தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்டனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜன., 2025

மரண தண்டனை தீர்வா ?

சமூக நீதியை உள் கிடக்கையாக கொண்ட திராவிட மாடல், வளர்ந்து வரும் ஜனநாயக அரசுகள் மருதலிக்கும் மரண தண்டன மூலம் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழைய நிலபிரமபுத்துவ பழிவாங்கும் மரபார்ந்த மரண தண்டனையை ஊக்குவிப்பது சரியல்ல. 

முதல் உலகப்போர் இரண்டாம் உலகப் போர்களுக்கு பிறகு (உலகம் மன்னர் ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும்+மன்னர் ஆட்சிக்கும் சோசலிசத்துக்கும் போட்டியாக போர்கள்) அடுத்தடுத்த இலக்குகள் நோக்கி அரசுகளையும், மக்களையும் கொண்டு சேர்த்திருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் பெரும்பாலான நாடுகள் மன்னராட்சி இருந்தால் கூட ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தும் சட்ட வடிவங்களை அங்கீகரித்து உள்ளன. ஆனால் சமூக நீதிப் பேசக்கூடிய திராவிடல் மாடல் அரசு தனி மனிதர்கள் தங்கள் நினைத்ததும் ஆங்காரமான செய்யக்கூடிய மரண தண்டனையை ஊக்குவிக்கிறது.

வீழப்போகும் அரசு தன்னை தற்காத்துக் கொள்ள, மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை சலுகைகளை சட்டங்களை கொண்டு வருவது இயல்பு. அனைய போற விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல. அப்படித்தான் கடந்த காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சட்டங்கள் இன்று எதிர்க்கட்சிகளை தன்னை அனுசரித்து போகாத பெரும்பணக்காரர்கள், பலவீனமான எதிர்கட்சி தலைவர்களை மறைமுகமாக பணிய வைக்கும் தந்திர உபாயமாக இன்றைய ஆளுங்கட்சி அரசு செய்கிறது. இந்த சட்டங்களும் நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டாலும், தவறானவர்கள் கையில் சிக்கும்போது பழி வாங்கும் படலமாக மாறும். சாதாரண நண்பர்களுக்குள், குடும்ப நிகழ்வுகளும் பல்வேறு நிறுவனங்களிலும் அதிகார போட்டியில் உயர் மட்டத்தில் இருந்தவர் கீழே தடால் அடியாக விழுந்து நொறுங்கிப் போவதும் உண்டு. அவர்கள் கொண்டு வந்த அதே சட்டம் அவர்களை பழி தீர்க்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாலியல் வழக்குகளில் நாட்டின் பிற பகுதியோடு ஒப்பிடும்போது திருட்டு வழக்குகளில் பெரிய அளவுக்கு புனைவு வழக்குகள் குறைவு. ஆனா நாட்டில பிற பகுதிகளில் அதிகாரம், சாதிய பின்புலம், ஆளுங்கட்சி சார்பு என குற்றவாளிக்கு ஆதரவாகவே அமைகின்றன.
ஆட்சி மாறும்போது காட்சி மாறும். ஜனநாயகத்தை மறுத்து பழிவாங்கும் தன்மை கொண்ட வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வரும்போது அவர்கள் பழி தீர்க்கவே இச்சட்டங்களில் பயன்படுத்துவர் என்பதை உலகெங்கிலும் பல நாடுகளில் நாம் கண்டுள்ளோம். பக்கத்து நாடான வங்கதேசத்தில் தேசத் தந்தை என்ற போற்றப்பட்ட முஜிபுர் ரகுமான் சிலைகள் சிதைக்கப்படுகிறது (பணத்தாள்களில் அவரின் படம் மாற்றப்படுகிறது) அவருடைய வரலாறு முற்றிலும் எதிராக கட்டமைக்கப்படுகிறது. இதேதான் நேபாளம், ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை இப்படி பக்கத்து நாடுகளில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது பழிவாங்கும் படலம் நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன. 

