16 ஜன., 2025

வேங்குடிவயல் - அண்டனூர் சுரா - புதினம்


கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் கிராமத்தில் பெரும்பான்மை பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழ் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி நமக்கு நாமே வெட்கப்பட வேண்டிய நிகழ்வாக இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் காவல்துறையின் விசாரணை என தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்று வரையில் அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் அரசு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சத்துமாவு கலந்தது என்று அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து அரசும் அதிகாரவர்க்கும் இணைந்து இவ்வழக்கின் உண்மைகளை கொண்டு வருவதில் சுணக்கம் காட்டும் இந்த வேளையில், அதே மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் அண்டனூர் சுரா மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களை கொண்டு மீ புனைவாக வேங்கை வெயில் கிராமத்தின் பாகுபாடு அரசியலை பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்.

அதில் இடம்பெற்று இருக்கும் விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், மலைகள், நீர்நிலைகள், மரங்கள், மலர்கள், புற்கள் அப்பகுதி ஆட்சி செய்த மன்னர்கள் என கதை மாந்தர்கள் ஆக்கி அதனுடைய வாழ்வியல் நிலையை பாத்திரப்படைப்பாக படைத்துள்ளார். சங்க இலக்கியத்தின் அறக்கூறுகளை இணைத்து கபிலர், திருக்குறள், அவ்வை, கணியன் பூங்குன்றனார் இப்படி எண்ணற்ற நம்மோடு பரிட்சயமான சங்க இலக்கியங்களில் அறப்பொருள் கொண்டும், அதே நேரம் உயிரினங்களின் பண்பு நலனை கதை மாந்தர்களாக நடமாட விட்டு இருக்கிறார்.

குடிநீரில் அதைக் கலந்தது யார், அந்தக் கலப்பின் பின்னணி என்ன, விசாரணை சரியான போக்கில் சென்றதா, குற்றவாளியைக் காவல்துறையினர் நெருங்கினார்களா, கிடைத்த தடயங்கள் என்னவாயின, அந்தத் துயரத்தை நிகழ்த்தியவன் கைது செய்யப்படுவானா, அரசும் நிர்வாகமும் யார் பக்கம் நிற்கின்றன என்பன போன்ற ஏராளமான கேள்விகள் இந்தச் சம்பவத்தைச் சுற்றி மொய்க்கின்றன. இந்தச் சம்பவத்திற்கு எதிராக, பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்படியாக, பெரிதாகக் குரல் எழுந்ததா என பல கேள்விகளோடு அதில் அதற்குள்ளாக இருக்கும் சமூகத்தின் சாதிய மதிப்பீடுகள் விலங்கு பறவை பாம்பு என அதன் மீது புனைவாக்கி நமக்கு எதார்த்த நிகழ்வு போக்கை ஆசிரியர் கையாளும் பங்கு தமிழ் வாசகர்களுக்கு புதிது. 

வேங்குடிவயல் எனும் இப்புதினம் வாசகப் பரப்பிற்கு வந்திருக்கிறது. இது வெறும் கதையோ சம்பவங்களின் தொகுப்போ அல்ல. இக்கதைக்குள் நாம் இருக்கிறோம். எதுவாக இருக்கிறோம், என்ன வகையான முகமூடியை அணிந்திருக்கிறோம் என்பதை இந்நாவலின் பாத்திரங்கள் நமக்கு உணர்த்துவது மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை மௌனமாக பார்ப்பது கூட குற்றமாகி நமது எதிர்கால சந்ததியை எப்படி பாதிக்கும் என்பதை ஆசிரியர் உரைக்கிறார்.

பழக்கப்பட்ட மனிதர் கதை மாந்தராக இல்லாமல் மனித குணங்களை பூச்சி, பட்சி, பறவை, விலங்கு, எறும்பு, சிட்டு, மரம், பூ இவற்றைக்கொண்டு பெரும் சம்பவத்தைப் பல கோணத்தில் அணுகியுள்ளார். இந்நாவலில் பாத்திரங்களாக வரும் தொட்டாச்சிணுங்கி, அணில், நத்தை, மீன்கள் போன்றன யாவும் வெறும் வாழ்விகள் அல்ல. புலி, ஆமை, கொக்கு, பாம்பு, யானை இவர்களெல்லாம் யாரென்றும் சாதியப் படிக்கட்டில் இவர்கள் யாராக இருக்கிறார்கள்.

