இடுகைகள்

அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தூர் நடவடிக்கை

படம்
மே மாத கடைசியில் நான் வசிக்கும் ஊரில் ஆளும் சங்பரிவார் ஒன்றிய அரசு, இரண்டு நாள் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஒன்றிய தலைமை அமைச்சரின் ராணுவ உடை கொண்ட பெரும் பதாகை வீதி தோறும் நிறுத்தி காவி கொடிகளில் கையில் ஏந்தாமல் தேசியக் கொடியை மட்டும் பிடித்துக் பிடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் நகர வீதிகளில் வளம் வந்தார்கள். ராஜதந்திர ரீதியாக தோல்வியடைந்த நிகழ்வை, போலியான வெற்றியை  கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அறியாமையை அணி திரட்டி தோல்வியை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  ராணுவ உயர் அதிகாரிகள் முரணாக பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  நம்ப மறுக்கும் வெளிநாட்டினருக்கு இந்திய எம்பிக்கள் தூதுக்குழுகள் பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் கொடுக்க பயணம் வேறு. வெளியூர்க்காரர்கள் நம்ப மறுக்க, உள்ளூர் காரர்களும் சந்தேகப்பட ஆரம்பிக்கும் விட, இப்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்யே மூலதனமாக்கி தப்பிக்க நினைக்கிறார்கள். உண்மை மீது மக்கள் மயங்கிப் போகும் விதம் பொய்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும், இந்த நேரத்தில்...

சிந்து நதி மக்களுக்கானது, அரசுகளுக்கானதல்ல.

படம்
ப்ளே ஓவர் என்கின்ற உயர்மட்ட பாலங்கள், ரயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி இப்படி பல நல்ல அபிப்ராயங்கள் மனிதத் தவறுகளை அங்கீகரிக்க சிறுசிறு உப்புசப்பு இல்லாத கொண்டாட்டங்களோடு கலைந்து விடுவோம் அல்லது கலைத்துப் போகிறோம். பொது அறத்தை (கடவுளை) ஏமாற்ற மனிதர்கள் பாவனையாக தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அதே தப்பை அச்சு பிசகாமல் அழுத்தமாக செய்வது போல்... அரசுகள் தெரிந்தும் தெரியாதது போல் மக்களை தேசியவெறியால் எதிரியாக சித்தரிக்கிறார்கள். இதே நாட்டில் அன்றாடம் காட்சியாக அண்ணல் படும் விவசாயி போலவே அந்த நாட்டு மக்களும்.  நதி மக்களுக்கானது, உணவும் குடிமக்களுக்கானது, இதுநாள் வரை (பல நூற்றாண்டுகளாக) பரிணாமடைந்த பல்லுயிர் சூழலின் ஆதாரம் சிந்து நதி. 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்ததே. மதங்களால் தங்களுக்கிடையே நாடுகள் என்னும் பொய் கோடுகளால் சண்டையிட்டுக் கொண்டு,  அறியாத உழைக்கும் மக்களை ஏமாற்றி, ஆள்பவர்களும், அதிகார உயர்குடி செல்வந்தர்கள் உலகத்தை குட்டிச்சுவராக்குகிறார்கள்.  பலரும் மரம...