அந்தந்த நேரத்து அரசியல் நெருக்கடியை தள்ளிப் போடுவதற்கு புதிய புதிய தண்டனைத் சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தோம் என்றால் அது எளிய மக்களை பழிவாங்க தான் பயன்படும். அரசு சைபர் பாலியல் குற்றங்களுக்காக சட்டத்தை திருத்ததுகிறோம் என்று சொன்னாலும், தமிழகத்தில் பெண்களுக்கு  பணி பாதுகாபபை உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் திருத்தம் என்று சொல்கிறது. கண்டிப்பாக சட்டங்கள் மாறுதல் உட்பட்டவை, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மக்களின் உள் உணர்வுகளை புரிந்து கொண்டு செழுமைப்படுத்த வேண்டும். காட்டுமிராண்டி கால மரண தண்டனையை கொண்டு வருதல் கூடாது. நம்முடைய சமூக பண்பாடு, கபடம் நிறைந்த துரோகத்தை அடிநாதமாக கொண்டது. ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றுவது, சுரண்டுவதே நமது பண்பாடு. படிநிலைப் பண்பாடு சமூகத்தை பலவாரி பிரிவினை செய்து  சலுகையும் தண்டனையும் என தனித்தனியாக தீர்ப்பும் வழங்கி வருகிறது. பலன் பெறுபவர் தெரியாது போல் கடப்பதும், பாதிக்கப்படுபவர் போராடுவதும் இப்படி ஒருவர் ஒருவர் ஒருவர் சுரண்டவும் ஏமாற்றவும் மேலானவர் கீழானவர் சாதிய படிநிலை கொண்ட பண்பாட்டு சூழல் எல்லா நிலைகளிலும் பெண்களை மிக மோசமாக நடத்துகிறது. அதன் தொடர்ச்சியான ஆணாதிக்கம், வாய்ப்பு கிடைக்கும் போதும், அதிகாரம் கூடுதலாக இருக்கும் போது பெண்களை சுரண்டி இன்று வரையிலும் சீரழித்துக்கொண்டே இருக்கிறது.

பெண்களை சக உயிரினமாக புரிந்து கொள்ளாமல் தனக்கு கீழானவர்கள் என்ற மனோபாவம் மொத்த சமூகத்திலும் உறைந்திருப்பதின் விளைவு, பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. சமூகத்தில் உடலைத் தவிர எந்த அதிகாரத்தை பெற்று விடத பெண்கள், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அதிகாரம் ஆற்ற நிலையில் பலவீனமாக இருப்பதும் அதை ஆணாதிக்கம் வாய்ப்பாக கொடூரமாக பயன்படுத்திக் கொள்ளும்போது பொறுக்க முடியாத சூழலில் வெளிச்சத்திற்கு வந்து வடுகிறது. வெளிச்சத்திற்கு வராத பல வழக்குகள் மேலும் பெண்களை சுரண்டுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. இதெல்லாம் நமக்கு புரிந்தாலும் அதே நேரத்தில் மற்றொருபுறம் புறக்கணிக்கத்தக்க அளவு பொய் வழக்குகளும் அதிகரிக்கிறது. சமூகத்தின் பெண்கள் மீதான மதிப்பீட்டை மாற்றமால் தண்டனைகளை மட்டும் அதிகரிப்பது  தீர்வை தராது. 
கல்வி, சமூக பழக்கவழக்கங்களில் பெண்கள் மீதான அக்கறை, அவர்களுடைய உழைப்பு பங்கிட்டை அங்கீகரித்தல் போன்ற புரிதலை புதிய தலைமுறைக்கு பயிற்றுவிக்க வேண்டும். அப்படி கற்றுக் கொடுத்துக் கொண்டே தண்டனைகளை வரையறை செய்யும்போது அவை புதிய விளைவுகளை மாற்றங்களை உருவாக்கும். சமூகத்தின் மனநிலையை மாற்றாமல் தண்டனைகளை மட்டும் அதிகரித்து விட்டு தீர்வை எதிர்பார்த்தால் பின் விளைவுகளை வேறொரு வகையில் கொண்டு போய் சேர்க்கும். 

