சிறுகதைகள் 100 - அண்டனூர் சுரா வெளியீடு
எழுத்தாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆசிரியர் அண்டனூர் சுரா சிறுகதைகள் 100 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இரண்டு தொகுதி வெளியீட்டு நிகழ்வு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 27.9.25 மாலை தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் முதல் தொகுதி கவிதைப்பித்தன் அவர்கள் வெளியிட்டு விழா பேருரை நிகழ்த்தினார்கள். இரண்டாவது தொகுதியை கவிப்பித்தன் வெளியிட்டு எழிலுரை வழங்கினார்கள். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்திருந்தன. நிகழ்வில் 250 பேருக்கும் குறையாத இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். 2004 முதல் 2024 வரையிலான இதழ்களில் நூலாக்கம் பெற்ற இணையவெளியில் வந்த சிறுகதைகளை அண்டனூர் சுராவின் சிறுகதைகள் 100 என்ற இரண்டு தொகுதிகளாக அறிமுகம் செய்தனர். சுராவின் எழுத்துக்கள் படிநிலைப் பண்பாட்டில் இருந்து சமூகத்தை சமூக நீதி என்ற சமத்துவ கோட்பாட்டை நோக்கி நகரும் அரசியலை பேசக்கூடியாதக அமைகின்றன. அந்த வகையில் தன்னைச் சுற்றிய மண்...