ஆவுடையார் கோவில் - பயணம்
தேர் சிரமைப்பு
27 நட்சத்திர பொறிப்பு
தியாகராஜர் மண்டபம்
ஆவுடையார் கோவில் அடங்களுக்கு பிறத்தி அதாவது தெற்கு நோக்கிய சிவன் கோவில், கொடிமரம், பலிபீடம் கிடையாது, தெற்கில் குளம், பரியை நரியாக்கிய மாணிக்கவாசகரா உருவாக்கப்பட்ட தளம். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். நுழைவாயிலில் புலையன் புலத்தியர் உள்ளிட்ட சிற்பங்களும் சிறப்பான வடிவமைப்பு. சரஸ்வதி நூலகம் உண்டு, திருவாடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்ட கோவில்.
ஆவுடையார் கோவில் என்பது 'ஆவுடை' என்கின்ற பதத்திலிருந்து உருவானது. ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்து இருக்கும் நிலையே ஆவுடை. நமது மக்கள் கொச்சையாக "நக்கி ஆவடை" என்று பயன்படுத்தும் சொல்லிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம். சிவலிங்கத்தின் அடிப்படை இதுவென்றாலும் இன்று இந்தப் பெயர் கொச்சை என்பது போல் உணர்ந்து திருப்பெருந்துறை என வழக்கம்போல சமூகத்தின் மேல்தட்டு சாதிய அமைப்பு திணிக்கிறது.
கோபுரத்திற்கு உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் தியாகராஜர் மண்டபத்திற்கு செல்லும் வழியில் மாணிக்கவாசகர் கோவில் உள்ளே நுழைவாயிலில் மேற்புறம் கருங்கல்லில் 27 நட்சத்திரங்களின் பொறிப்புகள் தமிழ் பெயருடன் காணப்படுகிறது. நுழையும் முன்னர் தூண்களில் நவகிரகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே சென்றால் சுவர் முழுவதும் ஓவியங்கள். அவை சிதிலமடைந்து இப்போது பாதுகாக்கும் பொருட்டு வேலை நடக்கிறது. இதில் சைவர்கள் பௌத்தர்களை கழுவில் ஏற்றிய கதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பூதம் கிளம்பியது என்று பௌத்தர்களை பலி வங்கியதை பேச்சு வழக்கில் அறிய முடிகிறது.
பலமுறை ஆவுடையார் கோவிலுக்கு சென்றாலும் இந்த முறை தன் காலையில் ஆத்மநாதரையும், அம்பாளையும் அருகில் பார்க்க முடிந்தது. குறிப்பாக நெய்வேத்திய ஆவியை ஆத்மநாதருக்கு படையில் இடுவதை பார்க்க முடிந்தது. வரும் 29ஆம் தேதி தேர் என்பதால் செப்பனிடும் பணி விரைவு படுத்தப்படுகிறது. சலிக்காத நுகர்வு ஆவுடையார் கோவில். தியாகராஜ ஆதாரணை மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தையும் கண்டேன். பள்ளத்தில் உற்சவமூர்த்தி நகர்வலம்.
கருத்துகள்