நாடகப் பயிலரங்கு - பங்கேற்பு அனுபவம்
கடந்த வாரம் தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில குழு வழிகாட்டுதலின் அடிப்படையில், புதுக்கோட்டையில் இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கத்தை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக கடந்திருந்தோம். இந்த வாரமே கோயமுத்தூர் மாவட்ட கமிட்டியின் ஒருங்கிணைப்பில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள (தியாகசீலர் சி எஸ் சுப்பிரமணியம் நினைவு அரங்கம்) மாநில கட்சி கல்விக் கூடத்தில் இரண்டு நாள் நாடாக பயிலரங்கு நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட கட்சி கல்வி கட்டிடம் எல்லா வசதிகளும் நிறைந்த கல்விக்கூடம் என்பதை நேரில் கண்டபோது பெருமிதத்தை உணர முடிந்தது.
இரண்டு நாள் பயிற்சி முகாம் முதன்மை ஆசிரியர் முனைவர் திலீப் குமார் ஒருங்கிணைப்பில் முதல் நாள் முற்பகல் நாள் உடற்பயிற்சியும், மதியம் 40 க்கும் அதிகமான பங்கேற்பாளர்களின் அறிமுகம், அவர்களிடையே இருக்கும் கூச்சங்களை போக்குதல், ஆண் பெண் சமத்துவத்தை உணரச் செய்தல் போன்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகள் நுட்பங்கள் மதிப்புமிக்க அழகு வாய்ந்தவை. கல்வி பள்ளிக்கூடத்துக்கு வெளியே தான் நிறைய கொட்டி கிடக்கிறது. உடற்பயிற்சிகள் அனைத்தும் நடிப்பதற்கான நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. முதன்மை ஆசிரியரின் மாணவர் நந்தன் பொறுப்புணர்வு மிகுந்த கலைஞன்- பயிற்சி ஆசிரியரும். முதல் நாள் இரவில் புதுக்கோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் பசி சிறுகதை நாடகமாக திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. கலை இலக்கிய பெருமன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எழில் பெரியவெடி அவர்களின் 'பராரி' படம் திரையிடப்பட்டது. இரண்டாம் நாள் முற்பகல் குரல், முகபாவனை, கை கால் மற்றும் உடல் அசைவுகள் குறித்தான பயிற்றுடன் தொடங்கிய நிகழ்வை முனைவர் பேராசிரியர் பாஸ்கர் அவர்களின் நாடகம் குறித்தான உரையாடல் உலகம் இந்தியா உள்ளூர் பரிமாணங்கள், அதன் வளர்ச்சி போக்குகளில் விவரிப்பு குறிப்பாக இடதுசாரி நாடகத்தின் எளிய வடிவத்தின் போக்குகள், அதன் வெற்றி அதில் பாகல் சாகரின் நுட்ப வெளிப்பாடுகள், கலையை மக்களுக்கு பொதுவாகியது போன்றவற்றை அறிமுகம் செய்து அவசியத்தை உணர்த்திய கலந்துரையாடல். எளிய தெரு நாடகங்களுக்கான முன் நிபந்தனை நுட்பங்கள் அவசியங்கள், தேவைகளை, உணர்த்திய பயிற்சி புதுமுகமான என் போன்றோருக்கு நாடகம் குறித்தான புரிதலை உருவாக்கியது.
எல்லோருடைய தனித்தனியாக நடிக்க வைத்தது ஆண், பெண், வயது இடைவெளி கூச்சத்தைப் போக்கும் பொருட்டு கூட்டம் நிறைந்த சந்தையில் ஒருவர் மீது ஒருவர் படாமல் நடக்கும் பயிற்சி அடே அப்பா ரகம். பிறகு ஆதிராமன் அவர்களின் கூத்து குறித்தான அடவு, அரங்கம் அமைப்பு, பார்வையாளர் ஈர்த்தல், மேளதாளம், புராணங்கள் வழி சமகால அரசியலை இணைக்கும் போக்கு என முக்கியத்துவமும் அதன் கடினங்களையும் சொன்ன போக்கு எனக்கு எல்லாமே புதுசு.