இக்கதையின் மாந்தர்களின் பெயர்கள் அவர்களுடைய நடவடிக்கையை ஏற்ற மாதிரி உருவகங்களை இந்த கதையில் மிகப்பெரிய பங்களிப்பு செய்கிறது 

"பனமபூக்களைப் போல் மிதந்தன" 
காட்சி படிமம் சிறப்பு 

"ஆட்சி என்பது, செய்வதோ அதிகாரம் செலுத்துவது அல்ல; கையாளுதல்..." அரசியல் பேசுகிறது. ஒடுக்கப்படும் விளிம்பு நிலை மக்களின் உலக்கிடக்கையாக இன்றும் என்றும் எரிந்து கொண்டிருக்கும் 

"தீ வைத்தவர்களை மன்னித்து விட்டோம், ஆனால் மறக்க மாட்டோம்." 
வரலாற்றின் ஆராத தழும்புகள் என்றேனும் ஒரு நாள், பழி தீர்க்கும் என்பதை கதை மாந்தராக ஆசிரியர் பேசுகிறார்.

"பாதிக்கப்பட்ட அணில்களுக்கு நீதி கிடைக்காமல் சமாதானம் கொள்வது, அநீதியை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது" 
சமாதானம் எளிய மக்களை ஏமாற்றும் தந்திர உபாயம் என்பதை ஆசிரியர் கதை மாந்தர் வழியாக அரசியல் உரைக்கிறார்.

"புனிதப்படுத்துதல் என்பது ஆகப்பெரிய ஏமாற்று வேலை. கலங்கத்தை துடைக்க ஒரே வழி அந்த களங்கத்தின் மீது மன்னிப்பு கேட்பதுதான். அதை விடுத்து புனித படுத்துதல் என்பது நாம் அறிவுக்கு ஒவ்வாத விஷயம்." எப்படி வலுவானவர்கள் விளிம்பு நிலை மக்களை தந்திரமாக ஏமாற்றுவார்கள் என கட்டுகிறார். இப்படியாக நாவல் முழுவதும் திரை மறைவாக சமூக நீதி அரசியலை பேசுகிறது. 

பொதுவாக மீ புனைவு நாவல்கள் எனில் ஆசிரியரின் மனக்கிடகைகளை புனைவாக எழுதுவதாகவே இருக்கும். ஆனால் நடப்பு கால அரசியலை சங்க இலக்கியத்தின் துணைக்கொண்டு மனிதகளை கதை மாந்தர்கள் ஆக்காமல், அவனை சூழ்ந்த சுற்றுச்சூழலை கதாபாத்திரங்களாக படைத்து, பொது சமூகத்துக்கு அது ஆற்றும் பணியும் அதை மனிதன் சீரழிக்கும் விதத்தையும் கதை களமாக்கி உள்ளார். 

சமூகத்தின் ஊழ், துரோகம் மற்றும் அறியாமை எப்படி மனிதனின் நாசம் செய்கிறது என்பதையும் நாவலின் மையப் புள்ளியாக உருவாக படுத்திருக்கிறார் ஆசிரியர். மனித மனங்களில் படுத்திருக்கும் படிநிலை வெறுப்பு அசடுகளை சாட்டையடி கொடுக்கும் அரசியல் புதினம். வரலாற்று நெடுகிலும் அரசும் ஆளுவர்க்கமும் பெரும்பான்மை விளிம்பு நிலை மக்களை எவ்வாறு லாபகமாக ஏமாற்றுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கும் மீ புனைவு புதினம். என் அளவில் தமிழ் வாசகர்களுக்கு புதிய வகைப்பட்ட வாசிப்பு நுகர்வை வழங்கி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

வேங்குடிவயல்
ஆசிரியர்: அண்டனூர் சுரா
வகை : மீ புனைவு புதினம் 
சிறப்பு: இராம. செ. சுப்பையா அறக்கட்டளை நடத்திய 2024 ஆம் ஆண்டில் புதின போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
பதிப்பகம்: நாற்கரம் - 2024
பக்கம் - 172 , ₹- 220

- ஒட்டடை பாலச்சந்திரன் -
   ottadaibala blogspot.in

13 ஜன., 2025

கட்டுக்குள் வர காலதாமதமாகும் காட்டுத்தீ

மேலும்... மேலும்... 
சூழலியல் பிரச்சனையை 
தள்ளிப் போடுவது,
தட்டிக் கழிப்பது, 
தவனை சொல்லுவதுமென... 
நாடுகளின் அதிகாரம் மையங்கள் மெத்தனமாக இருக்கையில்...
ஆலோசனை மட்டும் வழங்கும் ஐக்கிய நாட்டு சபையால் என்ன செய்து விட முடியும்...

