புதுக்கோட்டை 8 வது புத்தகத் திருவிழாவும் நானும்

புதுக்கோட்டை 8 வது புத்தகத் திருவிழா இந்த ஆண்டு தாமதமாக தொடங்கினாலும் சிறப்புடன் நிறைவுற்றது. கட்டமைப்பு வசதி சிறப்பாக இருந்தது. பகல் நேரங்களில் அனத்தியது. மற்றபடி மழைக்கு சிறப்பாகவே இருந்தது. மாலை நேர நிகழ்வில் வாழ்த்துரைகள் நேரத்தை தாண்டியதாக அமைய சிறப்புரைக்கு காத்திருப்பவர்கள் மெதுவாக காணாமல் போனார்கள். எதிர்காலத்தில் சரி செய்து கொள்ள வேண்டியவை. விழாக்காலம் என்பதால் விற்பனை குறைவு என்கின்ற முனுமுனுப்பை அவதனிக்க முடிந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தன்னார்வலர்களின் உழைப்பு மதிப்பிற்கு உரியது. திட்டமிடுதல் நிதி சேகரித்தல் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்தல் அரசு நிர்வாகத்தோடு இணைந்து இலக்கை எட்டியது வாழ்த்துகள்.
வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த முறை இல்லையோ? 
என்னுடைய நூல்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  7ம் கவிதை தொகுப்புகள் வெளியிட்டில் பங்கேற்றேன் . அஜய்குமார் கோஷின் மழைச்சாரல், சோலச்சியின் ஆப்பாயல ஒரு அடி, மைதிலி கஸ்தூரிரங்கன் அன்பே அலக்ஸா, சாமி கிருஷ்யின் போர் விமானம் பொழியாத வானம், துரகா சாமிநாதனின் செண்பகப் பூவில் ஒளிந்திருக்கும் சர்ப்பம், நிலம் தின்னும் பட்சிகள் இரண்டு கவிதை நூல்கள் மருத்துவர் ஒருவருடைய கவிதை நூல் வெளியீடுகளில் பங்கேற்றோம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் அண்டனூர் சுரா,  மேனாள் பொதுச் செயலாளர் காமராஜ் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக பங்கேற்றது. எழுத்தாளர்கள் வாசகர்கள் நண்பர்கள் என பலரையும் கண்டு அலவலாவியது பத்து நாளும் சிறப்பு. எனக்காக வாங்கிய நூல் இரண்டு தான். ஒரு கவிதை தொகுப்பு டால்ஸ்டாயின் சிறுகதைகள்.  பரிந்துரைத்து வாங்கிக் கொடுத்த நூல் அதிகம். பெற்ற நூல்கள் உண்டு. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்