இணைய முடக்கம் - விகடனுக்கு விக்கல்
விகடன் இணைய முடக்கம் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக தமிழக பிஜேபி தலைவர் முறையீடு செய்யவும் உடனடியாக இணையம் நிறுத்தப்பட்டிருக்கிறத. உடனே விகடன் கருத்து சுதந்திரம் குறித்து ஜனநாயக சக்திகளின் ஆதரவை கோருகிறது. வாழ்த்துக்கள் விகடன் வருக வருக. அப்புறம் நமக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்... நவீன டிஜிட்டல் உலகத்துக்கு தகுந்தார் போல புத்தக வடிவமைப்பு வண்ணமயமான ஏற்பாடுகள் என கலக்கி வந்த விகடன் இப்போது "இணையவழி பெய்டு சஸ்கிரைப்சன்" என நுழைந்து காலத்திற்கு தகுந்தாற் போல தனது சந்தையை தகுதிப்படுத்திக் கொண்டுள்ளது. பசுமை விகடன் பக்தி விகடன் மோட்டார் விகடன் என ஏகத்துக்கும் அடிச்சு தூள் கிளப்புகிறார்கள். ஆனந்த விகடன் இணையதளம் முடக்கம் உலகெங்கும் பணம் கட்டி படிக்கிறவர்களை தான் பாதிக்கும் . மற்றவர்களுக்கு தான் அது திறப்பதே இல்லையே... இதில் எங்கு வந்தது கருத்து சுதந்திரம்? தொழில் போட்டி! பேச்சுவார்த்தையில் ஏதோ ஒரு கொஞ்சம் அமவுண்டை மத்திய அரசுக்கு கமிஷனாக கொடுத்து விடுங்கள். பிரச்சனை முடிவுக்கு வந்துரும். கருத்து சுதந்திரம் அது இதுன்னு ப...