வாய்ப்பாட்டு கலைஞர் டி.எம். கிருஷ்ணா 👈🏾👈🏾👈🏾 எல்லோரும் பாட, எல்லோரும் கேட்க, வேண்டும் சுதந்திரம். மறைக்கப்பட்ட_மிருதங்க_சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக் கலை மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள் செபஸ்டின் குடும்ப கலை இன்று ஆய்வு நூல் நாடரிந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் நான்கு ஆண்டுகள் களஆய்வு, பேட்டிகள் வாயிலாக மிருதங்கம் உருவாக்கும் சிற்பிகள் வாழ்கை பாடுகளை ஆவணப்படுத்தி உள்ளார். கர்நாடக இசையில் குறிப்பிட்ட உயர்சாதி சமூகங்கள் மட்டுமே ஈடுபட முடியும். அவர்களே இசைத் துறைகளில் புகழ் மிக்கவர்களாக பரிணமிக்க முடியும். பிற சமூகங்களுக்கு வாய்ப்பு குறைவு. சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்தவையாக நம்முடைய சமூகத்தின் முன்னேறிய பிரிவினர் பயன்படுத்திய கலை வடிவங்களே இருந்து வந்திருக்கிறது. விளிம்பு நிலை மக்கள், இன குழுக்கள் பயன்படுத்திய கலை வடிவங்கள் அங்கீகாரம் இல்லாத மெது மெதுவாக அழிந்து வரும் நிலையில். அதன் பின்புலத்தில் டி.எம். கிருஷ்ணா அவர்கள் மிருதங்கத்தை உருவாக்கும் கலைஞர்களின் வாழ்க்கை பாடுகளை, தயாரிப்பு முறைகளை, இசைக் கலைஞரின் விருப்பத்திற்கு ஏற்ப நுட்பங்களை உருவாக்க...