இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீன்முள்ளு... சிறுகதை

படம்
ஐப்பசி மாத அமுத கலசத்தில்  எனது முதல் சிறுகதை மீன்முள்ளு ... மீன்முள்ளு "டேய் சேக்கு தீப்பெட்டி எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்" 'ம்ம்ம்...' 'சதுரத்தை கூட்டிக்கிட்டு கொக்கு மடைக்கு வந்துரு, நானும் பொங்கச்சோறும் அங்க வந்துடுறோம்... என்றான் மாங்கொட்டை. “டேய்... உயிரோட இருக்குமாடா?” ”இருக்கும்டா...” தண்ணி வச்சு எடுத்துகிட்டு வர்றோம்' என்று மாங்கொட்டை அபி'சேக்' அக்காவிடம் மாட்டாமல் போய்விட வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாக அகல, மீன்முள்ளோ குறிப்பறிந்து விடுமுறை நாளேன விட்டுவிட்டாள். ”இவ்வளவு வெள்ளனை எங்க கிளம்பிட்டனுங்க...” சிந்தனையோடு கடந்தாள். சேக் பள்ளி நாட்களில் எழுப்பினால் தான் பள்ளிக்கூடம். சேக் அப்பா டாரஸ் ஓட்டுனர் அதனால் பத்து பன்னிரெண்டு நாளுக்கு ஒரு முறை, இரண்டு மூன்று நாள் வீட்டில் தங்குவார் அன்று மட்டும் சேக், அப்பாவின் ஒரே குரலில் எழுவதும், அம்மா சித்தாள் வேலைக்கு செல்வதால் பரபரப்பில் காதை திருகி எழுப்புவது இயல்பாய் ஆகிப்போனது. அக்காவோ தம்பியை பெண்குழந்தையாக பாவித்து வளர்ந்ததால் 'சேக்'கை அப...