ஈரான் இஸ்ரேல் போர் - திரை மறைவு சமிக்ஞை.


ஈரான் - இஸ்ரேல் போர் பின்னணியும் ஊடாடும் உண்மையும் 

போரை துவக்கியது இஸ்ரேல். போர் அரசியலை ஊக்குவிக்க ஜனநாயக அரசுகள் அல்லது சோசலிச அரசுகளை வலதுசாரி பிற்போக்கு அரசியல் நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமே போர் அரசியலை ஊக்குவிக்கும். உலகை மாற்றிய ஐந்து அடிப்படையான சிந்தனை போக்குகளை உலகுக்கு வழங்கியவர்கள் யூதர்களே...
1. சிந்தனையே- அரிஸ்டாட்டில் போன்றோர் 
2. அன்புதான் - இயேசு 
3. பாலின நுகர்வு - சிக்மன்ட் பிராய்ட் 
4. பசி (இயங்கியல்) மார்க்ஸ் 
5. ஒன்றை ஒன்று சார்ந்தது (சார்பியல் கோட்பாடு )என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 
இதை உலக கழித்தவர்கள் யூதர்கள். 

அப்படிப்பட்ட யூத இனம் பழம்பெருமையில் ஊறிய பின் தங்கிய மனோபாவத் ஆட்சியாளர்களால் சியோனிஸ்ட் என்று சொல்லக்கூடிய இனவாத அரசியலுக்கு ஆட்பட்டு போர் தீவிரம் காட்டுகிறது. ஈரானும் மன்னர் ஆட்சியை துரத்தி இன்று பின்தங்கிய மதம் சார்ந்த ஆட்சி நிர்வாக முறைமைகளால் போர் உளவியலுக்குள் சிக்கி இன்று அன்றாடம் காட்சிகளை அதிகமாக கொண்ட நாடுகள் துன்பங்களையே துயரங்களையே வாழ்வாக வழங்குகிறது. பொருளாதார சிக்கல்கள் தீர்க்க முடியாத போது மக்கள் வேறொரு புரட்சிகர பாதையைத் தேர்ந்தெடுக்க விடாமல் தேசிய வெறியை ஊட்டி அது மெது மெதுவாக பரிணாமம் அடைந்து போர் அரசியலாக கடைசியாக அக்கப்போராக முடிகிறது. சோசலிச அரசை தள்ளிப் போட உதவும் ஏகாதிபத்திய தந்திர உபாயம்.

நாம் இதைப் பேச வரவில்லை இரண்டொரு நாட்களாக ஊடகங்களில் செய்தித்தாளில் வரும் செய்திகள் குறித்தே 
எங்களுக்காக பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் - ஈரான். 
பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் விருந்து அளித்தது 

இந்த இரு நிகழ்வுக்கு பின் இருக்கும் அணு ஆயுத அரசியலை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்களை வாங்கி வைத்திருக்கும் என்று நம்ப தோன்றுகிறது. காரணம் கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானில் வறுமையும் நிலையற்ற ஆட்சிகளையும் நாம் அறிந்ததே. பொதுவாக அணு ஆயுதங்கள் பிற நாட்டின் மீது உபயோகிக்கும் பொறுப்பு நாட்டின் அதிபர்களுக்கும் தலைமை அமைச்சர்களுக்குமே அதன் விசை இருக்கிறது. கடந்த முறை பாகிஸ்தானில் உயர் பொறுப்பில் இருந்த பெனசீர் பூட்டோவின் கணவர் கடந்த காலங்களில் அவர் (மனநிலம் பாதிக்கப்பட்டதற்கான மருத்துவ உதவிகளை பெற்றவர்) ஒரு நாட்டின் அதிபரை இப்படி குறை கூறுவது தவறு. ஆனால் ஒரு அதிபரின் கையில் அணு ஆயுத பட்டன் இருக்கும் பட்சத்தில் தவறான முடிவுகள் எடுத்தால் அது என்னவாகும் என்பதே? 

வறுமை மிகுந்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சி காலத்தில் அணு ஆயுதங்களை பிற நாடுகளுக்கு ரகசியமாக விற்று இருக்கலாம் என நான் கருதுகிறேன். இதனாலேயே ஈரான் மறைமுகமாக பாகிஸ்தான் எங்களுக்காக அணு ஆயுதங்களை வீசும் என்று பேச்சு வருகிறது? உடனே அமெரிக்கா பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிக்கு விருந்து கொடுத்து உபசரிக்கிறது. 

ஈரான் உயரதிகாரி 10 நாட்களுக்குள் திரும்ப முடியாத சேதத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்துவோம் என்று சொல்லுகிறார். எங்களுக்கு அமெரிக்காவை எதிர்கொள்வது எளியது என்கின்றார்

நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். திரை மறைவு பதில்கள் நம்மை திக்கு முக்காட செய்கிறது. ஈரான் அணுகுண்டு வைத்திருப்பதை யூகிக்க முடிகிறது. பலவீனமானவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் கடைசியாக எடுக்கும் ஆயுதம் குறுக்கு வழி துரோகத்தை. இதை தான் ஜி 7 நாடுகள் இந்த உலகிற்கு பரிசாக அளிக்க விரும்புகிறதா? என்பதே நமது கேள்வி?
போர் கூடாது!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அமைதியை விரும்புவோருக்கு ஈரான் - இஸ்ரேல் போர் அச்சத்தைத்தான் தருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்