திருமணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 டிச., 2024

இந்திய திருமணங்கள் வரமா? சாபமா?

இந்திய திருமணங்கள் இன்றைய கால சூழலுக்கு பொருத்தமில்லாத போக்குகளை நிறைய தனக்குள் கொண்டுள்ளது. இங்கு ஆண் பெண் சமத்துவம் பேணப்படுவதில்லை அதற்கு பதிலாக மதம் சாதி கல்வி பணபலம் அந்தஸ்து குடும்பத்தினர்களின் விருப்பம் நிறம் ஜோதிட குறிப்பு என ஒவ்வொரு கட்டத்தை தாண்டி கடைசியாக திருமணம் நடைபெறும் இவ்வளவு கட்டங்களை தாண்டுவதற்கு பொருத்தம் இல்லாத நிறைய குறிப்புகளை மீண்டும் முழுங்கி விட்டு ஒரு மொக்கை துணையை நாம் கரம் பிடிக்க வேண்டி இருக்கும். சிலருக்கு வெற்றியடையலாம் பெரும்பாலும் புதிய ஏற்பாட்டுடைய நவீன உலகத்தில் சிக்கலாகவே நகர்கிறது. இளம் தலைமுறையினரின் கட்டுடைப்புகள் சமூகத்தை சங்கடங்களுக்குள் உள்ளாக்கி அது ஆணவக் கொலை வரை சென்று விடுகிறது.

இந்திய அரசியல் சாசனம் தேர்ந்தெடுக்கும் உரிமையும் நிராகரிக்க உரிமையும் இணைந்தே வழங்கி இருக்கிறது ஆன போதும் இங்கு சாதி மேலும் மேலும் இருக்கமடைகிறது. இது புதிய வகை ஜனநாயகத்தை புரிந்து கொள்ளாமல் பழமையை மீண்டும் முழுங்கும் கசப்பு மருந்தாகவே இருக்கிறது. 

சர்வதேச சமூகங்களில் பெண்ணே ஆணை தேர்ந்தெடுக்க முடியும். திருமணத்திற்கு முன்னர் ஒரு ஆண் பெண்ணிடம் மண்டியிட்டு காதலை கோர வேண்டும். ஆனால் இந்திய சமூகத்தில் ஆண்கள் பெண்களை சுரண்டும் அல்லது ஒடுக்கும் கருவியாகவே வைத்திருக்கின்றனர். இதுவே இந்திய சமூகத்தின் முரண்.

சர்வதேச புள்ளி விவரங்கள் ஒரு சதவீத விவாகரத்து இந்தியாவில் நடைபெறுகிறது. ஆண் எத்தனை துணையும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் பெண் என்றால் உடனே சமூகம் குதறிவிடும். இத்தனைக்கும் இந்தியாவில் ஆண்கள் அதிகம் பெண்கள் குறைவு எப்படி இந்த சமன்பாடு நிறைவடைகிறது எங்கேயோ ஓட்டை இருக்கிறது ஆனால் நாம் கண்டும் காணாதது போல் கடந்து போகிறோம்.

மேலும் பாலியல் விவாகங்கள் சட்டத்துக்கு புறம்பான குறைந்த வயதுடைய திருமணங்கள் நிறைய நடைபெறுகிறது அதை நம்மால் தடுக்க முடியவில்லை. இந்தப் பாலியல் விவாகங்கள் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து மனவளர்ச்சி உளவியல் பங்கு சமூகத்தை எதிர்கொள்ளும் திறன் இவைகள் இல்லாததால் குழந்தை வளர்ப்பும் மேலும் சிக்கலாகிறது. 

மேலும் பெண்கள் விற்பனை பொருளாகவே தனது சொத்தை வாரிசை பாதுகாக்கும் குறிப்பாகவே இந்திய ஆண்கள் தனது துணைகளை அணுகுகின்றன. இங்கு சொத்துகளும் பெண்களுக்கு வழங்குவதில்லை வரதட்சணை என்ற பெயரில் தொலைக்கத்தான் விரும்புகிறார்கள். நமது சட்டங்கள் இப்போது அனுமதித்தாலும் அது நடைமுறையில் பெரும்பாலும் அமலாவதில்லை பெண்கள் சொத்து வாரிசுகளாக இந்திய பண்பாடு உருவாக்குவதில்லை.

ஐரோப்பிய நாடுகளைப் போல பெண்கள் ஆண்களின் திறனை அறிந்து தனக்கு பொருத்தமான துணையை தேடுவதால் சிறந்த சந்ததிகளை உருவாக்க முடிகிறது. ஆனால் இந்திய சமூகத்தில் அந்த வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படாமல் பெரும்பாலான ஆண்கள் ஊதாரித்தனமாகவே தனது திருமணத்தை தொடங்குகின்றனர். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தகவல்கள் உண்டு தட்டு கெட்டு போவதும் என என்ன வளர்ச்சியை மாற்ற கோட்பாட்டுக்குள் நமது திருமண பந்தம் திக்கு முக்காடுகிறது.

