இடுகைகள்

த. க. இ. பெ. ம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தோழர் சந்துரு படத்திறப்பு & செம்பை மணவாளன் நினைவு சிறுகதை போட்டி பரிசளிப்பு

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் செம்பை நினைவாக சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டு முதலாம் ஆண்டு சிறப்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு என்ற ஆர் சந்திரசேகரன் அவர்களின் படத்திறப்பு புகழஞ்சலி நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வையும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்ட குழு ஏற்பாட்டில் 15 பிப்ரவரி புதுக்கோட்டையில் நடந்தது. செப்டம்பர் 22 ஆம் தேதி போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி முடிவுகளும், பிப்ரவரி 15ஆம் தேதி பரிசளிப்பு நடைபெற்றது.  121 கதைகள் ஆஸ்திரேலியா இலங்கை பம்பாய் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகமெங்கும் பரவலாக கதைகள் வந்து சேர்ந்தன. முதல் இரண்டாம் மூன்றாம் இடம் மற்றும் சிறப்பு பரிசுகள் மூன்று என ஆறு பரிசுகள் வழங்கப்பட்டன. விருத்தாளர்களுக்கு நினைவுப் பரிசு, பரிசுத் தொகை பயனடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கதைகள் குறித்து பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் அறம் கதைகள் குறித்து சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் கவிச்சுடர் இராசு. கவிதைபித்தன் அவர்கள் பொதுவுடமை தோழர்க...