பயிற்சி பெற வந்தவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு குழுவிற்கு ஒரு தலைப்பிலான கருப்பொருள் என்ற அடிப்படையில் 'காசா' 'மதுரை' பயிற்சி பெற வந்தவர்களை திரைக்கதை வடிவமைத்து அனைவரையும் பங்கேற்க செய்த நாடக அரங்கேற்றம் அடடே இரண்டரை மணி நேரத்திற்குள் ஒரு கருப்பொருளை கதையாக்கி நடிகர்களின் எண்ணிக்கையை கொண்டு பாத்திரங்களை படைத்து அரங்கேற்ற முடியச் செய்யக்கூடிய ஆசிரியர்களை பெற்றது நமது அமைப்பு என்கின்ற போது பெருமிதமே. சந்தை கடையில் அனைவரும் தனித்த பாத்திரங்களாக பங்கேற்றது, தாங்கள் அறிந்த மன நோயாளி போல் ஒருவர் போல் ஒருவன் இல்லாமல் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தனி பாத்திரங்களை அவர்களாகவே செய்யச் செய்தது அதை அனைவரும் பார்க்கும்படி அரங்குக்குள் அரங்கேற்றியது அழகு.
சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் குறித்தான புரிதலோடு நாம் நடிக்கும் போது அவர்களின் உணர்வை புரிந்து கொள்கின்ற ஏற்பாட்டோடு தொடங்கிய நாடகப் பயிற்சி நல்ல தூக்கமாக நான் அறிந்தேன். கூடவே எழுத்தாளர் 'கனவு' எனும் மாதாந்திர பத்திரிகையை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், சுப்ரபாரதிமணியன் திரைப்படங்கள் குறித்து அவருடைய பத்தாவது நூல் வெளியிடும் நடைபெற்றது. இப்படியாக ஒன்பது வயது முதல் 70 வயது வரை பலரும் பங்கு பெற்றனர். பொதுச் செயலாளர் மாநில தலைவர் பொருளாளர் மற்றும் மற்ற மற்ற ஆளுமைகள் மாசிய மெய்யியல் பள்ளியின் முதல்வர் செல்வராஜ் அவர்களின் இலக்கியமும் அரசியலும் உரையாடல் என சிறப்பு. விரைவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஐந்து வேலை உணவு, குளிரூட்டப்பட்டறை, தேனீர் இடை பலகாரம், அமைதியான சூழல் பல நெருக்கடியான அழுத்தமான வேலை சூழலில் இருந்து விட்டு மாறுதலும் ஓய்வின் விருப்பத்தின் பொருட்டு வெளியூர் பயணம் மிகுந்த மதிப்பு மிகுந்ததாக அமைந்தது. நெருக்கடியான மன அழுத்தத்தின் போது புதிய பயிற்சியை மேற்கொள்வது, அடுத்த நம்பிக்கையில் நாம்மில் துவங்கலாம் என்கின்ற புதிய செய்தியோடு திரும்பினோம். கூடவே வந்த தோழர் சிவகுமார் அவர்களுக்கும் திருப்தியான பயணம், பயிற்சி மற்றும் அனுபவ தொகுப்பாக அமைந்தது.
மாணவர்கள் முனைவர்கள் பள்ளி குழந்தைகள் மாணவிகள் பெண்கள் அமைப்பின் தோழர்கள் என பல்வேறு மனச்சூழல் பெற்றவர்களை ஒரு குடையின் கீழ் பயிற்சி அளித்து ஒருமுகப்படுத்தியது நாடகத்தால் முடிகிறது. என்பதே மக்களைப் பயிற்றுவிக்க உதவும் நெருக்கமான சாதனமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்பாட்டாளர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் கல்வி மைய பொறுப்பாளர்களுக்கும் நன்றி.
கருத்துகள்