சுற்றுச்சூழல் தினமும்; என் திமிரும் (நிதானமும்).
நேற்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் அதன் பொருட்டு சமீபத்தில் "அன்பாலயம்" முதியோர்கள் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ஆவுடையார்கோவில் வெள்ளாற்று கரையில் தொண்டு நிறுவனத்தை துவங்கி இருக்கும் மரம் ராஜா அவர்களின் அழுத்தமான அழைப்பின் பெயரில் புதுக்கோட்டையில் புகழ்பெற்ற அரசு குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சமஸ்கிருத ஓரியண்டல் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை சமூக ஆர்வலரும் குருதிக்கூடு என்கின்ற ரத்த வங்கியையும் நடத்தி வரும் பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர் முத்துராமலிங்கம் அவர்களின் சிறிய ஏற்பாட்டில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சிவக்குமார் புதுகை புதல்வன் சிறப்பு விருந்தினராக பாண்டியன் புத்'அதகத்தின்' உரிமையாளர் உள்ளிட்டோர் பங்குபெற்ற மரம் நடுவிழா சிறப்புமிக்கதாக இருந்தது. மரம் ராஜா அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு வசதி குறைந்தபட்ச கவனிப்பும் இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து இலவசமாக மரக்கன்றுகளை மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு தாண்டியும் வழங்கி வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வி...