வாழ்த்துக்கள் த.வெ.க. விஜய், ஆனால்...
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சமுக நீதி அரசியல் சொந்த வாக்கு வங்கியை சிதறடிக்க இயலாது என்பதால் எல்லோரும் திமுக மீது எதிர்ப்பு அரசியலை கட்டமைக்கின்றனர். இதில் வாக்குகள் சிதறப்போவது அதிமுகவுக்கே பாஜகவோடு கூட்டணி வைத்த எந்த கட்சியும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. அதைப் புரிந்து கொண்டு நாம் தமிழர், த.வெ.க. போன்ற கட்சிகளும் அழகாக காய் நகர்த்துகிறது. நாம் தமிழர் வாக்கு வங்கி சரிவை சந்திக்க, த.வெ.க. வாக்குச்சாவடி வளைபின்னலை விரிவாக்கும். பாஜக கூட்டணி கட்சிகள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி அதிகாரத்தை சுவைக்க நினைக்கும். திமுக அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் அரசியலில் மிக நுட்பமாக வேலை செய்து வெற்றியை மீண்டும் சுவைக்கலாம்?!
ஆட்சி அமைப்பதற்கான அருதி பெரும்பான்மை அக்கம் பக்கமாக இருக்கும் என்றால் பாஜக விலை பேசும் மற்றும் ஆள் தூக்கும் வேலையை செய்யும். ஏற்றத்தாழ்வு அதிகம் இருக்கும் என்றால் மீண்டும் ஆளுங்கட்சி அதிகாரத்துக்கு வரும். அதற்கான பாதையை விஜய் உறுதி செய்கிறார்.
நம் கவலை எல்லாம் கூட்டணி கட்சிகள் குறிப்பாக இடதுசாரி கட்சிகள் தங்களின் சொந்த செல்வாக்கை தவறவிட, மக்களிடம் எதிர்ப்பு உணர்வு அரசியலில் நம்பிக்கையும் இழக்கும். குறிப்பாக இடதுசாரி தன்மையை நகைப்பிற்குரியதாக மாற்றிவிடும். மதிமுக போன்ற கட்சிகள் திமுகவில் கரைந்து விட, பிற கட்சிகள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒருவேளை வலதுசாரி போக்கு அதிகாரத்தை அடைந்தால் இடதுசாரிகள் வாக்கு வங்கி அரசியலில் இருந்து வெளியேற்றப்படும், குறிப்பாக சமூக நீதி அரசியல் திரும்ப முடியாத எல்லைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. வலதுசாரி பாசிசம் சமூகத்தின் ஜனநாயக ஆன்மாவை அழித்தொழிக்கும் வேலையை உடனடியாக, எல்லா தலங்களிலும் நடைமுறைப்படுத்தும். இது நமக்கு கவலையாக இருந்தாலும், வாக்கு வங்கி அரசியலில் இருந்து இடதுசாரிகள் மீது மெதுவாக சரிவை சந்திப்பது முன்னோர்களின் உழைப்பு...?
கருத்துகள்