தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை சார்பில் மார்ச் 8 உலக மகளிர் தின நிகழ்வாக அன்னவாசல் கோகிலா பள்ளி வளாகத்தில் மரம் ராஜா அவர்களின் தூண்டுதலின் பெயரில் ஐந்து மரக்கன்றுகள் வழங்கிட மூன்று கன்றுகளை எழுத்தாளர் அறிமுகக் கவிஞர் செங்கை தீபா, நூல் விமர்சனம் செய்ய வந்த முனைவர் கனிமொழி செல்லத்துரை, விமர்சகர் ஆசிரியை பாண்டிச்செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் செம்மல் கவிஞர் தங்க மூர்த்தி, திருவரங்குளம் ஆரம்ப சுகாதார பணியாளர் பயிற்சி நிலைய தலைமை மருத்துவர் சுபாஷ் காந்தி ஆகியோர் மரக் குழந்தைகளை பூமி தாய் மடியில் மடிய அமர்த்தினர். பிற்பாடு மாவட்ட பொருளாளர் சோலச்சி அவர்களின் சிறய முயற்சியால் கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் முதல் நூலான பறக்கத் தயங்கும் பட்டாம்பூச்சி என்ற நூல் தமிழ்ச்செம்மல் தங்க மூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டு மருத்துவர் சுபாஷ் காந்தியால் பெற்றுக் கொள்ளப்பட்டது மேற்கண்ட நிகழ்வில். வீதி இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கீ...