இடுகைகள்

உலக திரை...

Zindagi  👈🏾உறுப்பு தானம் குறித்த இந்தி படம். ஒளிப்பதிவு, இயக்கம் சிறப்பு.  பாலஸ்தீனம் நடப்பு ஆவணத் திரை...  👈🏾பாலஸ்தீனம் போர் அவலம்  sorry cinema  👈🏾குறும்படம்  புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களத்தின் 125 நிகழ்வை ஒட்டி சிறப்பு திரையிடல், புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் கவிஞர் இளங்கோ அவர்களின் தேர்வும் திரையிலும் . 'ரீல்ஸ்' எனும் குறும் வீடியோக்களுக்கு பழக்கப்பட்ட நாம், முழு நீள படங்களை பார்த்து ரசித்து இயக்குனரின் படைப்பாற்றலை முழுமையாக புரிந்து கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. தனித்தனியான மின்னணு சமூக வலைதள நுகர்வுக்கு பழக்கப்படும் நாம், வேகமாக கடப்பவர்களாக அரைகுறை செய்திகளை தெரிந்து கொண்டு தத்திகளாக மாறிய இந்த சூழலில், தேர்ந்தெடுத்த சினிமாவின் வாயிலாக முழு படைப்பு கருத்தாக்கத்தை புரிந்து கொள்ள இது போன்ற பொது இடங்களில் கூட்டு திரையிடல்கள் தான் சாத்தியப்படுத்தும். அந்த வகையில் கவனம் மாறாத மூன்று திரையிடல்கள் அருமை. மூன்று படங்களையும் முழுமையாக பார்க்க வைத்த 'வீதி' முயற்சி சிறப்பு. தாவித்தாவி போகும் சமூக ஊட நுகர்வில் முழு திரையினை நுகர்வது படைப்பாளி...

கவிதை

படம்

மரம் இராஜா

படம்
மாத்தூர் ஊராட்சியில் - 480க்கும் குறையாத உள்ளூர் மரங்கள் நடும் விழா. மாத்தூர் ஊராட்சி, குளவாய்பட்டி அருகே ஊர் பொதுக் கண்மாயில் ஊராட்சித் தலைவரின் புதல்வர் சேகர் அவர்களின் மதிப்பு மிக்க முயர்ச்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 60க்கும் குறையாத உள்ளூர் மக்களைக் கொண்டு புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை இராஜா அவர்களின் சீரிய முயற்சியில் மரம் நடம் விழா (குறுங்காடு அமைக்கும் முயற்சி) சிறப்புற நடைபெற்றது.  மேற்கண்ட நிகழ்வில் கிலுவை மரப்போத்துகள் கொண்டு காடு அமையும் பகுதியைச் சுற்றி உயிர்வேலி அமைத்திருந்தது மதிப்பு மிக்க பணி. வேலி அமைத்து தண்ணீர் ஊற்றி பாதுகாப்பான சூழலை உருவாக்கினர். அருகே சன்னாசி கோவில் பழமை மாறாத கோவிலும், குடிநீர் குளமும் அருமை. பி-மாத்தூர் மதிய கரிகுழம்பு சுவையோடு இக்கூட்டு முயற்சியில் நானும் பங்கேற்றேன்.  கூட்டுறவே சூழலியல் சவால்களை சற்று தள்ளி வைக்கும்.  நிகழ்ச்சிக்கு அழைத்த மரம் இராஜா அவர்களுக்கு அன்பும் நன்றியும். இம்மழை பருவத்திற்குள் பொது இடங்களில் பாதுகாப்புடன் மரம் வளர்க்க ம...

கவிதை

படம்

கவிதை