மே மாத கடைசியில் நான் வசிக்கும் ஊரில் ஆளும் சங்பரிவார் ஒன்றிய அரசு, இரண்டு நாள் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஒன்றிய தலைமை அமைச்சரின் ராணுவ உடை கொண்ட பெரும் பதாகை வீதி தோறும் நிறுத்தி காவி கொடிகளில் கையில் ஏந்தாமல் தேசியக் கொடியை மட்டும் பிடித்துக் பிடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் நகர வீதிகளில் வளம் வந்தார்கள். ராஜதந்திர ரீதியாக தோல்வியடைந்த நிகழ்வை, போலியான வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அறியாமையை அணி திரட்டி தோல்வியை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ராணுவ உயர் அதிகாரிகள் முரணாக பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நம்ப மறுக்கும் வெளிநாட்டினருக்கு இந்திய எம்பிக்கள் தூதுக்குழுகள் பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் கொடுக்க பயணம் வேறு. வெளியூர்க்காரர்கள் நம்ப மறுக்க, உள்ளூர் காரர்களும் சந்தேகப்பட ஆரம்பிக்கும் விட, இப்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்யே மூலதனமாக்கி தப்பிக்க நினைக்கிறார்கள். உண்மை மீது மக்கள் மயங்கிப் போகும் விதம் பொய்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும், இந்த நேரத்தில்...