இடுகைகள்

புத்தகத் திருவிழா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதுக்கோட்டை 8 வது புத்தகத் திருவிழாவும் நானும்

படம்
புதுக்கோட்டை 8 வது புத்தகத் திருவிழா இந்த ஆண்டு தாமதமாக தொடங்கினாலும் சிறப்புடன் நிறைவுற்றது. கட்டமைப்பு வசதி சிறப்பாக இருந்தது. பகல் நேரங்களில் அனத்தியது. மற்றபடி மழைக்கு சிறப்பாகவே இருந்தது. மாலை நேர நிகழ்வில் வாழ்த்துரைகள் நேரத்தை தாண்டியதாக அமைய சிறப்புரைக்கு காத்திருப்பவர்கள் மெதுவாக காணாமல் போனார்கள். எதிர்காலத்தில் சரி செய்து கொள்ள வேண்டியவை. விழாக்காலம் என்பதால் விற்பனை குறைவு என்கின்ற முனுமுனுப்பை அவதனிக்க முடிந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தன்னார்வலர்களின் உழைப்பு மதிப்பிற்கு உரியது. திட்டமிடுதல் நிதி சேகரித்தல் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்தல் அரசு நிர்வாகத்தோடு இணைந்து இலக்கை எட்டியது வாழ்த்துகள். வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த முறை இல்லையோ?  என்னுடைய நூல்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  7ம் கவிதை தொகுப்புகள் வெளியிட்டில் பங்கேற்றேன் . அஜய்குமார் கோஷின் மழைச்சாரல் , சோலச்சியின் ஆப்பாயல ஒரு அடி, மை...