இணைய முடக்கம் - விகடனுக்கு விக்கல்


விகடன் இணைய முடக்கம் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக தமிழக பிஜேபி தலைவர் முறையீடு செய்யவும் உடனடியாக இணையம் நிறுத்தப்பட்டிருக்கிறத. 
உடனே விகடன் கருத்து சுதந்திரம் குறித்து ஜனநாயக சக்திகளின் ஆதரவை கோருகிறது. 
வாழ்த்துக்கள் விகடன் வருக வருக. 

அப்புறம் நமக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்...
நவீன டிஜிட்டல் உலகத்துக்கு தகுந்தார் போல புத்தக வடிவமைப்பு வண்ணமயமான ஏற்பாடுகள் என கலக்கி வந்த விகடன் இப்போது 
"இணையவழி பெய்டு சஸ்கிரைப்சன்" என நுழைந்து காலத்திற்கு தகுந்தாற் போல தனது சந்தையை தகுதிப்படுத்திக் கொண்டுள்ளது. 
பசுமை விகடன் பக்தி விகடன் மோட்டார் விகடன் என ஏகத்துக்கும் அடிச்சு தூள் கிளப்புகிறார்கள். 

ஆனந்த விகடன் இணையதளம் முடக்கம் உலகெங்கும் பணம் கட்டி படிக்கிறவர்களை தான் பாதிக்கும். மற்றவர்களுக்கு தான் அது திறப்பதே இல்லையே...

இதில் எங்கு வந்தது கருத்து சுதந்திரம்? தொழில் போட்டி! பேச்சுவார்த்தையில் ஏதோ ஒரு கொஞ்சம் அமவுண்டை மத்திய அரசுக்கு கமிஷனாக கொடுத்து விடுங்கள். 
பிரச்சனை முடிவுக்கு வந்துரும். 

கருத்து சுதந்திரம் 
அது இதுன்னு போட்டு உழட்டாதிங்க Bro...
விக்கல் வந்தால் 
தலைய ரெண்டு தட்டு தட்டி 
தண்ணி குடிச்சா சரியா போகும்

பசிக்கு அலைகிறவனிடம் போய், விக்குது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கிறீர்கள் மிஸ்டர் விகடன்.
உங்க சிரியஸ் நகைச்சுவைக உள்ளது.
"விகடனுக்கு விக்கல்"

பி.கு.;- (செயற்கை நுண்ணறிவு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது...
தொழில்நுட்பத்தை பாருங்கள், விகடன் வெளியிட்ட கார்டூன் படத்தை மறு வெளியீடு செய்ய முயன்றேன். அந்த புகைப்படத்தை காட்ட மாட்டேங்குது. அதனால் அதை நெகட்டிவ் ஆக போட்டோஷாப் செய்து வெளியிடுகிறேன். ஆக எந்த தொழில் நுட்பமும் ஆளுகின்ற பெரு நிறுவனங்களின் நலனை பிரதிபலிக்கிறது. 
செயற்கை நுண்ணறிவும் அவசியம். 
ஆனால் அது யார் கையில் இருக்கிறது என்பதை பொறுத்தே...)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

சிந்து நதி மக்களுக்கானது, அரசுகளுக்கானதல்ல.

த.க.இ.பெ. விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் - திருப்பூர்