அதுவும் இப்போதெல்லாம் குறிப்பிட்ட நல்ல நாளுக்காக காத்திருப்பதும் எல்லோரும் ஒரே நாளில் திருமணம் நடத்துவதும் பங்கு பெறுபவர்கள் திக்குமுக்காடிக்கு போவதும் இயல்பான ஒன்றாகி விட்டது. இது பரிசுப் பொருள் நெருக்கடியையும் பங்கேற்பு நெருக்கடியையும் ஒருசேர ஏற்படுத்தி நம்மை சீரழக்கிறது.

காதல் திருமணங்களை எளிய திருமணங்களை சமூகம் டெல்லி நகையாடுகிறது. குறைந்த நபர்கள் பங்கேற்கு திருமணம் குறைந்த மொழிகள் வரும் திருமணத்தை சமூகம் மிகவும் கீழ்த்தரமாக கவனிக்கிறது. இன்றைய உலக மயச் சூழலில் திருமணங்களில் விரயம் என்பது குறைக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் மிக பெரிய செலவினங்கள் இரண்டொரு நாளில் மொத்தமாக வாரி இறைத்து வீணடிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகான குழந்தை பேறு காலங்களில் ஆரோக்கியத்திற்கான பங்களிப்பு என்பது மிகவும் மோசமாக குறைவாகவே செலவு செய்யப்படுகிறது. 

இதில் மூன்றில் இரண்டு தாய் செய்திகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு மொத்த வாழ்க்கையும் நோய்க்குறியிடாது பிடித்துக் கொள்கிறது.

பெரிய பெரிய மண்டபங்கள் வீணாக உணவு பொருட்கள் இரைச்சலை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகள் கண்களை கூசச் செய்யும் மின்சார விரயங்கள் ஒப்பனை கருவிகள் வெடிபொருட்கள் அலங்கார வாகன உறுதிகள் இசை ஏற்பாடுகள் என மிகப் பெரிய அளவுக்கு ஒரே நாளில் சேமிப்பு வீணடிக்கப்படுகிறது

இந்திய திருமணங்கள் விரயத்தை செல்வாக்கு பெருமிதம் என நினைக்கிறது. இது ஒரு பின்தங்கிய மனோபாவம். இதை ஒழுங்கும் செய்யும்போது சமூகம் சேமிப்பையும் இயற்கை மீதான கரிசனத்தையும் ஒருமுகமாக தரிசனம் செய்யலாம்.

ஆடம்பர திருமணங்களுக்கு அரசு வரி விதிக்க வேண்டும். எளிமையான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். 

அரசியல் கட்சி பிரமுகர்கள் நடத்தும் திருமணம் என்றால் பதாகைகள் மொத்த ஊரையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது இப்படியாக நமது செல்வத்தின் செருக்கு அகங்காரமாக சமூகத்தை சீரழிக்கிறது நமது சேமிப்பையும் கரைகிறது.

நமது குழந்தைகள் திருமணத்தை விரும்பும் அதே வேளையில் குடும்பத்தை நிர்வாகம் செய்யும் அளவிற்கு கல்வி பெற்றிருக்கிறார்களா என்றால் கவலையாகவே இருக்கிறது. தனக்குத் துணை வேண்டும் என நினைக்கும் பெரும்பாலான நேயர்கள் துவக்க காலத்தில் தள்ளாடி ஏன்டா திருமணம் செய்தோம் என்ற அளவிற்கு நொந்து போகிறார்கள்.

திருமணம் மங்கலம் என்று நமது பண்பாடு அறிவுறுத்தினாலும் ஒவ்வொரு குடும்பமும் பயந்து போகிறது.

சாதி மத அந்தஸ்து கல்வி ஜோதிடம் என பல்வேறு பொறுக்கி மாட்டிக்கொண்டு எல்லோரும் சொல்வது போல 90 கிட்ஸ் ஆக வலம் வருவதை நாம் அறிவோம். 

திருமணங்கள் தேர்ந்தெடுக்கவும் பிரிந்து போகும் உரிமையும் பொதுவில் வைக்க வேண்டும் ஜனநாயகம் இருக்க வேண்டும் அப்போதுதான் இந்திய திருமணங்கள் புதிய சமூகத்தை படைக்கும் இல்லையேல் மீண்டும் மீண்டும் இடியாப்ப சிக்கலுக்கு சிக்கிக் கொண்டு புலம்பியே தெரிய வேண்டியிருக்கும்