சிந்தூர் நடவடிக்கை
நம்ப மறுக்கும் வெளிநாட்டினருக்கு இந்திய எம்பிக்கள் தூதுக்குழுகள் பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் கொடுக்க பயணம் வேறு. வெளியூர்க்காரர்கள் நம்ப மறுக்க, உள்ளூர் காரர்களும் சந்தேகப்பட ஆரம்பிக்கும் விட, இப்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்யே மூலதனமாக்கி தப்பிக்க நினைக்கிறார்கள். உண்மை மீது மக்கள் மயங்கிப் போகும் விதம் பொய்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும், இந்த நேரத்தில் சாயம் வெளுத்து போக புலம்பல்களே அதிகம் காண முடிகிறது.
எப்படி இருந்தபோதிலும் கத்திரி முத்தினால் கடைத்தெருக்கு வந்து தானே ஆகணும். அந்த வகையில் விமானப்படை தளபதி ஆட்சியாளர்களின் வெற்றி கொண்டாட்டத்திற்கு எதிர் சமிக்கி பேட்டியாக கொடுக்கிறார். தலைமை தளபதியும் சில இழப்புகளை ஒப்புக்கொள்ள செய்கிறார். செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் விரோதத்தையே வளர்க்கிறது என்றார். தாங்கள் மட்டும் ராஜதந்திர ரீதியாக அணுகுகிறோம் என்று சொல்லிவிட்டு பாகிஸ்தானை எதிரி நாடாக கட்டமைக்கிறார்கள். இந்தியா போர் போர் தொடுக்கும் இரண்டொர வாரங்களுக்கு முன்னால் பாகிஸ்தான் ரயிலில் பயணிகள் இருந்து 120க்கும் மேற்பட்ட படுகொலை செய்து சிலரை பிடித்துச் சென்றனர் தனி நாடு கேட்கும் பாலுசிஸ்தான் பிரிவினைவாதிகள். இந்தியா பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் பதட்ட போர்களின் போது பாகிஸ்தான் உள்நாட்டு பிரிவினைவாத அமைப்பான பாலுஸ்தீதான் தனியாக பிரிந்து விடும் என்கின்ற அளவிற்கு உள்ளூர் ஊடகங்கள் ஊதி தள்ளின.
அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்வதில்லை என்கின்ற நம்ப முடியாத சூழலை என் போன்றோருக்கு வந்து விடுகிறது. உதாரணமாக பாகிஸ்தான் வங்காளதேசம நேபாளம் இலங்கை மாலத்தீவு போன்ற நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையின் மீது இந்தியா திரை மறைவாக பெரியண்ணன் போக்கை கடைபிடிக்கிறது. இது அமெரிக்கா பாணி.
இதை ஏன் பேச வேண்டி இருக்கிறது? சிறுபான்மை மக்களுக்கோ? விளிம்பு நிலை மக்களுக்கு ஜனநாயக பூர்வமாக உரிமைகளை வழங்காமல் பெரியண்ணன் போக்கில் மேலும் மேலும் ஒடுக்க நினைக்கும் போது அவர்கள் வேற ஒரு தந்திரம் உபாயதத்தை கை கொள்வதே இயல்பு. மொத்த உடலில் ஒரு சிறு காயம் தொடர் தொந்தரவாக இருப்பது போல சிக்கல் உருவாகிவிடும். பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவில் நம்பப் போவதில்லை. குறிப்பாக சங்பரிவார் ஆட்சியாளர்களை நம்பவே மாட்டார்கள். பலமுறை இஸ்ரேல் தந்திரமாக அறிவியல் பூர்வமாக வஞ்சித்ததின் விளைவு பாலஸ்தீனம் இஸ்ரேலும் பரஸ்பரம் உறவே பேண முடியாத இலக்கு நோக்கி நகர்ந்து விட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பட மாட்டார் என்று யாசர் அராபத் தீர்வை சொல்லும் போது உடன்பட தீர்வை நோக்கி நகர்ந்து அமெரிக்கா ஆனால் இஸ்ரேல் எதிராகவே காய் நகர்த்தியது. தொடர்ந்து சிறுபான்மை மக்களை வஞ்சிக்க மட்டும் செய்யும் பெரும்பான்மையை ஒரு கட்டத்தில் சிறுபான்மை நம்பவே நம்பாது. இதே நிலை இந்திய இன்றைய ஆளுங்கட்சி அரசின் மீது அண்டை நாட்டின் பார்வை. ஒரு பெரியண்ணன் போக்கு கொண்ட நாட்டின் ராஜதந்திர ரீதியாக தோல்வியடைந்த போர் யுக்தி இன்றைய சங்பரிவாரி தலைமையால் ஏற்பட்டு விட்டது
பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கக் கூடியகூடிய ஜனநாயக வடிவங்கள் அனைத்தையும் அடைத்து விட்டு அவர்கள் எங்களை வெறுப்புடன் அணுகுகிறார்கள் என்கின்ற பிதற்றல் .