அமுல்படுத்த வேண்டிய நாடுகளின் அரசுகள் கார்ப்பரேட் கைக்கூலிகளாக, காதில் விழாதது போல கடந்து போவதும், ஒப்புக்கு மாரடித்து அழுதுவிட்டு வழக்கம்போல சீர்கேடுகளை தூக்கலாக செய்கிறார்கள். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய லாஸ்ஏஞ்சலஸ் இந்தப் பேரழிவு நிவாரணங்களை நம்மிடம் களவாண்டு தன்னை புணரமைத்துக் கொள்ளும் இந்தத் திரை மறைவு சுரண்டலை, எத்தனை பேர் நாம்மில் அறிந்திருப்போம்?

என்னமோ போடா. புலம்பியே வாழ்நாள் கழிகிறது.

அவர்கள் வாழ்ந்திட 
நம் எல்லோரின் குழந்தைகளின் எதிர்காலத்தை தீக்கரையாற்றுகிறார்கள். அப்பாவி எளிய விளிம்பு நிலை மக்களும் சேர்ந்து சாக வேண்டி இருக்கிறது.

(நன்றி:-பி.பி.சி. 👇🏾)
கலிஃபோர்னியா உள்பட மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதி பல்லாண்டுக் காலமாக அனுபவித்த வறட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதனால், இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக மாறியது.

சமீபத்திய ஆண்டுகளில் வறண்ட மற்றும் ஈரமான காலங்களுக்கு இடையிலான ஊசலாட்டங்கள் எரிவதற்குத் தயாராக இருந்த பெரிய அளவிலான வறண்ட தாவரங்கள் உருவாக வழிவகுத்தது.

மேற்கு அமெரிக்காவில் பெரிய மற்றும் கடுமையான காட்டுத்தீயில் காலநிலை மாற்றத்தின் பங்கு இருப்பதாக அமெரிக்க அரசின் ஆராய்ச்சி தெளிவாகக் கூறுகிறது.

உயரும் வெப்பநிலை, நீடித்த வறட்சி, தாகம் நிறைந்த வளிமண்டலம் உள்ளிட்ட காலநிலை மாற்றங்கள், மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயின் அபாயத்தையும் அளவையும் அதிகரிப்பதில் முக்கிய உந்துதலாக உள்ளதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறுகிறது.

பொதுவாக, மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டம் தெற்கு கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்படும் மாதங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இப்போது இத்தகைய தீ விபத்துகள் ஒரு நிரந்தரப் பிரச்னையாக மாறிவிட்டதாக ஆளுநர் முன்னர் சுட்டிக்காட்டினார்.

அதுகுறித்துக் கூறியபோது அவர், "இங்கு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலம் காட்டுத்தீ பருவகாலமாக இல்லை, ஆண்டு முழுவதுமே காட்டுத்தீ பருவமாகத்தான் இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.

12 ஜன., 2025

"என்ன என்ன சொல்றான் பாருங்க..."

முகநூல் - இன்ஸ்டாகிராம் - whatsapp இதனுடைய தலைமை நிர்வாகமான மெட்டா உலகெங்கிலும் அதிக சமூக வலைதள கணக்குகளை கையாள்வதும் வருமானம் ஈட்டுவதும் எல்லோரும் அறிந்ததே. கடந்த முறை அரசுக்கு எதிரான செய்திகளை இருட்டடிப்பு செய்வதும், தனக்கு வேண்டியவர்களிடம் திரை மறைவாக பெருந் தொகையை பெற்றுக் கொண்டு ஆதரவான கருத்துக்களை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் தேர்தலிலே முடிவுகளுக்குப் பிறகு விவாதிக்கப்பட்டு நீதிமன்றம் தலையீடு செய்து கூகுள், facebook உள்ளிட்ட இன் பிற நிறுவன தலைமை அதிகாரிகளிடம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது தண்டத்தொகை விதித்ததும் எல்லோரும் அறிந்ததே.

