பாரதி முற்றம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் அறந்தாங்கி கிளை மற்றும் பாரதி முற்றம் இணைந்து ஏற்பாடு செய்த நூல் வெளியீடு, இலக்கிய சந்திப்பு அறந்தாங்கி எல்.என்., புரத்தில் மாவட்ட மதிப்புரு தலைவரும் பாரதிமுற்ற நிறுவன தலைவரும் கவிஞர் தோழர் அஜய்குமார் கோஷ் சீரிய ஏற்பாட்டில் குழந்தைகளின் பாடலோடு தொடங்கியது. நகரத் தலைவர் இலக்கிய ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை கவிதை வாசித்திட, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இருவரை கௌரவித்தல், சிறந்த ஆசிரியர்கள் பணியாளர்கள் அறிமுகம், கருத்துரைகள் என நடைபெற்றது. முனைவர் சிவகவி காளிதாஸ் அவர்களின் மேழி மற்றும் பறை = அறிவித்தல் நூல்களை மாவட்டச் செயலாளர்கள் ஒட்டடை பாலச்சந்திரன் அறிமுகம் செய்திட, நல்லாசிரியர் மு சிவானந்தம் அவர்கள் வெளியிட, முதல் பிரதிகளை ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டு விழா பேருரை ஆற்றி நிறைவு செய்தார்கள். நன்றியுரை அறந்தாங்கி நகர செயலாளர் சிவா அவர்கள். பிறகு உணவோடு நிறைவுற்றது