4 பிப்., 2025

வருக வெல்க செயற்கை நுண்ணறிவு AI

பெரிய தரவுகள் இல்லாத சாதனையாக ஊதி பெருக்கப்படும் மத்திய அரசாங்கத்தினுடைய நிதி திட்டம் (12 L...) சேமிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து நுகர்வு தளத்துக்கு விரிவு படுத்துகிறது. 
சாதாரண மக்களின் முதலீடுகள் (சேமிப்பு) இனி அற்றுப்போகும். 

தங்க விலை உயர்கிறது எல்லோரும் கவலைப்படுகிறார்கள் தொடர் நுகர்வு முதலீடுகளே லாபத்தை தரும், தங்கம் சுணங்கும். ஏனெனில், கார்ப்பரேட் முதலீடுகள் 
"வந்தால் மலை, போனால் மயிறு" என்பதாக மாறும். 
மத்திய அரசின் இந்த பட்ஜெட் செயற்கை தொழில்நுட்பம் (artificial intelligent) AI லவகமாக வரி ஏய்ப்புகளை ஒழுங்கமைக்கும். எல்லாம் சரிதான். ஏழைப்பாடுகள் எப்போதும் போல,
மிடில் கிளாஸை மெல்ல மெல்ல கரைந்து, இரு துருவ பொருளாதாரம் நம்மை வழிநடத்தும். 

பழைய பாணியிலான பாதுகாப்பு பொருளாதாரம் ( வாடகை, வட்டி, நிலம், தங்கம்- அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டமான பங்கு வர்த்தகம் என) இனி கழுதை தேய்ந்து கட்டறுமாக மாறிவிடும். சுழற்சி பெறாத முதலீடுகள் (death investment) இனி அவ்வளவு லாபகரமாக இருக்காது. தண்டனையாக கூட மாறலாம். 

அறக்கட்டளைகள் நிறுவன சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு (company act) தனது நடவடிக்கைகளை செழுமை படுத்த வேண்டும். புனைவு கணக்குகள் இனி பொருந்தாது. வலுத்தவனுக்கும் ஆளுங்கட்சியின் அடிவருடிகளுக்கும் நீதி எளிது. 

இந்த சேர்க்கை நுண்ணறிவு கர கார்ப்பரேட் அறிவு ஜீவிகளின்  தொகுப்பறிவாக விரிவு அடைய தனிமனித உன்னதங்கள் அத்தோடு சேர்ந்து அயோக்கியத்தனங்களும் காலாவதியாகும். 

குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் சிறு சிறு குறு நிறுவனங்களின் திரை மறைவு வருமான ஏற்பாடுகள் கண்காணிப்பிலும் வரி ஏய்ப்புகளை வெளிச்சமிடும்.

செயற்கை நுண்ணறிவுகள் ஆற்றல் துறையில் பெரிய சேமிப்பை உருவாக்க இருக்கிறது. மனித வள துறையில் பொழுதுபோக்கு, போக்கு காட்டும் ஊழியர்களை அப்புறப்படுத்தி விடும். குறிப்பாக ஐடி ஊழியர்களின் வருமானத்தை வடிகட்டி விடும். 

புதிய உலகம் உங்களை வரவேற்கிறது செயற்கை தொழில்நுட்பத்தின் என்ற நேர்மறை ஆற்றலோடும் பூமி வெப்பமயமாதல் என்கின்ற எதிர்மறை ஆற்றலோடும் இரு கரங்களால் ஆரத் தழுவி வரவேற்கிறது. 

மடியில் கனமில்லை ஆக வழியில் பயமில்லை என்பவர்களை செயற்கை தொழில்நுட்பம் வழிநடத்தும், துவக்கத்தில் பெரு நிறுவனங்களின் லாப வேட்கையாக துவங்கும் செயற்கை நுண்ணறிவு பரிணாமத்தின் முடிவில் பூமிப் பந்தின் தொகுப்பறிவாக மாறி நம்மை வடிவமைக்க இருக்கிறது. 

உங்களைப் போல் எனக்கும் பயம் ஒருபுறம் இருந்தாலும் வருக வெல்க 
உலகை சமத்துவத்தை நோக்கி ஜனநாயக படுத்தும் என நம்புகிறேன்.

ட்ரம்பின் கையெழுத்துகளும் நிம்மி அம்மாவின் ஆக்ரோஷமன பொருளாதார சலுகை அறிவிப்புகளும் மாறுதலுக்கு உட்பட்டது. 