எல்லா நாடுகளிலும் அந்தந்த நாடுகளுடைய ஆளுங்கட்சி சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு மிகப்பெரிய லாபத்தை ஈட்டு வரும் இந்த சமூக வலைதள நிறுவனங்கள், இப்போது இழப்புகளை சந்திக்கிறது. அரசுக்கு ஆதரவான செய்தி மட்டும் வரும்படியான அல்காரித மென்பொருள்கள் எதிர் குரலை ஒடுக்குவதும் அதிகார வர்க்கத்திற்கு சாமரம் வீசுவதும் இருந்தன. இந்த போக்குகள் வரலாற்று நெடிகளும் நாம் கண்ட ஒன்றுதான்.  இப்போது டிஜிட்டல் உலகமும் ஐந்தாம் படைவேளையை நுட்பமாக நாகரிகமாக நடத்துகிறது. (இன்றைய ஆளுங்கட்சிக்கு எதிராக கூட இல்லாமல் நடுநிலையாக செயல்பட்டதாக NDTV நிர்வாகிகள் மீது பொய் குற்றச்சாட்டு உருவாக்கி கையகப்படுத்திய பிறகு இன்று குற்றச்சாட்டு நீத்து போய்விட்டது. இதன் பொருட்டு எல்லா ஊடகங்களும் வருமானத்தை இழக்க விரும்புமா? ஆக அந்தர்பல்டியே வாழ்வின் ஆதாரம்.

பாதுகாப்பு என கருதப்பட்ட ஐபோன் பயனாளர்களே கண்காணிக்கும் இஸ்ரேலின் "பெகாஸல்" உளவு மென்பொருள் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களை, பெரு நிறுவன நிர்வாகிகளை இந்திய அரசு கண்காணித்திட அமெரிக்க டிடெக்டிவ் ஏஜென்சி போட்டு உடைத்ததை நாம் அறிவோம். இப்படி அரசாங்கத்துக்கு ஆதரவான நவீன தொழில்நுட்பம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் மூலம் ஒவ்வொருவரையும் கண்காணிப்பது அவர்களை வரையறை செய்வது என்று கொடிகட்டி பறந்தது. 
எத்தனை நாளைக்கு இந்த கதை ஓடும். நேரடி மக்கள் போராட்டங்களை அதிகாரத்தாலும் காவல்துறை நீதிமன்றத்திலம் கடுமையாகஒ டுக்குகிறது அரசு. அவர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். ஆளும் அரசுக்கு ஆதரவான ஊடக ஏக போகத்தை வளர்த்தது அரசு. சமூக அக்கறை கொண்ட பயனாளர்கள் இப் போக்கை புரிந்து கொண்டு பயன்பாட்டை குறைக்க, மார்க் இப்போதைய வடிகட்டிய பொய் உண்மை சரிபார்ப்பு நிலையை கைவிடுகிறோம் என்பதே. எப்போதுமே ஏகபோகம் களவாணிகள் கைவசமே. அரசு ஆதரவான செய்திகளை மட்டும் எல்லோரிடம் கொண்டு சேர்க்கும் உபாயத்தையும், அரசுக்கு எதிரான கருத்துக்களை மறைக்கும் உபாயத்தையும் கையாண்டு வந்த சமூக ஊடகங்களின் வருமானம் குறைய இப்போது... வேறொரு பொய் மூலம் வளம் வரப்போகிறார்கள். இதை புரிந்து கொண்டு நாம் விழி அடைவதற்குள் அடுத்த களவாணித்தனத்தை தயாராக வைத்திருப்பார்கள். 

இனி இவர்கள் வேறு ஒரு தந்திரவுபாயத்தை கையில் எடுத்துக் கொள்வார்கள். அது என்னவென்று தான் புரியவில்லை? தந்திரக்கார மனிதன். அவனுடைய உயர் வகைப்பட்ட சிந்தனை எளிய மக்களை வரலாறு நெடுகிலும் ஏமாற்றிய வருகிறது. 

பி.கு:- 
los Angel - லாசாகிப் போன தேவதை.
California - காலி முத்திடுச்சி போய்தொல.
(மேலே உள்ள செய்திக்கும், பின்குறிப்பு காட்டுத்தீக்கும் எந்த தொடர்பும் இல்லை)
அப்புறம் - வருங்கால அமெரிக்க அதிபர் டிரம்பு வாழ்க 
(இப்படி சொல்லவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு காட்டப்படாமல் போகலாம்)

11 ஜன., 2025

மரண தண்டனை தீர்வா ?

