தோழர் சந்துரு படத்திறப்பு & செம்பை மணவாளன் நினைவு சிறுகதை போட்டி பரிசளிப்பு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் செம்பை நினைவாக சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டு முதலாம் ஆண்டு சிறப்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு என்ற ஆர் சந்திரசேகரன் அவர்களின் படத்திறப்பு புகழஞ்சலி நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வையும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்ட குழு ஏற்பாட்டில் 15 பிப்ரவரி புதுக்கோட்டையில் நடந்தது.
செப்டம்பர் 22 ஆம் தேதி போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி முடிவுகளும், பிப்ரவரி 15ஆம் தேதி பரிசளிப்பு நடைபெற்றது.
121 கதைகள் ஆஸ்திரேலியா இலங்கை பம்பாய் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழகமெங்கும் பரவலாக கதைகள் வந்து சேர்ந்தன. முதல் இரண்டாம் மூன்றாம் இடம் மற்றும் சிறப்பு பரிசுகள் மூன்று என ஆறு பரிசுகள் வழங்கப்பட்டன. விருத்தாளர்களுக்கு நினைவுப் பரிசு, பரிசுத் தொகை பயனடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கதைகள் குறித்து பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் அறம் கதைகள் குறித்து சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் கவிச்சுடர் இராசு. கவிதைபித்தன் அவர்கள் பொதுவுடமை தோழர்களின் சமூக அக்கறை குறித்த உரையாடலும் பரிசளிப்பும் சிறப்பாக அமைந்தது.
முன்னதாக முன்னாள் மாவட்ட செயலாளர் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ச்சியாக பணியாற்றிய தோழர் சந்துரு அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து தோழர் கா சந்தானம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இன் நிர்வாக மேலாளர் அவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வில் அகில இந்திய முற்போக்கு பேரவையின் துணைத் தலைவர் தோழர் டி. எஸ். நடராஜன் அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் அர. மணிமோகன், நிகழ்ச்சி தலைமையில் மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் முத்து நிலவன் என பலரும் சந்துருவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். மேலும் புதுகை தமிழ் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழ்ச்செல்வன் தங்க மூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு போன்ற பொதுவுடமை தொடர்களில் அர்ப்பணிப்பு குறித்து பேசினார்.
தோழர் சந்துரு குடும்பத்தார்கள் பங்கெடுத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் அவரோடு பணியாற்றிய அலுவலக ஊழியர்கள் அரசியல் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் பங்கு பெற்றனர். அதேபோல் செம்பை மணவாளன் குடும்பத்தாரும் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். புதுகையை சுற்றி பல்வேறு அமைப்புகள் சார்ந்த பலரும் இந்நிகழ்விற்கு வந்து சிறப்பு செய்தனர். நிகழ்வு சர்க்கரை குறைய 4 மணி நேரம் இரண்டு நிகழ்வாக நடைபெற்றது முதலில் படதிறப்பு புகழஞ்சலி இரண்டாம் ஆண்டு சிறுகதை பரிசளிப்பு என பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக அமைந்தது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னணி தோழர்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க தோழர்கள் தமிழ் சங்கம் சார்ந்தவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தொடர் சந்துரு அவர்களின் அரசியல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் செம்பை மணவாளனின் குடும்பத்தார் என பங்கு பெற்றது சிறப்பாக அமைந்தது.
தோழர்களின் கூட்டு முயற்சியும் தனிப் பொறுப்பும் இந்நிகழ்ச்சி இனி திட்டமிட்ட செயல்பட்டதால் வெற்றிகரமாக நடந்தேறி உள்ளது. மன நிறைவு அளித்திருக்கும் நிகழ்வாக அமைந்தன. சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியானதில் இருந்து கதைகளை பெற்று அதை பகுத்து பல்வேறு நடுவர் குழுவரிடம் சுற்றுக்கு விட்டு கடைசியாக எல்லோரும் அமர்ந்து விவாதித்து கதை தேர்வு செய்யப்பட்டது புதிய அனுபவமாக இருந்தது. சிறுகதை எழுத்தாளர்களின் உழைப்பு மதிப்பு மிக்கது என்பது புரிந்தது. பலரும் இந்நிகழ்வில் பங்கு பெற்றது பல்வேறு வகையில் உதவி செய்தது மதிப்புமிக்க நிகழ்வே.
கருத்துகள்