இடுகைகள்

நூல் வெளியீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலைகளில் நெளியும் நிழல்... நூல் வெளியீடு

படம்
நேற்றைய 'வீதி' 133 மாதாந்திர நிகழ்வு தோழர் மணிமேகலை அவர்கள் தலைமையில் அய்யா திருப்பதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து பரிசளிப்புடன் துவங்கியது. நிகழ்வில் புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனத் தலைவர் கவிஞர் எஸ் இளங்கோ அவர்களின் 10 நிமிடத்திற்கு உள்ளான இரண்டு ஆவணப் படங்கள் 3 குறும்படங்கள் திரையிடல் படத்தேர்வு அருமை. சக மனிதர்களின் உணர்வுகளை குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் கடப்பாடுகளை கடத்தும் திரைக்களமாக தேர்வு செய்தது அருமை. தேர்ந்தெடுத்த படங்களை கூட்டமாக ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அலாதியான கதையாடல் தான். யூடியூப் ரில்ஸ்கள் எவ்வளவு வந்தாலும் எல்லோரும் அமர்ந்து கூட்டமாக திரைக்கதைகளை ரசிப்பது அது பார்வையாளர்களுக்கு கடத்தும் ரசனைகள் ஏராளம் தாராளம் குறையாத ரகமே. தோழருக்கு நன்றி  பிறகு 'கொடைவள்ளல்' குறும்படத்தில் நடித்த சிறுவன் நாயகனுக்கு பாராட்டும் தொடர்ந்து இது போன்ற   கலை ஆர்வங்களை இலக்கியத் தளங்களில் விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி தாளாளரும் தமிழ் சங்க தலைவரும் தங்க மூர்த்தி அவர்களின் பங்கேற்பு நன்றிக்குறியது...