சமூக நீதியை உள் கிடக்கையாக கொண்ட திராவிட மாடல், வளர்ந்து வரும் ஜனநாயக அரசுகள் மருதலிக்கும் மரண தண்டன மூலம் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழைய நிலபிரமபுத்துவ பழிவாங்கும் மரபார்ந்த மரண தண்டனையை ஊக்குவிப்பது சரியல்ல. 

முதல் உலகப்போர் இரண்டாம் உலகப் போர்களுக்கு பிறகு (உலகம் மன்னர் ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும்+மன்னர் ஆட்சிக்கும் சோசலிசத்துக்கும் போட்டியாக போர்கள்) அடுத்தடுத்த இலக்குகள் நோக்கி அரசுகளையும், மக்களையும் கொண்டு சேர்த்திருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் பெரும்பாலான நாடுகள் மன்னராட்சி இருந்தால் கூட ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தும் சட்ட வடிவங்களை அங்கீகரித்து உள்ளன. ஆனால் சமூக நீதிப் பேசக்கூடிய திராவிடல் மாடல் அரசு தனி மனிதர்கள் தங்கள் நினைத்ததும் ஆங்காரமான செய்யக்கூடிய மரண தண்டனையை ஊக்குவிக்கிறது.

வீழப்போகும் அரசு தன்னை தற்காத்துக் கொள்ள, மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை சலுகைகளை சட்டங்களை கொண்டு வருவது இயல்பு. அனைய போற விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல. அப்படித்தான் கடந்த காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சட்டங்கள் இன்று எதிர்க்கட்சிகளை தன்னை அனுசரித்து போகாத பெரும்பணக்காரர்கள், பலவீனமான எதிர்கட்சி தலைவர்களை மறைமுகமாக பணிய வைக்கும் தந்திர உபாயமாக இன்றைய ஆளுங்கட்சி அரசு செய்கிறது. இந்த சட்டங்களும் நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டாலும், தவறானவர்கள் கையில் சிக்கும்போது பழி வாங்கும் படலமாக மாறும். சாதாரண நண்பர்களுக்குள், குடும்ப நிகழ்வுகளும் பல்வேறு நிறுவனங்களிலும் அதிகார போட்டியில் உயர் மட்டத்தில் இருந்தவர் கீழே தடால் அடியாக விழுந்து நொறுங்கிப் போவதும் உண்டு. அவர்கள் கொண்டு வந்த அதே சட்டம் அவர்களை பழி தீர்க்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாலியல் வழக்குகளில் நாட்டின் பிற பகுதியோடு ஒப்பிடும்போது திருட்டு வழக்குகளில் பெரிய அளவுக்கு புனைவு வழக்குகள் குறைவு. ஆனா நாட்டில பிற பகுதிகளில் அதிகாரம், சாதிய பின்புலம், ஆளுங்கட்சி சார்பு என குற்றவாளிக்கு ஆதரவாகவே அமைகின்றன.
ஆட்சி மாறும்போது காட்சி மாறும். ஜனநாயகத்தை மறுத்து பழிவாங்கும் தன்மை கொண்ட வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வரும்போது அவர்கள் பழி தீர்க்கவே இச்சட்டங்களில் பயன்படுத்துவர் என்பதை உலகெங்கிலும் பல நாடுகளில் நாம் கண்டுள்ளோம். பக்கத்து நாடான வங்கதேசத்தில் தேசத் தந்தை என்ற போற்றப்பட்ட முஜிபுர் ரகுமான் சிலைகள் சிதைக்கப்படுகிறது (பணத்தாள்களில் அவரின் படம் மாற்றப்படுகிறது) அவருடைய வரலாறு முற்றிலும் எதிராக கட்டமைக்கப்படுகிறது. இதேதான் நேபாளம், ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை இப்படி பக்கத்து நாடுகளில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது பழிவாங்கும் படலம் நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன. 

