எம். கிருஷ்ணா 👈🏾👈🏾👈🏾 

எல்லோரும் பாட,
எல்லோரும் கேட்க,
வேண்டும் சுதந்திரம்.

மறைக்கப்பட்ட_மிருதங்க_சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக் கலை

மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள் 
செபஸ்டின் குடும்ப கலை இன்று ஆய்வு நூல் நாடரிந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் நான்கு ஆண்டுகள் களஆய்வு, பேட்டிகள் வாயிலாக மிருதங்கம் உருவாக்கும் சிற்பிகள் வாழ்கை பாடுகளை ஆவணப்படுத்தி உள்ளார்.

கர்நாடக இசையில் குறிப்பிட்ட உயர்சாதி சமூகங்கள் மட்டுமே ஈடுபட முடியும். அவர்களே இசைத் துறைகளில் புகழ் மிக்கவர்களாக பரிணமிக்க முடியும். பிற சமூகங்களுக்கு வாய்ப்பு குறைவு. சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்தவையாக நம்முடைய சமூகத்தின் முன்னேறிய பிரிவினர் பயன்படுத்திய கலை வடிவங்களே இருந்து வந்திருக்கிறது.

விளிம்பு நிலை மக்கள், இன குழுக்கள் பயன்படுத்திய கலை வடிவங்கள் அங்கீகாரம் இல்லாத மெது மெதுவாக அழிந்து வரும் நிலையில். அதன் பின்புலத்தில் டி.எம். கிருஷ்ணா அவர்கள் மிருதங்கத்தை உருவாக்கும் கலைஞர்களின் வாழ்க்கை பாடுகளை, தயாரிப்பு முறைகளை, இசைக் கலைஞரின் விருப்பத்திற்கு ஏற்ப நுட்பங்களை உருவாக்குதல், சாதிய படிநிலையால் இசைக் கலைஞர்களுக்கும் உற்பத்தியாளருக்கும் இடையேயான உறவானது, பொருளாதார நிலைமைகள், மனப்பினக்குகளை பதிவு செய்திருக்கிறார்.

கதை வடிவில் நகரும் இந்த ஆவணம் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை வைத்து மையமாக வைத்து கதை வடிவில் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்.

1. செபஸ்டின்(செவட்டியான் பேச்சு வழக்கு) மிருதங்க சிற்பியின் மகன்களான செல்வராஜ், பெர்லாந்த் (பென்னான்டஸ்), செட்டி. இவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பரம்பரையாக மிருதங்க உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பேரப்பிள்ளைகளை களத்திற்கு சென்று பேட்டி கண்டு ஆவணப்படுத்தி உள்ளார். 

2. அதேபோல் பாலக்காடை சேர்ந்த மணி ஐயர் சிறந்த புகழ்பெற்ற மிருதங்க கலைஞர். வாய்ப்பாட்டுக்கு பின்னாடி வாசிக்கும்படி இருந்த மிருதங்கத்தை தனித்துவமான வாசிப்பு முறையை உருவாக்கியவர். பல்வேறு புதுப்புது முயற்சிகளின் மூலம் தோல் மரம் சாதம் மிருதங்கத்தை மெருகேற்றி அரங்கேற்றியவர்.

3. மிருதங்கத்திற்கு தேவையான பலாமரக்கட்டைகளை தேர்வு செய்வது அதில் சிறந்து விளங்கிய சோமூ ஆசாரி, புதுக்கோட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி பிள்ளை முஸ்லிம் மாணவர், பெண் ஆகியோருக்கு இந்த கலையை கற்றுக் கொடுத்தது அன்றைய சமூக உளவில் சிறப்பான ஒரு விஷயத்தை பதிவு செய்கிறார். 

4. மிருதங்கத்தின் மர தயாரிப்பு, ஆட்டு தோல், மாட்டு தோல் இவைகளை பயன்படுத்தும் முறை, பதப்படுத்தும் முறை, காயவைக்கும் முறை, விலங்கு தோலின் நாற்றத்தை போக்கி தயாரிக்க வேண்டும். கை, கால், வாய் என விளிம்பு நிலை மக்களால் தயாரிக்கப்பட்ட மிருதங்கம் பூஜையறையில் வைக்கப்படுவதும். உருவாக்கி சிற்பிகளுக்கு அங்கிகாரம் இல்லாததையே இந்த நூல் பேசுகிறது.

5. மணி ஐயரின் தனக்கு தேவையான மிருதங்க ஒலியை பெறும் பொருட்டு புதிய முயற்சிகள் செய்வதும், அதற்கு பெர்லாந்த் நுட்பங்களை புரிந்து செயல்படுவதும் சிறப்பான பகுதிகள். கப்பி மிருதங்கம் இவர்களின் முயற்சியில் உருவனதே. பழனி சுப்பிரமணியம் பிள்ளையுடனா தொழில் போட்டியையும் காணலாம்.

6. 7 அத்தியாயத்தில் பெண்களின் பாடுகளை ஆசிரியர் சிறப்பாக கையாண்டு உள்ளர். இசை கலைஞர்களை அறிந்த நாம் கலைப் பொருட்களை உருக்வகும் சிற்பிகளின் வாழ்க்கை பாடுகளை அறிய உதவும் டி எம் கிருஷ்ணாவின் சிறந்த பங்களிப்பு.

ஆசிரியர்: டி_எம்_கிருஷ்ணா‌ 
வகை : ஆய்வு நூல் (ஆவணம்)
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
விலை: ₹195 (விலையடக்க பதிப்பு)

ஒட்டடை பாலச்சந்திரன்