இடுகைகள்

முகநூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"என்ன என்ன சொல்றான் பாருங்க..."

படம்
முகநூல் - இன்ஸ்டாகிராம் - whatsapp இதனுடைய தலைமை நிர்வாகமான மெட்டா உலகெங்கிலும் அதிக சமூக வலைதள கணக்குகளை கையாள்வதும் வருமானம் ஈட்டுவதும் எல்லோரும் அறிந்ததே. கடந்த முறை அரசுக்கு எதிரான செய்திகளை இருட்டடிப்பு செய்வதும், தனக்கு வேண்டியவர்களிடம் திரை மறைவாக பெருந் தொகையை பெற்றுக் கொண்டு ஆதரவான கருத்துக்களை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் தேர்தலிலே முடிவுகளுக்குப் பிறகு விவாதிக்கப்பட்டு நீதிமன்றம் தலையீடு செய்து கூகுள், facebook உள்ளிட்ட இன் பிற நிறுவன தலைமை அதிகாரிகளிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது தண்டத்தொகை விதித்ததும் எல்லோரும் அறிந்ததே. எல்லா நாடுகளிலும் அந்தந்த நாடுகளுடைய ஆளுங்கட்சி சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு மிகப்பெரிய லாபத்தை ஈட்டு வரும் இந்த சமூக வலைதள நிறுவனங்கள், இப்போது இழப்புகளை சந்திக்கிறது. அரசுக்கு ஆதரவான செய்தி மட்டும் வரும்படியான அல்காரித மென்பொருள்கள் எதிர் குரலை ஒடுக்குவதும் அதிகார வர்க்கத்திற்கு சாமரம் வீசுவதும் இருந்தன. இந்த போக்குகள் வரலாற்று நெடிகளும் நாம் கண்ட ஒன்றுதான்.  இப்போது டிஜிட்டல் உலகமும் ஐந்தாம் படைவேளையை நுட்பமாக நாகரிகமாக நடத்து...