அந்தந்த நேரத்து அரசியல் நெருக்கடியை தள்ளிப் போடுவதற்கு புதிய புதிய தண்டனைத் சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தோம் என்றால் அது எளிய மக்களை பழிவாங்க தான் பயன்படும். அரசு சைபர் பாலியல் குற்றங்களுக்காக சட்டத்தை திருத்ததுகிறோம் என்று சொன்னாலும், தமிழகத்தில் பெண்களுக்கு  பணி பாதுகாபபை உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் திருத்தம் என்று சொல்கிறது. கண்டிப்பாக சட்டங்கள் மாறுதல் உட்பட்டவை, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மக்களின் உள் உணர்வுகளை புரிந்து கொண்டு செழுமைப்படுத்த வேண்டும். காட்டுமிராண்டி கால மரண தண்டனையை கொண்டு வருதல் கூடாது. நம்முடைய சமூக பண்பாடு, கபடம் நிறைந்த துரோகத்தை அடிநாதமாக கொண்டது. ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றுவது, சுரண்டுவதே நமது பண்பாடு. படிநிலைப் பண்பாடு சமூகத்தை பலவாரி பிரிவினை செய்து  சலுகையும் தண்டனையும் என தனித்தனியாக தீர்ப்பும் வழங்கி வருகிறது. பலன் பெறுபவர் தெரியாது போல் கடப்பதும், பாதிக்கப்படுபவர் போராடுவதும் இப்படி ஒருவர் ஒருவர் ஒருவர் சுரண்டவும் ஏமாற்றவும் மேலானவர் கீழானவர் சாதிய படிநிலை கொண்ட பண்பாட்டு சூழல் எல்லா நிலைகளிலும் பெண்களை மிக மோசமாக நடத்துகிறது. அதன் தொடர்ச்சியான ஆணாதிக்கம், வாய்ப்பு கிடைக்கும் போதும், அதிகாரம் கூடுதலாக இருக்கும் போது பெண்களை சுரண்டி இன்று வரையிலும் சீரழித்துக்கொண்டே இருக்கிறது.

பெண்களை சக உயிரினமாக புரிந்து கொள்ளாமல் தனக்கு கீழானவர்கள் என்ற மனோபாவம் மொத்த சமூகத்திலும் உறைந்திருப்பதின் விளைவு, பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. சமூகத்தில் உடலைத் தவிர எந்த அதிகாரத்தை பெற்று விடத பெண்கள், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அதிகாரம் ஆற்ற நிலையில் பலவீனமாக இருப்பதும் அதை ஆணாதிக்கம் வாய்ப்பாக கொடூரமாக பயன்படுத்திக் கொள்ளும்போது பொறுக்க முடியாத சூழலில் வெளிச்சத்திற்கு வந்து வடுகிறது. வெளிச்சத்திற்கு வராத பல வழக்குகள் மேலும் பெண்களை சுரண்டுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. இதெல்லாம் நமக்கு புரிந்தாலும் அதே நேரத்தில் மற்றொருபுறம் புறக்கணிக்கத்தக்க அளவு பொய் வழக்குகளும் அதிகரிக்கிறது. சமூகத்தின் பெண்கள் மீதான மதிப்பீட்டை மாற்றமால் தண்டனைகளை மட்டும் அதிகரிப்பது  தீர்வை தராது. 
கல்வி, சமூக பழக்கவழக்கங்களில் பெண்கள் மீதான அக்கறை, அவர்களுடைய உழைப்பு பங்கிட்டை அங்கீகரித்தல் போன்ற புரிதலை புதிய தலைமுறைக்கு பயிற்றுவிக்க வேண்டும். அப்படி கற்றுக் கொடுத்துக் கொண்டே தண்டனைகளை வரையறை செய்யும்போது அவை புதிய விளைவுகளை மாற்றங்களை உருவாக்கும். சமூகத்தின் மனநிலையை மாற்றாமல் தண்டனைகளை மட்டும் அதிகரித்து விட்டு தீர்வை எதிர்பார்த்தால் பின் விளைவுகளை வேறொரு வகையில் கொண்டு போய் சேர்க்கும். 

எனவே உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட குரலாக இருக்கும் ஐக்கிய நாட்டு சபை நிராகரிக்கும் மரண தண்டனையை எந்த குற்றங்களுக்கும் தீர்வாக வைக்கக்கூடாது. சமூகத்தை சீர்திருத்துவது பண்படுத்துவது ஜனநாயகத்தை பலப்படுத்துவதன் மூலம் மக்களை சிந்தனையை மேம்படுத்தல் மூலம் தீர்வை நோக்கி நகரும். 
இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் நீண்ட நாள் எடுத்துக் கொள்கின்றன. பலவீனமானவர்களுக்கு நாட்கள் நீளும் போது பொருளாதாரம் இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்திவிடுகிறது. குற்றவாளிக்கு சாதகமாக அமைய, பாதிக்கப்பட்டவருக்கு மேலும் துன்பங்களும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. ஆக சட்டங்கள் மேலும் மேலும் பழிவாங்கும் உத்திக்கே பயன்படுத்தப்படும் ஒழிய மக்களை பண்படுத்த பயன்படாது.

