கருத்தரங்கு - உயர் கல்வி பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் - தீர்வுகள்
இந்தியாவில் உயர்கல்வி பெறுவதில் மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும் கருத்தரங்கம். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்குப் பேரவை இணைந்து வரும் 09.08.2025 சனி மாலை சென்னையில் இந்தியாவில் கல்வி மிக வேகமாக தனியார் மயமாகி வருகிறது. வணிக மயமாகி வருகிறது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் தங்கள் கிளைகளை இந்தியாவில் திறக்கின்றன. இதனால் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி எட்டாக் கனியாகி வருகிறது. பள்ளிக் கல்வி , உயர் கல்வியும் ,தொழிற் கல்வி அனைத்தும் தனியார் மயமாகி வருகின்றன. உயர் கல்வி பெறத் தகுதியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றிய- மாநில அரசுகள் போதிய உயர்கல்வி நிறுவனங்களை,தொழிற் கல்லூரிகளை அரசுத்துறைகளில் உருவாக் கவில்லை. இது அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கிடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது. பள்ளிப் படிப்பை பல துன்ப துயரங்களுக்கிடையே, இன்னல்களிடையே படித்து முடிக்கும், பல லட்சம் ஏழை மாணவர்கள் ,உயர் கல்வியை எப்படி பெறுவது என ஏங்கித் தவிக்கின்றனர். மிக ...