நதிநீரை நீரை மரிப்பது, தூதரை வெளியேற்றுவது, நோயாளிகளை வெளியேற்றுவது, இந்தியாவின் அனுமதி பெற்ற விசாக்களை ரத்து, ஏற்றுமதி இறக்குமதிகளை நிறுத்திக் கொள்வது, கிரிக்கெட் விளையாட்டை நிறுத்துவது, ஐபிஎல் போன்ற உள்ளூர் கிரிக்கெட் களில் பிற நாட்டு வீரர்களை அனுமதிக்கும் போது பாகிஸ்தான் வீரர்களை புறக்கணிப்பது, தொடர்ந்து சர்வதேச அளவில் தான் பெரியண்ணன் என்கின்ற நிலைப்பாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக எல்லா வெறுப்புகளையும் கட்டமைப்பது, எல்லையை மூடுவது என, நாடு கடந்த காதல் திருமண உறவுகளை கூட அங்கீகரிக்காத வெறுப்பு, சினிமாக்களை தொடர்களை, கலைஞர்களை என எல்லாவற்றையும் தடை செய்துவிட்டு அவர்கள் நம்மை வெறுப்புடன் அணுகுகிறார்கள் என்று கூறுவது முழு பூசணிக்காயை சோவற்றில் மறைப்பதாகும்.
எப்படி இந்தியா படிநிலை பண்பாடு கொண்டு அறிவியல் மனப்பாங்கு மறுக்கும், பின்தங்கிய மக்களை கொண்டு இருக்கிறதோ அதே தான் பாகிஸ்தானும், வங்காளதேசம் உள்ளன. தெற்காசிய நாடுகள் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைக்க முடியாமல் குடிமக்களை தேசிய வெறி ஊட்டி எதிர்கால சந்ததியின் அமைதியின் மீது விளையாடுகிறது. குறைந்தபட்ச அறிவியல் பூர்வ வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவதே நமக்கும் நம்மை சார்ந்த அண்டை நாடுகளுக்கும் இன்றையக் இருக்கும் தீர்க்க வேண்டிய சவால். தெற்காசிய நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்தாலும், வறுமை, நாளும் பின்தங்கிய கலாச்சார உறவுகளால், நிலையற்ற ஆட்சியாளர்களாலும், பெரும் இயற்கை வளங்கள் குறிப்பிட்ட தனிநபர்களிடமே சேரும் பொருளாதார அசமத்துவ இடைவெளி அதிகரிக்கும் இந்த நேரத்தில், ஆட்சியாளர்கள் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டே பிரச்சனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
செய்ய தவறினோம் என்றால் அமெரிக்கா அதிபர் 20 முறை சொல்லிவிட்டார். வர்த்தக காரணங்களுக்காக அணு ஆயுதப் போர் ஏற்படுவதை நான் தான் தடுத்தேன் என்று. நமது விஸ்வகுரு அது குறித்து வாய் திறக்கவில்லை. அவருக்கு கீழே இருக்கும் அடிப்பொடிகள் உளறி கொட்டுகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற விவாதத்தை கோரும் நேரத்தில் மங்கி பாத் வாய்ச்சவடால்களே மிச்சம். பாராளுமன்றம் கூடினால் பிரதமரின் முன்பின் முரணான விவாதத்தால் சாயும் விழித்து விடும். ஆகவே அதை தவிர்க்கும் பொருட்டு எல்லா திரை மறைவு உபாய திட்டங்களை சங்பரிவார்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.
கத்திரிக்காய் எப்படி முத்தி விடும் காத்திருக்கிறேன்...
கருத்துகள்