பேரழிவு வருங்காலங்களை நம்மை வழிநடத்தும் பேராசை ஆட்சியாளர்கள் தெரிந்தும் தெரியாதது போல் அடைகாக்கும் நேரத்தில்... (19.3.2025) நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக (AIPSO) மாவட்ட குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 1950இல் வெளியிடப்பட்ட வேர்ல்ட் பீஸ் கவுன்சிலின் ஸ்வீட நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இருந்து வெளியான அணு ஆயுத எதிர்ப்பு பிரகடனத்தின் 75 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் மாவட்ட துணைச் செயலாளர் கு. ராஜேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியில்ந டைபெற்றது. நிகழ்வின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் இரவீந்திரநாத் அவர்களும், சமுக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க தேசிய செயலாளர் மரு. சாந்தி அவர்கள் மற்றும் மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலார் தோழர். எஸ். சங்கர் அவர்களின் உரை மிக முக்கியமானது. ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் போர் காரணங்களுக்காக அல்ல அதை சோசலிச ஆட்சி முறை பரவலை முறியடிக்கும் பொருட்டு, அமெரிக்கா பிரிட்டன் கூட்டாக செய்யப்பட்ட ஏகாதிபத்திய சதி. இப்படியாக ஏகாதிபத்தி நாடுகளின் பெரு முதலாளிகள் எல்லா தப்பையும் செய்து பெரும்...
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை சார்பில் மார்ச் 8 உலக மகளிர் தின நிகழ்வாக அன்னவாசல் கோகிலா பள்ளி வளாகத்தில் மரம் ராஜா அவர்களின் தூண்டுதலின் பெயரில் ஐந்து மரக்கன்றுகள் வழங்கிட மூன்று கன்றுகளை எழுத்தாளர் அறிமுகக் கவிஞர் செங்கை தீபா, நூல் விமர்சனம் செய்ய வந்த முனைவர் கனிமொழி செல்லத்துரை, விமர்சகர் ஆசிரியை பாண்டிச்செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் செம்மல் கவிஞர் தங்க மூர்த்தி, திருவரங்குளம் ஆரம்ப சுகாதார பணியாளர் பயிற்சி நிலைய தலைமை மருத்துவர் சுபாஷ் காந்தி ஆகியோர் மரக் குழந்தைகளை பூமி தாய் மடியில் மடிய அமர்த்தினர். பிற்பாடு மாவட்ட பொருளாளர் சோலச்சி அவர்களின் சிறய முயற்சியால் கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் முதல் நூலான பறக்கத் தயங்கும் பட்டாம்பூச்சி என்ற நூல் தமிழ்ச்செம்மல் தங்க மூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டு மருத்துவர் சுபாஷ் காந்தியால் பெற்றுக் கொள்ளப்பட்டது மேற்கண்ட நிகழ்வில். வீதி இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கீ...
புதுக்கோட்டையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் மக்கள் பதிப்பான பத்து நூல் கொண்ட தொகுதி அறிமுகம் அண்ணலின் பிறந்த நாளான 14.4.25 அன்று மாவட்ட தலைநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு என் சி பி ஹெச் மண்டல மேலாளர் சுரேஷ் அவர்கள் தலைமை ஏற்க மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் நிகழ்ச்சி அறிமுகமும் செய்து வரவேற்பு அளித்தார்கள். நிகழ்ச்சி தொகுப்பு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் செய்ய, தொகுதிகளின் ஒவ்வொரு நூல் குறித்தும் எழுத்தாளர் பாலையா, தமுஎகச-வின் மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வம், அ.பெ.க.-வின் நிறுவனர் மரு. ஜெயராமன், அம்பிகா அறக்கட்டளை சந்திரா ரவீந்திரன், கஸ்தூரிரங்கன், முனைவர் சிவகவி காளிதாஸ், கவிஞர் பீர்முகமது, ஆகியோரும், சிறப்புரை கவிஞர் நா. முத்து நிலவன் த.மு.எ.க.ச. மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். கவிஞர் பெர்னாட்ஷா அவர்கள் கவிதையுடன் நன்றியுரைடன் நிறைவுற்றது. "தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுப்பு பழைய அவர்களின் நூல...
கருத்துகள்