சுற்றுச்சூழல் தினமும்; என் திமிரும் (நிதானமும்).
நேற்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் அதன் பொருட்டு சமீபத்தில் "அன்பாலயம்" முதியோர்கள் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ஆவுடையார்கோவில் வெள்ளாற்று கரையில் தொண்டு நிறுவனத்தை துவங்கி இருக்கும் மரம் ராஜா அவர்களின் அழுத்தமான அழைப்பின் பெயரில் புதுக்கோட்டையில் புகழ்பெற்ற அரசு குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சமஸ்கிருத ஓரியண்டல் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை சமூக ஆர்வலரும் குருதிக்கூடு என்கின்ற ரத்த வங்கியையும் நடத்தி வரும் பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர் முத்துராமலிங்கம் அவர்களின் சிறிய ஏற்பாட்டில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சிவக்குமார் புதுகை புதல்வன் சிறப்பு விருந்தினராக பாண்டியன் புத்'அதகத்தின்' உரிமையாளர் உள்ளிட்டோர் பங்குபெற்ற மரம் நடுவிழா சிறப்புமிக்கதாக இருந்தது. மரம் ராஜா அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு வசதி குறைந்தபட்ச கவனிப்பும் இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து இலவசமாக மரக்கன்றுகளை மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு தாண்டியும் வழங்கி வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வில் பள்ளிக்கூட சூழலில் மாணவர் ஆசிரியர்களுடன் நிகழ்வில் பங்கு எடுப்பது சிறப்பானதாக இருந்தது.
கூடுதலாக புதுக்கோட்டை நகரை வடிவமைப்பதில் ஆங்கில திவானாக இருந்த அலெக்சாண்டர் டாட்டன் ஹாம் புகைப்படத்தை தேடிட, ஆசிரியர் ஒருவர் என் ஆர்வம் மிகுதியை புரிந்து கொண்டு, படத்தை தேடி எனக்கு அனுப்பி வைத்தது மதிப்பிற்குரிய ஒன்று. டாட்டன் ஹாம் புகைப்படம் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். போய் பார்க்க வேண்டும்.
ஐ.நா., மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நினைவு கூறு விதம் பல்வேறு நாட்களை தொடர்ந்து சிறப்பித்துக் கொண்டாடுகிறது. நேற்று நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு உலகெங்கிலும் சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்பட்டது. கடைப்பிடிக்கும் நாளின் பொருண்மையை அடுத்த நாளின் சிறப்புகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் என் என்பதால், நான் அதிகம் கவனம் குவிப்தில்லை. இப்போது புகைப்பட பதிவோடு முடிந்து விடும் நிகழ்வாக, நல்ல நாள்களும் அரசு கொண்டாடும் சிறப்பு நாள்களும் அமைந்துவிடுகிறது. மரங்கள் நடுவது சிறப்பு. ஆனால் அதைவிட அன்னிய களைச் செடிகள் வேகமாக வளர்ந்து விடுகின்றன. அதனாலே மரம் நடுவதில் எனக்கு ஆர்வம் குறைவு. அதன் பொருட்டு குறைந்தபட்ச சுற்றுச்சூழல் விழிப்புணர்வை புரியாதவர்களுக்கு புரிய வைப்பது மட்டும் மிக மிஞ்சி நிற்கும் நாளாக பார்க்கிறேன்.
மனிதனுடைய எந்த கண்டுபிடிப்பும் மாற்றத்துக்கு உட்படுவது குறிப்பாக சிதைந்து போவது. ஆனால் மனிதர்கள் அற்ற பகுதியில் உயிரினங்கள் போன்ற பல்லுயிர் சூழல்கள் இயல்பாகவே உருவாகிவிடும். மரம் வைப்பது தீர்வா? என்றால் இல்லை!
நெகிழி பெருக்கம் பெரிய அபாயம். 1950ல் உலகெங்கும் 20 லட்சம் டன் கழிவுகளை உருவானது. மனித சமூகத்திற்கு அளப்பரிய பங்காற்றிய நெகிழி இன்று 450 மில்லியன் டன்களாக உயர்ந்து, ஆண்டுக்கு 350 மில்லியன் டன் உலக மக்களால் மறுசுழற்சி அடைய காலதாமதமாகும் நெகிழி குப்பையாகிறது. சுமார் 20 மில்லியன் டன்கள் பூமியில் கொட்டப்படுகிறது. ஆறு, கடல்களில் மட்டும் 6 மில்லியன் டன்னுக்கு மேல் கொட்டப்பட்டு அவைகள் கடல் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதே நிலை நீடிக்கும் என்றால் 2050-ல் கடல் வாழ் உயிரினங்களை விட நெகிழிகள் அதிகம் இருக்கும். கடல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது. மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் 50% மேல் கடலே மறுசுழற்சியில் நமக்கு வழங்குகிறது. இப்படி அறிவியல் ஒருபுறம் என்னை பாடா படுத்த, மறுபுறம் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய நெருக்கடியையும் வந்துவிடுகிறது. எதையும் செய்யாமல் இருப்பதற்கு, எதையாவது செய்தாக வேண்டி இருக்கிறது.
ஏனெனில் அறிவியல் புரிதல் முக்கியம், அதைவிட காரிய கடமையாற்றுதல் முக்கியம். அரசு தீவிரம் காட்டும் போது மக்களும் அதை கவனத்தில் கொண்டு கடமை ஆற்றுவார்கள். கடமைக்கு என்றால், நமது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது ஏற்றப்படும் சுமையை...
மரம் வைப்பது தீர்வல்ல! அது ஒரு துவக்க வழி. மரங்கள் சூழலுக்கு தகுந்தவாறு பல கோடி ஆண்டுகள் பரிணாமத்தில் தகவமைப்பை பெற்று வளர்ந்த உயிரினம். எனவே எங்கேயும் எப்படியும் தன்னை தகவமைத்துக் கொள்ளும். எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி தோன்றிய மனிதன் எதையோ தேடிக் கொண்டே இருக்கிறான். மரம் தேடுதலை நிறுத்தி தகவமைப்பை பெற்று பரிணாம நுட்பங்களால் வியாபிக்கிறது. பசுமையிடம் எனக்கு சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை? கற்றுக்கொள்ள ஏராளம்...
ஆக, அரசு கடமைக்கு செய்யாமல், கண்ணியத்துடன் பணியாற்றும்போது கடைப்பிடிப்பவர்கள் கரரார் சட்டங்கள், சந்ததிக்கு மோசமான சூழல் தள்ளி போகும் வாய்ப்பு உண்டு.
இல்லை எனில்...
இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்ளும்!. மனிதன்?
கருத்துகள்