எனவே உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட குரலாக இருக்கும் ஐக்கிய நாட்டு சபை நிராகரிக்கும் மரண தண்டனையை எந்த குற்றங்களுக்கும் தீர்வாக வைக்கக்கூடாது. சமூகத்தை சீர்திருத்துவது பண்படுத்துவது ஜனநாயகத்தை பலப்படுத்துவதன் மூலம் மக்களை சிந்தனையை மேம்படுத்தல் மூலம் தீர்வை நோக்கி நகரும். 
இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் நீண்ட நாள் எடுத்துக் கொள்கின்றன. பலவீனமானவர்களுக்கு நாட்கள் நீளும் போது பொருளாதாரம் இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்திவிடுகிறது. குற்றவாளிக்கு சாதகமாக அமைய, பாதிக்கப்பட்டவருக்கு மேலும் துன்பங்களும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. ஆக சட்டங்கள் மேலும் மேலும் பழிவாங்கும் உத்திக்கே பயன்படுத்தப்படும் ஒழிய மக்களை பண்படுத்த பயன்படாது.

முன்னை எப்போதும் காட்டிலும் இப்போது சாதி இறுக்கம் அதிகமாக இருப்பதாக நாம் உணர்கிறோம். காரணம் காதல் கலப்பு திருமணங்களை அதிகரிக்கிறது. பெரும்பாலும் வெற்றிகரமாக அமைந்து விடுகிறது. சில தவறான முன்னுதாரணங்களால் கலப்பு திருமணம் முடிந்த தம்பதிகளில் குடும்பங்களின் நிலவும் பொருந்தாத  ஒவ்வாமை பண்பாட்டால் பிரிவோ அல்லது மனவிலக்கோ அதிகம். இதனால் சமூக முழுவதும் அகவையப்பட்ட திருமணங்கள் பாதுகாப்பு என உணர்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆணவக் கொலைகளுக்கு ஆதரவாக மாறிவிட அன்றைய ஜெயரசு. சாதிய இறுக்கத்தை ஜனநாயகப்படுத்தும் காதலுக்கு எதிராக பதிவு திருமணங்களுக்கு குடும்பத்தின் சம்மதம் வேண்டுமென சட்டத்தை குடும்ப வன்முறை சட்டத்தோடு இணைத்தது. அதே போன்றதொரு மற்றொரு வடிவத்தை இன்றைய திராவிட மாடல அரசு மரண தண்டனை என்று மசோதா தாக்கல் செய்கிறது. இரண்டு சட்டங்களும் பெரிய அளவுக்கு நடைமுறையில் வரவேற்பு இருக்கப் போவதில்லை என்றாலும் பழிவாங்குபவர்களுக்கு பயன்படும்.
போக்கோ சட்டம் காதலிப்பவர்களே பயமுறுப்பு சட்டமாக மாறி இருக்கிறது.
சமூக நீதி அரசு மரண தண்டனை சட்டமும் இதைத்தான் செய்யப்போகிறது. சாதிய இருக்கத்தை தளர்த்தும் சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் காதல் திருமணங்களை ஒடுக்குகிற வேலையை இந்த சட்டங்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ செய்கிறது. 

எதுவும் செய்ய முடியாமல் போன மன்மோகன் அரசை நிராகரித்தோம். இன்றைய ஆட்சியாளர்களுக்கு அவர்களே தேவலாம் என்கின்றோம். அதுபோல தான் சட்டங்கள் வினையாற்றும். 
மரண தண்டனை சட்டம் கூடாது என்ற அதே நேரத்தில் சட்டங்களால் மட்டும் எதையும் தீர்வாக செய்துவிட முடியாது. ஆட்சியாளர்கள் தாங்கள் புரிந்து கொள்வதும் சமூகத்தை வைத்து இருப்பதுமே சட்டத்தின் பலனை மேன்மையுரச் செய்யும்.