13 ஜன., 2025

கட்டுக்குள் வர காலதாமதமாகும் காட்டுத்தீ

மேலும்... மேலும்... 
சூழலியல் பிரச்சனையை 
தள்ளிப் போடுவது,
தட்டிக் கழிப்பது, 
தவனை சொல்லுவதுமென... 
நாடுகளின் அதிகாரம் மையங்கள் மெத்தனமாக இருக்கையில்...
ஆலோசனை மட்டும் வழங்கும் ஐக்கிய நாட்டு சபையால் என்ன செய்து விட முடியும்...

அமுல்படுத்த வேண்டிய நாடுகளின் அரசுகள் கார்ப்பரேட் கைக்கூலிகளாக, காதில் விழாதது போல கடந்து போவதும், ஒப்புக்கு மாரடித்து அழுதுவிட்டு வழக்கம்போல சீர்கேடுகளை தூக்கலாக செய்கிறார்கள். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய லாஸ்ஏஞ்சலஸ் இந்தப் பேரழிவு நிவாரணங்களை நம்மிடம் களவாண்டு தன்னை புணரமைத்துக் கொள்ளும் இந்தத் திரை மறைவு சுரண்டலை, எத்தனை பேர் நாம்மில் அறிந்திருப்போம்?

என்னமோ போடா. புலம்பியே வாழ்நாள் கழிகிறது.

அவர்கள் வாழ்ந்திட 
நம் எல்லோரின் குழந்தைகளின் எதிர்காலத்தை தீக்கரையாற்றுகிறார்கள். அப்பாவி எளிய விளிம்பு நிலை மக்களும் சேர்ந்து சாக வேண்டி இருக்கிறது.

(நன்றி:-பி.பி.சி. 👇🏾)
கலிஃபோர்னியா உள்பட மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதி பல்லாண்டுக் காலமாக அனுபவித்த வறட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இதனால், இது எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக மாறியது.

சமீபத்திய ஆண்டுகளில் வறண்ட மற்றும் ஈரமான காலங்களுக்கு இடையிலான ஊசலாட்டங்கள் எரிவதற்குத் தயாராக இருந்த பெரிய அளவிலான வறண்ட தாவரங்கள் உருவாக வழிவகுத்தது.

மேற்கு அமெரிக்காவில் பெரிய மற்றும் கடுமையான காட்டுத்தீயில் காலநிலை மாற்றத்தின் பங்கு இருப்பதாக அமெரிக்க அரசின் ஆராய்ச்சி தெளிவாகக் கூறுகிறது.

உயரும் வெப்பநிலை, நீடித்த வறட்சி, தாகம் நிறைந்த வளிமண்டலம் உள்ளிட்ட காலநிலை மாற்றங்கள், மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயின் அபாயத்தையும் அளவையும் அதிகரிப்பதில் முக்கிய உந்துதலாக உள்ளதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறுகிறது.

பொதுவாக, மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டம் தெற்கு கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்படும் மாதங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இப்போது இத்தகைய தீ விபத்துகள் ஒரு நிரந்தரப் பிரச்னையாக மாறிவிட்டதாக ஆளுநர் முன்னர் சுட்டிக்காட்டினார்.

அதுகுறித்துக் கூறியபோது அவர், "இங்கு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலம் காட்டுத்தீ பருவகாலமாக இல்லை, ஆண்டு முழுவதுமே காட்டுத்தீ பருவமாகத்தான் இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: