நவீன கல்விக் கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன? ...
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய கல்வி குறித்து 2 பிப்ரவரி 1835
தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே அவர்களின் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
தமிழில்:- சுந்தர் கணேசன் | ஆர். விஜயசங்கர்
வெளியீடு :- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - சென்னை
பக்கம்:- 51 - ₹50
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இணையதளத்தில் இலவசமாக pdf வடிவில் கிடைக்கிறது.
இந்திய கல்விமுறை குறித்து பருந்து பார்வையில் புரிதலும் அதனுடைய பரிமாணங்களை புரிந்து கொண்டு இந்திய சமூகத்தை மேம்படுத்து நோக்கி கல்வி படிநிலைப் பண்பாட்டு தேங்கிக் கிடந்தது எல்லோருக்குமாக மாற்றுவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் நுண்ணறிவும் சிறப்பாக அவருடைய இந்த அறிக்கை காட்டுகிறது.
தமிழ் கூறும் நல் உலகம் ஆசிரியர் பெருமக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் படித்து வேண்டிய ஆவணம். அதை மொழிபெயர்த்து இணைய வழியில் இலவசமாக படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த வெளியீட்டாளர்களுக்கு நன்றியும் அன்பும்.
"தற்போது நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ஆங்கில மொழிக் கல்வியே பெரும் பங்காற்றியுள்ளது. அத்தகைய வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்துதலில் மெக்காலே அறிக்கைக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த அறிக்கையில் சொல்லப்படாத விசயங்களைக் கூறியும், திரித்தும் இவ்வறிக்கைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகின்றன. அதனால், அவ்வறிக்கையினைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டுசெல்லுதல் தேவையாக உள்ளது."
நூலின் அவசியத்தை நம்மால் உணர முடிகிறது. அறிக்கை பொறுப்பு மிக்கது. சாதி படிநிலை கொண்ட சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் கல்வி குறித்தான போக்குகளை அறிக்கையை படம் பிடித்து காட்டுகிறது. ஒரு சுருக்கமான சுதந்திரத்திற்கு முந்தைய கல்வி பார்வையை, அதில் இருக்கும் ஒடுக்குமுறையும், அதிகாரத் அத்துமீறலையும் அதே நேரத்தில் இந்திய இலக்கியங்கள் குறித்தான புரிதலையும், அறிவியலுக்கு எதிராக இருப்பதையும் உள்ளூர் மொழிகளின் இலக்கிய ஆளுமையும் படம் பிடித்துக் காட்டுகிறார். 32 வகைகளையும் பட்டியலிட்டு அன்றைய இந்திய கல்வி குறித்து அவலங்களை பட்டியலிடுகிறார். அதற்கான தீர்வையும் சொல்லி இறுதியாக. இதை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தான் வெளியேறுவதாக கூறுவதும் இந்திய சமூகத்தின் தேவையான அறிவியலின் அவசியத்தையும், புரிதலையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
"ஆனால் ஒருவேளை அரசின் கருத்து ஏற்கெனவே இருக்கக்கூடிய அமைப்பு மாறாமல் தொடரவேண்டும் என்றிருந்தால், இந்தக் குழுத் தலைமை பொறுப்பிலிருந்து நான் விடைபெற்றுக்கொள்ள தாழ்மையுடன் அனுமதி கோருகிறேன். ஏனெனில் நான் அதில் சிறிய அளவில்கூட பயனுள்ளவனாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். நான் தொடர்ந்தால் நான் வெறும் மாயை என்று நினைக்கும் ஒன்றை எதிர்கொள்ள வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். தற்போதைய அமைப்பு உண்மையை முன்னெடுத்து செல்லும் போக்கைத் துரிதப்படுத்தாது. மாறாக, காலாவதியான தவறுகளின் இயற்கையான மரணத்தைத்
32. தள்ளிபோடும் என்றுதான் நான் நினைக்கிறேன். பொதுக் கல்வி வாரியம் என்ற ஒரு கௌரவமான பெயரைத் தாங்குவதற்கு நமக்குத் தற்போது எந்தத் தகுதியும் இல்லை என்று நினைக்கிறேன். அச்சிடப்படும் காகிதங்களைவிட மதிப்பில் குறைந்த புத்தகங்களை அச்சிடுவதிலும், அபத்தமான வரலாற்றையும், மீமெய்யியலையும் Metaphysics], இயற்பியலையும், இறையியலையும் போலியாக ஊக்குவிப்பதிலும், தங்களுடைய பண்டிதத்துவத்தைச் சுமையாகவும் களங்கமாகவும் கருதும்..."
இப்படி தனது உரையை எனது இந்திய சமூகத்தின் மீதான கல்வி குறித்து புரிதலையும் அதற்கு தீர்வையும் முன்வைப்பது அழகு. மொத்த இந்தியாவுக்கும் ஆங்கிலேயர் ஒருவர் அடுத்தகட்டை பாய்ச்சலில் ஏற்படுத்தியதும் எல்லோருக்கும் கல்வியை உருவாக்கியதையும் உண்மையில் மதிக்க, போற்ற வேண்டிய ஒன்று.
காலனிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத முற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது. இந்தியத் துணைக்கண்டத்தின் கல்வி வரலாற்றில் தனக்கென்ற ஒரு தனி இடத்தினை 'மெக்காலே அறிக்கை' கொண்டுள்ளது. மெக்காலே அறிக்கையினைக் குறித்த ஒரு பெரும் பிம்பம் ஏற்கனவே நமது மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடும் விசயங்களைவிட, அவர் குறிப்பிடாத பல விசயங்களை அவர் குறிப்பிட்டதாகக் கூறி பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் மெக்காலே குறிப்பிட்டது என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது முக்கியமானது. இந்த அறிக்கையில் சொல்லப்படாத விசயங்களைக் கூறியும், திரித்தும் இவ்வறிக்கைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகின்றன.
இணையவெளியில் இலவசமாக பதிவேற்றம் செய்த ரோஜா முத்தையா நூலகத்திற்கு நன்றி.
பாலச்சந்திரன்
கருத்துகள்