ராஜ் கௌதமன் - அஞ்சலி
ராஜ் கௌதமனை பல கோனங்களில் பலரும் அணுகி இருந்தாலும், அவரின் மொழிபெயர்ப்பு கலை மிக உயர்வானது. அரிய வகை பண்பாட்டு நூல்களை தமிழுக்கு சமகாலத்தில் வழங்கிய பொறுப்பு மிக்க படைப்பாளி... அவரின்
"அன்பு என்னும் கலை" நல்ல உதாரணம்.
புது தலைப்பாக இருக்கு என்று வாசிக்க துவங்கினேன். புலம் பெயர்ந்த யூத எழுத்தாளர் சோசலிச முகமைகள் சேர்ந்தவர் என்பதால் வாசிக்க துவங்கினேன். புதிய புரிதலும், அன்பு குறித்தான மறுமதிப்பிடை உருவாக்கியது.
"...கலை பற்றிய கற்றறிதல் என்பது, ஒரு உச்சமான அக்கறையாக இருப்பதே அதன் நிபந்தனை..."
"...அன்பெனும் கலையைப் பொறுத்தமட்டில், இக்கலையில் புலமையாளனாக வர ஒருவன் விரும்புகிறபோது, ஒழுங்கு, ஒருமுகப்படுத்துதல், பொறுமை ஆகிய பண்புகளைத் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் காப்பாற்றும்..."
"...குழந்தையிடம் தாய் கொண்ட பொறுப் புணர்வைச் சொல்லலாம். அவள், குழந்தை மீது மிகுந்த கவனமாக இருக்கிறாள்; அதன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களை மிக உன்னிப் பாகப் பார்க்கிறாள்; அவை வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்பே கவனிக்கின்றாள்; தன் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் விழித் தெழுகிறாள்; இந்த அழுகுரலை விடவும் பலமான ஓசை அவளை எழுப்பியிருக்காது. இதற்கெல்லாம் அர்த்தம், குழந்தையின் உயிர் ஓட்டத்தின் புலப்பாடுகள் மீது தாய்க்குக் கவன உணர்ச்சி அதிகம் . அவள் பதட்டமடைவதோ அல்லது கவலைப்படுவதோ இல்லை; எப்போதும் விழிப்பான சமனிலையில் இருக்கிறாள்..."
"...புறவயமாக நோக்கவும், பகுத்தறிவோடு பார்க்கவும் ஆற்றலைப் பெறுவது என்றாலே, அன்பின் கலையை எட்டுவதற்குரிய பாதி தொலைவினைக் கடந்துவிட்டதாகப் பொருள்படும்..."
"...எவ்வாறு ஒவ்வொரு நம்பிக்கை துரோகமும் ஒருவரைப் பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு பெறுகிற பலவீனம் புதிய துரோகத்திற்கு இட்டுச் செல்லுகிறது. நம்பிக்கை துரோகம் ஒரு மோசமான வளையமாகும்..."
இந்திய படிநிலை பண்பாட்டில் அன்பு எவ்வாறு வினையாற்றுகிறது. இந்திய, தமிழக சூழலுக்கு உகந்த எடுத்துக்காட்டுகளுடன் மொழிபெயர்ப்பாளர் அழகுற ஆங்கில கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். அன்பு குறித்தான புதிய புரிதலும், சமூகம் சார்ந்தது என்கின்ற நிறுவுதலை சொல்லக்கூடிய கட்டுரை.
எழுத்தாளர் யூத இன அழிப்பின் காரணமாக அமெரிக்காவில் சென்று குடியேறி பல நூல்களை எழுதியுள்ள
#அன்பு_என்னும்_கலை சிறப்பான ஒன்றாகும்.
இப்படி பல நூல்களை சமூகத்திற்காக ஆய்வு செய்து பிற பிற சமூக விழுமியங்களோடு ஒப்பிட்டு பங்களிப்பு செய்த ராஜ கவுதமனின் எழுத்துகள் & மொழிபெயர்ப்புகள் & ஆய்வுகள் மதிப்புமிக்க அவரின் வாழ்வின் சாட்சியாக இருக்கும்.
சமுக அக்கறை கொண்ட படைப்பாளிக்கு ஆழ்ந்த அஞ்சலி.
கருத்துகள்