முன்னை எப்போதும் காட்டிலும் இப்போது சாதி இறுக்கம் அதிகமாக இருப்பதாக நாம் உணர்கிறோம். காரணம் காதல் கலப்பு திருமணங்களை அதிகரிக்கிறது. பெரும்பாலும் வெற்றிகரமாக அமைந்து விடுகிறது. சில தவறான முன்னுதாரணங்களால் கலப்பு திருமணம் முடிந்த தம்பதிகளில் குடும்பங்களின் நிலவும் பொருந்தாத  ஒவ்வாமை பண்பாட்டால் பிரிவோ அல்லது மனவிலக்கோ அதிகம். இதனால் சமூக முழுவதும் அகவையப்பட்ட திருமணங்கள் பாதுகாப்பு என உணர்கின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆணவக் கொலைகளுக்கு ஆதரவாக மாறிவிட அன்றைய ஜெயரசு. சாதிய இறுக்கத்தை ஜனநாயகப்படுத்தும் காதலுக்கு எதிராக பதிவு திருமணங்களுக்கு குடும்பத்தின் சம்மதம் வேண்டுமென சட்டத்தை குடும்ப வன்முறை சட்டத்தோடு இணைத்தது. அதே போன்றதொரு மற்றொரு வடிவத்தை இன்றைய திராவிட மாடல அரசு மரண தண்டனை என்று மசோதா தாக்கல் செய்கிறது. இரண்டு சட்டங்களும் பெரிய அளவுக்கு நடைமுறையில் வரவேற்பு இருக்கப் போவதில்லை என்றாலும் பழிவாங்குபவர்களுக்கு பயன்படும்.
போக்கோ சட்டம் காதலிப்பவர்களே பயமுறுப்பு சட்டமாக மாறி இருக்கிறது.
சமூக நீதி அரசு மரண தண்டனை சட்டமும் இதைத்தான் செய்யப்போகிறது. சாதிய இருக்கத்தை தளர்த்தும் சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் காதல் திருமணங்களை ஒடுக்குகிற வேலையை இந்த சட்டங்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ செய்கிறது. 

எதுவும் செய்ய முடியாமல் போன மன்மோகன் அரசை நிராகரித்தோம். இன்றைய ஆட்சியாளர்களுக்கு அவர்களே தேவலாம் என்கின்றோம். இப்படி தனி நபர்களின் சர்வ அதிகாரம் நிறைந்த ஆட்சி முறைமை கொலைகளை நியாயப்படுத்தியது அதனுடைய தொடர்ச்சியாக இன்றும் பிற சமூகங்களில் பண்பாட்டு உணர்வை ஏற்றுக் கொள்ள முடியாமல் இன அழிப்பு என்கின்ற படுகொலை நிகழ்வை பல நாடுகள் இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றன. இப்படியாக உயர்ந்த பட்ச தண்டனைகளை அரச பயங்கரவாதமாக நிகழ்த்தும் கொலையை, மரண தண்டனை என்று எளிய புரிதலோடு வெளியேறிவிட முடியாது நாம். அரசு செய்தால் தண்டனை அரசுக்கு எதிராக செய்தால் தீவிரவாதம் என்று தப்பிக்கும் போக்கு உள்ளது. மரண தண்டனை போன்ற கொலை, இன அழிப்பு, போர் மற்றும் ஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் போதே பூமிப்பந்தானது மனிதர்களை தாண்டி பிற உயிரினங்களுக்காகவும் நாம் வாழ்வதாக அர்த்தம். இதே காட்டுமிராண்டித்தனங்களோடு நமது சட்டங்கள் தொடரும் என்றால் எதிர்கால சந்ததியை சவக்குழியை நோக்கி நகர்த்துகிறோம் என்பதே.

மரண தண்டனை சட்டம் கூடாது என்ற அதே நேரத்தில் சட்டங்களால் மட்டும் எதையும் தீர்வாக செய்துவிட முடியாது. ஆட்சியாளர்கள் மக்களைக் புரிந்து கொள்வதும், சமூகத்தை பயிற்விப்பதுமே சட்டத்தின் பலனை மேன்மையுரச் செய்யும்.