ட்ரம்பின் கையெழுத்தும் நிம்மி அம்மாவின் ஆக்ரோஷமான 12 லட்சம் வரி விலக்கும் மாறுதலுக்கு உட்பட்டது. 

1 பிப்., 2025

நூல் அறிமுகம் - த.க.இ.பெ. புதுக்கோட்டை

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் புதுக்கோட்டை அமுத கலசம் அலுவலகத்தில் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக கலையலைக்கு பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஆர். மணிமோகன் பங்கேற்பில் நடைபெற, 26.1.2025 அன்று மாலை 4.45-ல் மணிக்கு சிறுகதையாசிரியர் கோவில் குணா தலைமையில் மூன்று நூல்கள் அறிமுக விழா

 1, தோடையம் - கவிதை தொகுப்பு பிரியதர்ஷினி - புதுகை மாநகர தலைவர் முட்டாம்பட்டி ராஜ், அறிமுகம் செய்தார்

2. வேங்குடிவயல் புதினம் அண்டனூர் சுரா புதுகை மாநகர துணைச் செயலாளர் எழுத்தாளர் பாலையா அறிமுகம் செய்தார்

3, சப்த கன்னிகள் புதினம் துவாரகா சாமிநாதன் அறிமுகம் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் கோ. கலியமூர்த்தி அறிமுகம் செய்தார். 

துவாரகா சாமிநாதன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினர். 30-க்கும் குறையாத தோழர்கள் பங்கேற்ற நிகழ்வு மூன்று மணி நேரம் நடைபெற்றது. 

அரங்கம் நமக்கு வழங்கிய அமுத கலசம் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றியுடன் விழா நிறைவுற்றது.

வேங்கை வயல் - பொட்டி வந்துருச்சு...


வேங்கை வயல் கிராமத்தை ஒட்டிய எறையூர் சென்றோம் - தமிழ் பேராசிரியர் ஓய்வு முனைவர் கருப்பையா அவர்களும் நானும்...

சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று சாலையோரத்தில் கிடந்தது. இருவரும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் போது. 
"சிலையை நிமித்தி வைத்தால் ஊரில் எல்லோருக்கும் பேதி வந்து விடுகிறது என்கிறார்கள்..." என்றார்.

இப்போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது எறையயூரா? அல்லது இறையூரா? 

சிதிலமான சிவன் கோயில் ஒன்று இரண்டு ஏக்கருக்கும் குறையாத நிலத்தில் ஆங்காங்கே அவருடைய கட்டுமானங்கள் சிதிலமாக ஒரு துவாரபாலகரும் தேமே என்று கீழே கிடக்கிறது.

வேங்கை வயல் தீர்ப்பு வந்துவிட்டது. அண்டனூர் சுராவின் வேங்குடிவயல் புனைவு உண்மையாகிறது.

கருப்பாயி காத்தவராயன் காத்தாயி இப்படி உள்ளூர் தெய்வங்கள் கேட்பாரற்று கிடக்க, அதை வணங்கி பெயர் பெருமிதமாக வைத்துக் கொண்டு உள்ளனர். உள்ளூர் எளிய மக்களின் பெயர்கள் கூட இன்று கேளிப் அதே மதத்தை சார்ந்தவர்களால் கேளிக்கை சொல்லாடல்களோடு பிளவு பட்ட படிநிலைப் பண்பாட்டில் தனக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் சமூகம் மக்களின் முன்னோடியான்கள் கேலிப் பொருளாக... 

என் வீட்டு மரணம் எனக்கு தெய்வம், அடுத்த வீட்டு மரணம் பிசாசு என்பது போல பிற சமூகத்தின் முன்னோடி தெய்வங்கள் வெறும் பொம்மையாகவே காட்சியளித்தது.

யாருக்கோ இறையாகிய அவ்வூர் கால வெள்ளத்தில் இன்றைய பொருத்தப்பாடுடையாதாக எறையூர் என்றே அரசு பதிவேடுகளிலும் இருக்கிறது.

24 ஜன., 2025

புதுக்கோட்டை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாரதா நூற்றாண்டு நிகழ்வு

சாரதா நூற்றாண்டு காணொளி காட்சியாக யூடியூபில்...👈🏾👈🏾👈🏾

சாரதா நூற்றாண்டு நிகழ்வின் காணொளி காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் டிஸ்கிரிப்ஷனில் ஒவ்வொருவருடைய உரையாடலும் தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.