அலைகளில் நெளியும் நிழல்... நூல் வெளியீடு

நேற்றைய 'வீதி' 133 மாதாந்திர நிகழ்வு தோழர் மணிமேகலை அவர்கள் தலைமையில் அய்யா திருப்பதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து பரிசளிப்புடன் துவங்கியது.
நிகழ்வில் புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனத் தலைவர் கவிஞர் எஸ் இளங்கோ அவர்களின் 10 நிமிடத்திற்கு உள்ளான இரண்டு ஆவணப் படங்கள் 3 குறும்படங்கள் திரையிடல் படத்தேர்வு அருமை. சக மனிதர்களின் உணர்வுகளை குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் கடப்பாடுகளை கடத்தும் திரைக்களமாக தேர்வு செய்தது அருமை. தேர்ந்தெடுத்த படங்களை கூட்டமாக ரசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அலாதியான கதையாடல் தான்.
யூடியூப் ரில்ஸ்கள் எவ்வளவு வந்தாலும் எல்லோரும் அமர்ந்து கூட்டமாக திரைக்கதைகளை ரசிப்பது அது பார்வையாளர்களுக்கு கடத்தும் ரசனைகள் ஏராளம் தாராளம் குறையாத ரகமே. தோழருக்கு நன்றி 
பிறகு 'கொடைவள்ளல்' குறும்படத்தில் நடித்த சிறுவன் நாயகனுக்கு பாராட்டும் தொடர்ந்து இது போன்ற 
 கலை ஆர்வங்களை இலக்கியத் தளங்களில் விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி தாளாளரும் தமிழ் சங்க தலைவரும் தங்க மூர்த்தி அவர்களின் பங்கேற்பு நன்றிக்குறியது
தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை பின்புலமாக இருந்து நகர்த்திக் கொண்டிருக்கும் கவிஞர் தோழர் நா.முத்துநிலவன் அவர்கள் வெளியிட தோழர் இளங்கோ அவர்கள் பெற்றுக்கொள்ள எனது மூன்றாவது கவிதை தொகுப்பான அலைகளில் நெலியும் நிழல்... வெளியிட்டு, அணிந்துரை வழங்கிய கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களின் உரையும் பிறகு நூல் குறித்த நா.முத்துநிலவன் அவர்களின் மதிப்புரையும் குறுகிய நேரத்தில் நச்சு ரகம் அவர்களுக்கு நன்றி. இப்படியாக இந்நிகழ்வில் பலரும் நேரடியாகவும் whatsapp பகிர்வு தகவல் மூலம் பங்கெடுத்தனர்.

 
இரண்டோரு நாட்களில் கேட்டுக்கொண்ட உடன் ஒப்புக்கொண்டு, விரைவாக நூல் வெளியிட்டுக்கு இசைவு தெரிவித்து, அழைப்பிதழ் ஏற்பாடு, நூல் வெளியீட்டாளருக்கு எந்த செலவு வைக்காமல் எல்லோரையும் ஒருங்கிணைத்து கூடுதலாக நூல் வெளியீட்டுக்கு தொகையும் வழங்கிய வீதி இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தோழர் கீதா அவர்களுக்கு நன்றி, கவிஞர் சின்ன கனகு நன்றிக் கூறி நிகழ்வு நிறைவுற்றது.

திரையிடல் நிகழ்வு கனத்த நிகழ்வுகளை நினைவுகளை கடத்தியது என்றால் அது மிகையல்ல. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...