கூத்தானிக் கருப்பர் - இளஞ்சாவூர் திருமயம்
திருமயத்தில் இருந்து கடியாபட்டி போகும் சாலையில் இடையில் இருக்கிறது இளஞ்சாவூர். ஊரில் சாலை தெற்கு பக்கத்தில் இருக்கிறது இந்த கோவில்காடு. புதுக்கோட்டையில் கோவில் காடுகள் அதிகம். இக் காடுகளில் பழைய மர வகைகள் அதிகமாக உள்ளன. அதன் தண்டுகள் நேராக இல்லாமல் வளைந்து நனைந்து கொடியாக காணப்படும். எவ்வளவு மழை வறட்சி என எல்லாவற்றிலும் தாங்கி தகவல் வைத்து வளரக்கூடிய மரங்களாக அவை இருக்கின்றன. பிற இடங்களில் தைல மரக்காடுகள், நிலத்தை திருத்தி விவசாயிகள் என பல்வேறு புது இனங்களை வணிக நோக்கில் பயிரிடுவதால். கோவில் காடுகள் நம்மளுடைய பாரம்பரியத்தை பறைசாற்றுபவயாக இருக்கின்றது. இதனால் எங்கெங்கெல்லாம் செல்கிறேனோ அப்போது கோவில் காடுகளையும் - சமண அடையாள சின்னங்களை பார்ப்பதும் பழக்கமாகிவிட நேற்று இளஞ்சாவூரில். இது எனக்கு அதிசயமான கோவில் தான். பெரும்பாலும் உருவ வழிபாட்டுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது கிராமத்து தெய்வங்கள். உருவமற்ற அருவநிலையிலே கடவுளை வணங்கும் கருப்பர் கோயில் முதலில் ந...